வளர்ந்த பாரதத்திற்கான வளர்ந்த ஹரியானா , இதுவே நமது தீர்மானம்: பிரதமர்
நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதே நமது முயற்சி, தேச நிர்மாணத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஒரு தடையாக மாறிவிடக் கூடாது: பிரதமர்
நம்மால் தொடங்கப்பட்ட பிரதமரின் சூரியக் கூரை மின்சாரத் திட்டத்தின் கீழ் சோலார் பேனல்கள் நிறுவுவதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க முடியும்: பிரதமர்
ஹரியானா விவசாயிகளின் திறனை அதிகரிப்பதே எங்களது முயற்சி: பிரதமர்

ஹரியானா மாநிலம் யமுனா நகரில் நிறைவேற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஹரியானா மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், ஹரியானாவின் புனித பூமிக்கு மரியாதை செலுத்தினார், இது அன்னை சரஸ்வதியின் தோற்றம், மந்திரதேவியின் இருப்பிடம், பஞ்சமுகி ஹனுமான்  மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட கபால்மோச்சன் சாஹிப் ஆகியோரின் இருப்பிடம் என்று அவர் கூறினார். ஹரியானா கலாச்சாரம், பக்தி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சங்கமம் என்று அவர் விவரித்தார். பாபாசாஹேப் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், பாபா சாகேப்பின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உத்வேகம் ஆகியவற்றை எடுத்துரைத்து, அவை இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றார்.

"யமுனாநகர் ஒரு நகரம் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை நிலப்பரப்பின் ஒரு முக்கிய பகுதியாகும், ஒட்டுப் பலகை முதல் பித்தளை மற்றும் எஃகு வரையிலான தொழில்களுடன் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்த நகர் வழங்குகிறது" என்று கூறிய திரு மோடி, இப்பகுதியின் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார், ரிஷி வேத வியாசரின் புனித நிலமான கபால் மோச்சன் மேளா மற்றும் குரு கோபிந்த் சிங்கின் ஆயுதங்கள் இருந்த இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். யமுனா நகருடனான தமது தனிப்பட்ட தொடர்பைப் பகிர்ந்து கொண்ட அவர், ஹரியானாவின் பொறுப்பாளராக இருந்தபோது பஞ்ச்குலாவிலிருந்து அடிக்கடி வருகை புரிந்ததை நினைவு கூர்ந்தார். அவர் ஒத்துழைத்த அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, பிராந்தியத்தில் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் நீடித்த பாரம்பரியத்தை அங்கீகரித்தார்.

 

தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் ஹரியானா வளர்ச்சியின் இரட்டை வேகத்தை சந்தித்து வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், வளர்ந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த ஹரியானாவுக்கான உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார். ஹரியானா மக்களுக்கு சேவை செய்வதற்கும், அதிக வேகம் மற்றும் அளவில் பணியாற்றுவதன் மூலம் அதன் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் அரசின் அர்ப்பணிப்பை அவர் எடுத்துரைத்தார். இன்று தொடங்கி வைக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் இந்த உறுதிப்பாட்டிற்கு சான்றாக திகழ்கின்றன என்று குறிப்பிட்ட அவர், இந்தப் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்காக ஹரியானா மக்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பாபாசாஹேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் தமது அரசின் உறுதிப்பாடு குறித்து பெருமிதம் தெரிவித்த திரு மோடி, தொழில் வளர்ச்சி என்பது சமூக நீதிக்கான பாதை என்ற பாபாசாகேப்பின் நம்பிக்கையை வலியுறுத்தினார். பாபாசாகேப் இந்தியாவில் சிறு நில உடைமையாளர்களின் பிரச்சினையை அடையாளம் கண்டதோடு போதுமான விவசாய நிலங்கள் இல்லாத தலித்துகள் தொழில்மயமாக்கலால் மிகவும் பலனடைவார்கள் என்றும் வலியுறுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார். தொழிற்சாலைகள் தலித்துகளுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்ற பாபாசாகேப்பின் தொலைநோக்குப் பார்வையை அவர் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் தொழில்மயமாக்கல் முயற்சிகளில் பாபாசாகேப்பின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.  நாட்டின் முதல் தொழில்துறை அமைச்சர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியுடன் இணைந்து அவர் பணியாற்றியதையும்  பிரதமர் நினைவுகூர்ந்தார்.

