ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கள் 100-வது பதக்கத்தை வென்றதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வரலாற்று சாதனைக்காக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவு அமைப்புக்கும்  அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்கள்! ஈடு இணையற்ற மகிழ்ச்சியின் தருணம். இந்த வெற்றி நமது விளையாட்டு வீரர்களின் திறமை, கடின உழைப்பு மற்றும் உறுதியின் விளைவாகும்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை நம் இதயங்களை மிகுந்த பெருமிதத்தால் நிரப்புகிறது. நமது வெல்வதற்கரிய  விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் ஆதரவு அமைப்புக்கும் எனது ஆழ்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றன. நமது இளைஞர்களுக்கு முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவூட்டுகின்றன."        

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Built for tomorrow's wars: How India's new turbojet engine changes the missile and drone equation

Media Coverage

Built for tomorrow's wars: How India's new turbojet engine changes the missile and drone equation
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026