பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உங்களுடைய அன்பு தான் நாட்டிற்காக சேவையாற்ற தமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“திரு ஓம் பிர்லா அவர்களே, உங்கள் நல்வாழ்த்துகளுக்கு நன்றி. நாட்டு மக்களின் நலனுக்காகவும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் தமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். உங்களுடைய அன்பு நாட்டிற்காக சேவையாற்ற எனக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.”
शुभकामनाओं के लिए आपका बहुत-बहुत आभार @ombirlakota जी। देशवासियों के कल्याण और राष्ट्र के समग्र विकास के लिए हमारी सरकार अपने प्रयासों में कोई कोर-कसर नहीं छोड़ने वाली है। यह आप सबका स्नेह ही है, जो मुझे निरंतर देशसेवा में जुटे रहने के लिए प्रेरित करता रहता है। https://t.co/QZJJONUj2a
— Narendra Modi (@narendramodi) September 17, 2025