தொழில்மயமாக்கல் மற்றும் உற்பத்திக்கு இடையேயான ஒருங்கிணைப்பை தீனபந்து சவுத்ரி சோட்டு ராம்  கிராமப்புற வளத்திற்கான அடித்தளமாக அங்கீகரித்துள்ளார் என்று குறிப்பிட்ட பிரதமர், விவசாயத்துடன் சிறு தொழில்கள் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் போது, கிராமங்களில் உண்மையான வளம் கிடைக்கும் என்ற சோட்டு ராம் ஜியின் நம்பிக்கையையும் வலியுறுத்தினார். கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த சவுத்ரி சரண் சிங்கும் இதேபோன்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார் என்று குறிப்பிட்ட பிரதமர், தொழில்துறை மேம்பாடு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற சரண் சிங்கின் தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டினார்.

 

'இந்தியாவில் தயாரியுங்கள்'மற்றும் 'தற்சார்பு இந்தியா' ஆகியவற்றின் சாராம்சம் உற்பத்தியை ஊக்குவிப்பதில் உள்ளது என்று வலியுறுத்திய திரு மோடி, இந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பான 'மிஷன் உற்பத்தி' அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது போல, உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தி வருவதை அடிக்கோடிட்டுக் காட்டினார். "தலித்,  பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலை இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, அவர்களுக்கு அத்தியாவசிய பயிற்சி அளிப்பது, வணிக செலவுகளைக் குறைப்பது, எம்.எஸ்.எம்.இ துறையை வலுப்படுத்துவது, நவீன தொழில்நுட்பத்துடன் தொழில்களை தயார்நிலைப்படுத்துவது மற்றும் இந்திய தயாரிப்புகள் உலகத் தரம் வாய்ந்தவை என்பதை உறுதி செய்வது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்" என்று அவர் கூறினார். இந்த இலக்குகளை அடைய தடையில்லா மின்சாரம் வழங்குவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியும், இன்றைய நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், யமுனா நகர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு பயனளிக்கும் தீனபந்து சவுத்ரி சோட்டு ராம் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது அலகுக்கான பணிகள் தொடங்கப்படுவதாகவும் அறிவித்தார். யமுனாநகர் இந்தியாவின் பிளைவுட்டில் பாதியை உற்பத்தி செய்கிறது என்றும், அலுமினியம், தாமிரம் மற்றும் பித்தளை பாத்திரங்களை உற்பத்தி செய்யும் மையமாகவும் உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். யமுனா நகரில் இருந்து பெட்ரோ கெமிக்கல் ஆலை உபகரணங்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று அவர் கூறினார். மின் உற்பத்தியை அதிகரிப்பது இந்தத் தொழில்களுக்கு பயனளிக்கும் என்றும், 'மிஷன் உற்பத்திக்கு' ஆதரவளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் மின்சாரத்தின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், ஒரே நாடு-ஒரே மின் தொகுப்பு, புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய மின்சக்தித் திட்டங்கள், அணுசக்தித் துறையின் விரிவாக்கம் உள்ளிட்ட மின்சாரம் கிடைப்பதை அதிகரிக்கும் அரசின் பன்முக முயற்சிகளை எடுத்துரைத்தார். "மின்சார பற்றாக்குறை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த மின்சார உற்பத்தியை அதிகரிப்பது அவசியம்" என்று வலியுறுத்திய அவர், முந்தைய காலங்களில், தொழிற்சாலைகள், ரயில்வே மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தனது மின்சார உற்பத்தித் திறனை ஏறத்தாழ இரட்டிப்பாக்கியுள்ளது என்றும், தற்போது அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்கிறது என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். தற்போது 16,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஹரியானாவுக்கான மின்சார உற்பத்தியில் தங்கள் அரசு கவனம் செலுத்துவதன் நன்மைகளை அவர் எடுத்துரைத்தார். வரும் ஆண்டுகளில் இந்த திறனை 24,000 மெகாவாட்டாக உயர்த்துவதற்கான இலக்கையும் அவர் அறிவித்தார்.

