கயானா நாட்டின் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற அதிபர் திரு இர்ஃபான் அலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “வலிமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்களிடையேயான உறவுகளில் அடித்தளமிட்டிருக்கும் இந்தியா-கயானா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருக்கிறேன்”, என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“பொதுத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற அதிபர் இர்ஃபான் அலிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலிமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்களிடையேயான உறவுகளில் அடித்தளமிட்டிருக்கும் இந்திய-கயானா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”
@presidentaligy.
Heartiest congratulations to President Irfaan Ali on the resounding success in General and Regional elections. I look forward to further strengthening India-Guyana partnership anchored in strong and historical people-to-people ties.@presidentaligy
— Narendra Modi (@narendramodi) September 6, 2025


