முன்னாள் மத்திய அமைச்சர் திரு சமன் லால் குப்தா அவர்களின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ஏராளமான சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக திரு சமன் லால் குப்தா அவர்கள் நினைவில் கொள்ளப்படுவார். ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட அவர், ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்குக் கூடுதல் வலிமை சேர்த்தார். அவரது மறைவினால் ஆழ்ந்த துயரடைந்தேன். இத்தகைய சோக தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி!”, என்று கூறியுள்ளார்.
Shri Chaman Lal Gupta Ji will be remembered for numerous community service efforts. He was a dedicated legislator and strengthened the BJP across Jammu and Kashmir. Pained by his demise. My thoughts are with his family and supporters in this hour of grief. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 18, 2021