அனல் மின் நிலையங்களில் முதலீடு செய்வது, மக்கள் தாங்களே மின்சார உற்பத்தி செய்பவர்களாக மாறுவதற்கு அதிகாரம் அளிப்பது என்ற அரசின் இரட்டை அணுகுமுறையை எடுத்துரைத்த திரு மோடி, பிரதமரின் சூர்யக்கூரை மின்சாரத் திட்டம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தனிநபர்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் சூரிய ஒளி தகடுகளைப் பொருத்தவும், மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கவும், உபரியாக உள்ள மின்சாரத்தை விற்று வருவாய் ஈட்டவும் இது உதவும் என்றார். நாடு முழுவதும் 1.25 கோடிக்கும் அதிகமானோர் இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் லட்சக்கணக்கானோர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். வளர்ந்து வரும் சேவை சூழல் அமைப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் விரிவாக்கம் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். சூரியசக்தித் துறை புதிய திறன்களை உருவாக்கி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான எண்ணற்ற வழிகளைத் திறந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 

சிறிய நகரங்களில் சிறு தொழில்களுக்கு போதுமான மின்சாரம் மற்றும் நிதி ஆதாரங்களை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க அரசு லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். சிறு தொழில்கள் வளரும்போது அரசின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அச்சமின்றி விரிவடைய அனுமதிக்கும் வகையில் எம்.எஸ்.எம்.இ.க்களின் வரையறை திருத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார், அதே நேரத்தில் சிறு தொழில்களுக்கு சிறப்பு கடன் அட்டைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் கடன் உத்தரவாத அதிகரிப்பு ஆகியவற்றையும் குறிப்பிட்டார். முத்ரா திட்டத்தின் சமீபத்திய 10 ஆண்டு நிறைவு மைல்கல்லை சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் கீழ் ரூ.33 லட்சம் கோடி பிணையில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார். இந்தத் திட்டத்தின் பயனாளிகளில் 50% க்கும் அதிகமானோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர் வலியுறுத்தினார். இந்திய இளைஞர்களின் பெரிய கனவுகளை நனவாக்க சிறு தொழில்களுக்கு வழிவகை செய்வதில் அரசின் உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.

 

ஒவ்வொரு இந்தியருக்கும் பங்களிக்கும் ஹரியானாவின் விவசாயிகளின் கடின உழைப்பைப் பாராட்டிய பிரதமர், விவசாயிகளின் மகிழ்ச்சி மற்றும் சவால்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதியான கூட்டாளியாக நிற்கின்றன என்று வலியுறுத்தினார். ஹரியானாவின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார், மாநில அரசு இப்போது குறைந்த பட்ச ஆதார விலையில் 24 பயிர்களை கொள்முதல் செய்கிறது என்று குறிப்பிட்டார். ஹரியானாவில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பிரதமரின் பயிர்க்கடன் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும், இத்திட்டத்தின் கீழ் ரூ .9,000 கோடிக்கு மேல் உரிமைகோரல்கள் உள்ளன என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். கூடுதலாக, பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலம் ஹரியானாவின் விவசாயிகளுக்கு ரூ .6,500 கோடி வழங்கப்பட்டுள்ளது, இது அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு மேலும் ஆதரவளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

