அரசுத் திட்டங்களில் பெண்களுக்கு அதிகாரமளிப்பது ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது - பிரதமர்
இந்தியாவின் மகளிர் சக்தியின் சாதனைகளும் விருப்பங்களும் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன - பிரதமர்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் மகளிர் சக்தியின் வலிமை, உறுதி, சாதனைகள் ஆகியவற்றுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர், இந்தியாவின் முன்னேற்றத்தை வடிவமைப்பதில் அவர்களின் வளர்ந்து வரும் பங்கைப் பாராட்டியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் பெண்கள் உறுதியுடனும், படைப்பாற்றலுடனும், ஒப்பிடமுடியாத ஆர்வத்துடனும் பங்களித்து வருவதாகவும், அவர்களின் சாதனைகள் தேசத்தை ஊக்குவிக்கின்றன என்றும், அதே நேரத்தில் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான கூட்டு உறுதியை வலுப்படுத்துகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்துள்ள பிரதமர், பெண்களுக்கு அதிகாரமளிப்பது அரசின் பல திட்டங்கள், முன்முயற்சிகளில் மையமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பெண்ணும் தனது முழு திறனை உணர்ந்து இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு பங்களிக்க உதவும் வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது என்று அவர் மீண்டும் கூறியுள்ளார்.

இந்தியாவின் மகளிர் சக்தியின் சாதனைகள் தேசத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு ஆதாரமாகவும், தேசத்தை கட்டியெழுப்புவதில் பெண்கள் ஆற்றும் சிறந்த பங்கை சக்திவாய்ந்த முறையில் நினைவூட்டுவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா தொடர்ந்து முன்னேறும்போது, பெண்களின் விருப்பங்களும் பங்களிப்புகளும் நாட்டின் கூட்டுப் பயணத்தை வலுவான, வளமான தேசத்தை நோக்கி வழிநடத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், கடந்த பத்து ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கை எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதற்கான ஒரு பார்வையையும் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“சர்வதேச மகளிர் தினத்தன்று, நமது மகளிர் சக்திக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து துறைகளிலும் பெண்கள், இந்தியாவின் முன்னேற்றத்தை உறுதியுடனும், படைப்பாற்றலுடனும், சிறந்த வைராக்கியத்துடனும் வடிவமைக்கின்றனர். அவர்களின் சாதனைகள் நமது தேசத்தை ஊக்குவிக்கின்றன. மேலும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டு உறுதியை வலுப்படுத்துகின்றன.

பெண்களுக்கு அதிகாரமளிப்பது எங்கள் பல்வேறு திட்டங்கள், முயற்சிகளின் மையமாக உள்ளது. ஒவ்வொரு பெண்ணும் தனது முழு திறனை உணர்ந்து இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு பங்களிக்க உதவும் வாய்ப்புகளை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”

 

"இந்தியாவின் மகளிர் சக்தியின் சாதனைகள் பெருமைக்குரியவையாகவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிறந்த பங்கை சக்திவாய்ந்த முறையில் நினைவூட்டுவதாகவும் உள்ளன. இந்தியா தொடர்ந்து முன்னேறும்போது, பெண்களின் விருப்பங்களும் பங்களிப்புகளும் வலுவான, வளமான தேசத்தை நோக்கிய நமது கூட்டுப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்தும்.”

 

"கடந்த பத்தாண்டுகளில் பெண்களின் வாழ்க்கை சிறப்பாக மாற்றமடைந்துள்ளது...”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian economy set for robust growth, stronger markets after May 1: WTC

Media Coverage

Indian economy set for robust growth, stronger markets after May 1: WTC
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 22, 2026
April 22, 2026

One Nation, One Vision: PM Modi Delivers Healthcare Revolution, Security Revenge & Economic Self-Reliance