பகிர்ந்து
 
Comments
பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளைக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்கிய இந்திய மக்களுக்கு பிரதமர் பாராட்டு
பிஎம் கேர்ஸ் அவசர கால மற்றும் துயர் தணிப்பு சூழல்களுக்கு உதவும் நீண்டகால கண்ணோட்டத்துடன் பணியாற்றுகிறது, நிவாரண உதவி வழங்குவதுடன் நில்லாமல் திறன் கட்டமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே டி தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் திரு கரியா முண்டா, திரு ரத்தன் டாடா ஆகியோர் பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்

20.09.2022 அன்று நடைபெற்ற பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடிதலைமை வகித்தார்.

4345 குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் உட்பட, பிஎம் கேர்ஸ் நிதியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் குறித்த விளக்கக்காட்சி வழங்கப்பட்டது. நாட்டிற்கு ஒரு முக்கியமான நேரத்தில் பிஎம் கேர்ஸ் நிதி ஆற்றிய பங்கை உறுப்பினர்கள் பாராட்டினர். பிஎம் கேர்ஸ் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்கிய  நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையானது, நிவாரண உதவிகள் மூலம் மட்டுமின்றி, துயர்தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், அவசரநிலை மற்றும் இடர்பாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப திறம்பட செயல்படும்  நீண்ட கண்ணோட்டத்தை கொண்டுள்ளதாக கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையில் இணைந்த உறுப்பினர்களை பிரதமர் வரவேற்றார்.

கூட்டத்தில் பிஎம் கேர்ஸ் நிதியின் உறுப்பினர்கள், அதாவது மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் மற்றும் பிஎம் கேர்ஸ் நிதியின் புதிதாக பரிந்துரைக்கப்பட்ட பின்வரும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்:

  • நீதிபதி கே டி தாமஸ், முன்னாள் நீதிபதி, உச்சநீதிமன்றம்,
  • திரு கரியா முண்டா, முன்னாள் துணை சபாநாயகர்,
  • திரு ரத்தன் டாடா, முன்னாள் தலைவர், டாடா சன்ஸ்

 பிஎம் கேர்ஸ் நிதியின் ஆலோசனை குழுவுக்கு பின்வரும் பிரபல பிரமுகர்களை நியமிக்க அறக்கட்டளை தீர்மானித்துள்ளது:

  • திரு ராஜீவ் மெஹ்ரிஷி, முன்னாள் இந்திய தலைமை கணக்குத்துறை அதிகாரி
  • திருமதி சுதா மூர்த்தி, முன்னாள் தலைவர், இன்போசிஸ் அறக்கட்டளை
  • திரு ஆனந்த் ஷா, இணை நிறுவனர், டெக்பார் இந்தியா மற்றும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி, இண்டிகார்ப்ஸ் மற்றும் பிரமல் அறக்கட்டளை.

புதிய உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்கள் பங்கேற்புடன் பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை மேலும் விரிவான நீண்ட கால கண்ணோட்டத்துடன் செயல்படும் என்று பிரதமர் கூறினார். பொது வாழ்க்கையில் அவர்களது நீண்ட கால அனுபவம், பொது மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதில், மேலும் வீரியத்துடன்  நிதி வழங்க வகைசெய்யும்.

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
FPIs pump in over ₹36,200 cr in equities in Nov, continue as net buyers in Dec

Media Coverage

FPIs pump in over ₹36,200 cr in equities in Nov, continue as net buyers in Dec
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 3, 2022
December 03, 2022
பகிர்ந்து
 
Comments

India’s G20 Presidency: A Moment of Pride For All Indians

India Witnessing Transformative Change With The Modi Govt’s Thrust Towards Good Governance