காலனித்துவ கால நீர் வரியை ரத்து செய்து, கால்வாய் நீருக்கு வரி செலுத்துவதில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் ஹரியானா அரசின் முடிவை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, இந்த வரியின் கீழ் நிலுவையில் உள்ள ரூ .130 கோடிக்கும் அதிகமான தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகளை வழங்குவதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளை அவர் வலியுறுத்தினார். மாட்டுச் சாணம், வேளாண் கழிவுகள் மற்றும் இதர இயற்கைக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரித்து விவசாயிகள் கழிவுகளை மேலாண்மை செய்து வருவாய் ஈட்ட கோபர்தன் திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் நாடு முழுவதும் 500 கோபர்தன் ஆலைகளுக்கான அறிவிப்பும் அடங்கும் என்று அவர் பகிர்ந்து கொண்டார். யமுனா நகரில் புதிய கோபர்தன் ஆலைக்கு அடிக்கல் நாட்டியதை அவர் எடுத்துரைத்தார், இதனால் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ .3 கோடி மிச்சமாகும். தூய்மை மற்றும் நீடித்த தன்மை என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் தூய்மை இந்தியா இயக்கத்திற்கும் கோபர்தன் திட்டம் பங்களித்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

வளர்ச்சிப் பாதையில் ஹரியானாவின் விரைவான முன்னேற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், அயோத்தி தாமுக்கு நேரடி விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டதையும் ஹிசாருக்கு தாம் முன்னதாக மேற்கொண்ட பயணத்தையும் குறிப்பிட்டார். ரேவாரிக்கான புதிய புறவழிச்சாலையையும் அவர் அறிவித்தார், இது சந்தைகள், சந்திப்புகள் மற்றும் ரயில்வே கிராசிங்குகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், வாகனங்கள் நகரத்தை சீராக கடந்து செல்ல அனுமதிக்கும். நான்கு வழி புறவழிச்சாலை தில்லி மற்றும் நர்னால் இடையேயான பயண நேரத்தை ஒரு மணி நேரம் குறைக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்த சாதனைக்காக மக்களை வாழ்த்தினார்.

 

"ஹரியானாவில் தெளிவாகத் தெரிந்ததைப் போல, எங்கள் கட்சி அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது" என்று பிரதமர் கூறினார், அங்கு அரசு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. பொதுமக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்ததாக மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் இதை அவர் வேறுபடுத்தினார். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் முடங்கியுள்ள இமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை அவர் சுட்டிக்காட்டினார். கர்நாடகாவில், தற்போதைய ஆட்சியின் கீழ் மின்சாரம், பால், பேருந்து கட்டணங்கள் மற்றும் விதைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை அவர் எடுத்துரைத்தார். சமூக ஊடகங்களில் காணப்பட்டதைப் போல, கர்நாடகாவில் தற்போதைய அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் அதிருப்தி கொண்டிருப்பதைக் குறிப்பிட்ட அவர், ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுட்டிக்காட்டினார், முதலமைச்சரின் நெருங்கிய சகாக்கள் கூட ஊழலில் கர்நாடகா முதலிடத்தில் இருப்பதை ஒப்புக் கொண்டனர்.

தெலுங்கானாவில் தற்போதைய அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை புறக்கணித்து, காடுகளை புல்டோசர் மூலம் அழித்து, இயற்கைக்கும் வனவிலங்குகளுக்கும் தீங்கு விளைவிப்பதில் கவனம் செலுத்துவதாக திரு மோடி விமர்சித்தார். அவர் இரண்டு ஆட்சி மாதிரிகளை வேறுபடுத்தி, தமது கட்சியின் மாதிரி உண்மையானது மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும், அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஏமாற்றுத்தனமானவை மற்றும் அதிகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்றும் விவரித்தார். யமுனாநகரில் நடந்து வரும் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்,

