பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:

(i) டொமினிகாவின் அதிபர் சில்வானி பர்ட்டன் மற்றும் டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்;
(ii) சூரிநாம் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி;
(iii) டிரினிடாட் & டொபாகோ பிரதமர் டாக்டர் கீத் ரௌலி;
(iv) பார்படாஸ் பிரதமர்  மியா அமோர் மோட்லி
(v) ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர்  திரு. காஸ்டன் பிரவுன் அவர்களே;
(vi) கிரனடா பிரதமர்  டிக்கன் மிட்செல்;
(vii) பஹாமாஸ் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பிலிப் எட்வர்ட் டேவிஸ், கே.சி.
(viii) செயின்ட் லூசியாவின் பிரதமர் பிலிப் ஜே பியர்
(ix) புனித வின்சென்ட் பிரதமர்  ரால்ப் எவரார்டு கோன்சால்வ்ஸ்
(x) பஹாமாஸ் பிரதமர்  திரு. பிலிப் எட்வர்ட் டேவிஸ்
(xi) பெலிஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்சிஸ் ஃபொன்சேகா
(xii) ஜமைக்காவின் வெளியுறவு அமைச்சர்  கமினா ஸ்மித்
(xiii) செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் வெளியுறவு அமைச்சர்  டாக்டர் டென்சில் டக்ளஸ்

கரிகாம் புயலால் ஏற்பட்ட அழிவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த பிரதமர், கரிகாம் மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட சவால்கள் மற்றும் மோதல்களால் உலகின் தென் நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், கரிகாம் நாடுகளுக்கு நம்பகமான கூட்டாளியாக இந்தியா தனது உறுதியான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். கரிகாம் நாடுகளின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பு ஆதரவு அமைந்தது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

 

3. இந்தியாவின் நெருங்கிய வளர்ச்சி கூட்டாண்மை மற்றும் இந்த மண்டலத்துடன் மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகளை மேலும் கட்டமைக்க, கரிகாம் நாடுகளுக்கு ஏழு முக்கிய துறைகளில்  உதவ தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த பகுதிகள் கரிகாம் சுருக்கத்துடன் நன்கு பொருந்துவதுடன், இந்தியாவிற்கும் குழுவிற்கும் இடையிலான நட்பின் நெருக்கமான பிணைப்பை விரிவுபடுத்துகின்றன. அவை:

● C: திறன் மேம்பாடு
● A: விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு
● R: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் காலநிலை மாற்றம்
● I: கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம்
● C: கிரிக்கெட் மற்றும் கலாச்சாரம்
● O: பெருங்கடல் பொருளாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு
● M: மருத்துவம் மற்றும் சுகாதாரம்

திறன் வளர்ப்பைப் பொறுத்தவரை, அடுத்த ஐந்தாண்டுகளில் கரிகாம் நாடுகளுக்கு கூடுதலாக ஆயிரம் ஐடிஇசி இடங்களை பிரதமர் அறிவித்தார். இந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ள உணவுப் பாதுகாப்புத் துறையில், ஆளில்லா விமானங்கள், டிஜிட்டல் விவசாயம், பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் மண் பரிசோதனை ஆகிய வேளாண் துறையில் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியாவின் அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். கரீபியன் பகுதியில் சுற்றுலாவுக்கு சர்காசம் கடற்பாசி பெரும் சவாலாக இருப்பதால், கடற்பாசியை உரமாக மாற்ற உதவுவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றத் துறைகளில் இந்தியாவுக்கும் கரிகாம் அமைப்புக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த அழைப்பு விடுத்த பிரதமர், சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி, லைஃப்இ இயக்கம் மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற இந்தியா தலைமையில் மேற்கொள்ளப்படும் உலகளாவிய முன்முயற்சிகளில் உறுப்பினராக சேருமாறு கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பேசிய பிரதமர், கரிகாமில் உள்ள நாடுகளுக்கு இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, கிளவுட் அடிப்படையிலான டிஜி லாக்கர் மற்றும் யுபிஐ மாதிரிகளை வழங்க முன்வந்தார்.

7. கரிகாம் மற்றும் இந்தியா நெருங்கிய கலாச்சார மற்றும் கிரிக்கெட் உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. கரிகாம் நாடுகளைச் சேர்ந்த 11 இளம் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதாக பிரதமர் அறிவித்தார். மக்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்த, அடுத்த ஆண்டு உறுப்பு நாடுகளில் "இந்திய கலாச்சார நாட்களை" ஏற்பாடு செய்வதாகவும் அவர் முன்மொழிந்தார்.

8. கடல்சார் பொருளாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த, கரிபியன் கடலில், கடல்சார் வரைபடம் மற்றும் நீரியல் வரைவியல் ஆகியவற்றில் கரிகாம் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

9. தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதார சேவையில் இந்தியாவின் வெற்றியை பிரதமர் எடுத்துரைத்தார். மக்கள் மருந்தகங்கள் மூலம் பொதுவான மருந்துகள் கிடைக்கச் செய்வதற்கான இந்தியாவின் மாதிரியை அவர் வழங்கினார். கரிகாம் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த யோகா நிபுணர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

10. இந்தியா மற்றும் கரிகாம் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமரின் ஏழு அம்சத் திட்டத்தை கரிகாம் தலைவர்கள் வரவேற்றனர். உலகின் தெற்குப் பகுதிக்கு இந்தியாவின் தலைமையையும், வளரும் சிறிய தீவு நாடுகளின் பருவநிலை நீதிக்கான வலுவான ஆதரவையும் அவர்கள் பாராட்டினர். உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை என்று கூறிய அவர்கள், இந்த விஷயத்தில் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளனர்.

11. உலகின் தெற்கத்திய நாடுகளின் கவலைகளுக்கு குரல் கொடுக்க இந்தியா உறுதியாக உள்ளது என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். அடுத்த இந்தியா-கரிகாம் உச்சிமாநாடு இந்தியாவில் நடத்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார். உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கான் மிட்செல் மற்றும் கரிகாம் செயலகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

12. தொடக்க மற்றும் நிறைவு அமர்வுகளில் பிரதமர் ஆற்றிய உரையை பின்வரும் இணைப்புகளில் காணலாம்:

2-வது இந்தியா-கரிகாம் உச்சி மாநாட்டில் தொடக்க உரை

2-வது இந்தியா-கரிகாம் உச்சி மாநாட்டில் நிறைவுரைகள்

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s Economy Offers Big Opportunities In Times Of Global Slowdown: BlackBerry CEO

Media Coverage

India’s Economy Offers Big Opportunities In Times Of Global Slowdown: BlackBerry CEO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the loss of lives due to the collapse of a wall in Visakhapatnam, Andhra Pradesh
April 30, 2025
PM announces ex-gratia from PMNRF

Prime Minister Shri Narendra Modi today condoled the loss of lives due to the collapse of a wall in Visakhapatnam, Andhra Pradesh. He announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased and Rs. 50,000 to the injured.

The PMO India handle in post on X said:

“Deeply saddened by the loss of lives due to the collapse of a wall in Visakhapatnam, Andhra Pradesh. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi”