இன்று (19.02.2026) இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எளிதில் அணுகுதல், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றுக்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டினார்.
தமது உரையின் போது, மாற்றுத்திறனாளிகள் தங்களது செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடுவதை உறுதி செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த சைகை மொழி அங்கீகார அடிப்படையிலான உடனடி மொழிபெயர்ப்பு செயல்படுத்தப்படுவதைச் சுட்டிக் காட்டினார். ஒவ்வொரு நபரையும் இணைக்கும் பாலமாகத் திகழும் புதுமைகளை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டில் எனது உரையின்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சைகை மொழி அடிப்படையில் உடனடி மொழிபெயர்ப்பு வசதி இடம்பெற்றிருந்தது. செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை எளிதில் அணுகும் தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றுக்கான எங்கள் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. தொழில்நுட்பமும் பொது விவாதங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் எப்போதும் தொடர்ந்து பாடுபடுவோம்."
My speech at the AI Impact Summit included real-time translation in sign language using AI. It reflects our commitment to accessibility and inclusion when it comes to AI. We will always work to ensure that technology and public discourse are accessible to persons with…
— Narendra Modi (@narendramodi) February 19, 2026