பைசாகியின் முக்கியத்துவத்தையும், ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 106-வது நினைவு தினத்தையும் நினைவுகூர்ந்த பிரதமர், தங்கள் இன்னுயிரை ஈந்த தேசபக்தர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமையை எடுத்துரைத்தார். படுகொலையின் மற்றொரு அம்சத்தை அவர் வலியுறுத்தினார் – மனிதநேயம் மற்றும் தேசத்திற்காக நிற்கும் அசைக்க முடியாத உணர்வுக்கு, திரு சங்கரன் நாயரை  எடுத்துக்காட்டாகக் கூறினார். புகழ்பெற்ற வழக்கறிஞரும், பிரிட்டிஷ் அரசின் உயர் அதிகாரியுமான சங்கரன் நாயர் ராஜினாமா செய்ய முடிவு செய்து அந்நிய ஆட்சியின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்பினார் என்று அவர் மேலும் பகிர்ந்து கொண்டார். ஜாலியன் வாலாபாக் வழக்கை தனியாளாக எதிர்த்துப் போராடி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தை அசைத்து, நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வைத்தார். சங்கரன் நாயரின் நடவடிக்கைகள் "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று விவரித்த அவர், பஞ்சாபில் நடந்த ஒரு படுகொலைக்காக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக எவ்வாறு நின்றார் என்பதைக் காட்டிய அவர், இந்த ஒற்றுமை மற்றும் எதிர்ப்பு உணர்வுதான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் உள்ள உண்மையான உத்வேகம் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் உந்து சக்தியாக உள்ளது என்றும்  குறிப்பிட்டார்.

 

சங்கரன் நாயரின் பங்களிப்புகளைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், சமூகத்தின் தூதர்களான ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர்ச்சியான முயற்சிகளை வலியுறுத்தினார். கூட்டு முயற்சிகள் ஹரியானாவை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஹரியானா முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி, மத்திய அமைச்சர்கள் திரு. மனோகர் லால், திரு. ராவ் இந்தர்ஜித் சிங், திரு. கிரிஷன் பால் குர்ஜார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

இந்தப் பிராந்தியத்தில் மின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், கடைசி மைல் வரை மின்சாரம் சென்றடைய வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடனும், யமுனா நகரில் தீனபந்து சோட்டு ராம் அனல் மின் நிலையத்தின் 800 மெகாவாட் திறன் கொண்ட நவீன அனல் மின் பிரிவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சுமார் 8,470 கோடி ரூபாய் மதிப்புள்ள 233 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அலகு, ஹரியானாவின் எரிசக்தி தன்னிறைவை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கும்.

 

இயற்கை வேளாண்மை வளங்களை துப்புரவு செய்தல் என்ற கோபர்தான் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், யமுனா நகரில் உள்ள முகராப்பூரில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை ஆண்டுக்கு 2,600 மெட்ரிக் டன் உற்பத்தி திறனைக் கொண்டிருக்கும், மேலும் தூய்மையான எரிசக்தி உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்கும் அதே வேளையில், பயனுள்ள கரிம கழிவு மேலாண்மைக்கும் உதவும்.

 

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ .1,070 கோடி மதிப்புள்ள 14.4 கி.மீ ரேவாரி புறவழிச்சாலை திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இது ரேவாரி நகரத்தின் நெரிசலைக் குறைக்கும், டெல்லி-நர்னால் பயண நேரத்தை சுமார் ஒரு மணி நேரம் குறைக்கும், மேலும் இப்பகுதியில் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை அதிகரிக்கும்.

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How NPS transformed in 2025: 80% withdrawals, 100% equity, and everything else that made it a future ready retirement planning tool

Media Coverage

How NPS transformed in 2025: 80% withdrawals, 100% equity, and everything else that made it a future ready retirement planning tool
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 20, 2025
December 20, 2025

Empowering Roots, Elevating Horizons: PM Modi's Leadership in Diplomacy, Economy, and Ecology