பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இட்டாநகரில் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் பல்வேறு வகையான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். "ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர்களுக்கு 'இது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று பெருமையுடன் கூறுவோம்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் வழங்கப்பட்டன. இந்த சுவரொட்டிகளை அவர்கள் தங்கள் கடைகளில் ஆர்வத்துடன் காட்சிப்படுத்துவதாகக் கூறினர்", என்று திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இன்று சூரியன் உதயமானத்திலிருந்து, ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா தொடங்கியதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் உதயமாகியுள்ளது. இந்தியாவின் அழகிய சூரியன் உதயமாகும் பூமியான அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைக் காட்டிலும் இதற்குச் சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும்.

இட்டாநகரில், உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் நறுமண தேநீர், சுவையான ஊறுகாய், மஞ்சள், அடுமனைப் பொருட்கள், கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர்.

ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கு 'இது உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்று பெருமையுடன் கூறுவோம்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் வழங்கப்பட்டன. அதை அவர்கள் தங்கள் கடைகளில் காட்சிப்படுத்துவதாக உற்சாகத்துடன் தெரிவித்தனர்."
As the sun rose today, so did a new chapter in India’s economic journey, with the start of GST Bachat Utsav. And, what better place to be than Arunachal Pradesh, India’s beautiful Land of the Rising Sun.
— Narendra Modi (@narendramodi) September 22, 2025
In Itanagar, I met local traders and retailers who showcased a vibrant… pic.twitter.com/wqFWGPISkr




