ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இஷா சிங்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியுள்ளதாவது:
"10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இஷா சிங்கை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவரது வெற்றிக்கு அவரது அர்ப்பணிப்பு, கவனம் செலுத்தும் பயிற்சி, அசைக்க முடியாத உறுதி ஆகியவையே காரணம்’’.
Proud of @singhesha10 for winning a Silver Medal in the 10m Air Pistol Women’s event! Her success at the Asian Games is due to her commitment, focused training and unwavering determination. pic.twitter.com/txNd7SHhPe
— Narendra Modi (@narendramodi) September 29, 2023


