மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள ஜெஜூரி-மோர்கான் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ₹50,000-மும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
"மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள ஜெஜூரி-மோர்கான் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்."
Deeply saddened by the loss of lives due to a road accident on the Jejuri-Morgaon road in Pune, Maharashtra. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) June 19, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each…


