இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாட்டில் விவசாயிகளிடம்  காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, திரு நரேந்திர சிங் தோமர், குஜராத் ஆளுநர், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

“தற்போது நமது பயணம், சுதந்திரத்தின் 100-வது ஆண்டு வரை புதிய தேவைகள் மற்றும் பதிய சவால்களுக்கு ஏற்றபடி நமது விவசாய முறையைப் பின்பற்ற வேண்டும்”
“ரசாயன ஆய்வுக் கூடத்திலிருந்து நமது வேளாண்மையை மீட்டு இயற்கை ஆய்வுக் கூடத்துடன் இணைக்க வேண்டும், இயற்கை ஆய்வுக் கூடத்தைப் பற்றி நான் பேசும் போது இது முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது”
”பண்டைய வேளாண் அறிவை நாம் மீண்டும் கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும், இந்த நோக்கில் நாம் புதிய ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்” நவீன அறிவியல் கட்டமைப்புக்கு ஏற்ப பழங்கால வேளாண் அறிவை மாற்றி அமைக்க வேண்டும்
”இயற்கை விவசாயத்திலிருந்து அதிகம் பயனடைபவர்கள் நமது நாட்டின் 80% விவசாயிகளாக இருப்பர்”
”இந்தியாவும் அதன் விவசாயிகளும் சூழலுக்கான வாழ்க்கை முறையின் உலகளாவியத் திட்டத்தை வழிநடத்தப் போகின்றனர், உதாரணம் 21-ம் நூற்றாண்டில் வாழ்க்கை”
” இந்த அம்ரித் மகோத்சவத்தில், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தது ஒரு கிராமத்தை இயற்கை விவசாயத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”
“சுதந்திரத்தின் அம்ரித் மகோத்சவத்த

இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாட்டில் விவசாயிகளிடம்  காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, திரு நரேந்திர சிங் தோமர், குஜராத் ஆளுநர், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளிடம் பேசிய பிரதமர், சுதந்திரத்தின் 100-வது ஆண்டு வரை புதிய தேவைகள் மற்றும் புதிய சவால்களின் பயணத்திற்கு ஏற்றபடி விவசாய முறையைப் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.  விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க விதையிலிருந்து வேளாண் சந்தை வரை கடந்த 6  முதல் 7 ஆண்டுகளில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.  மண் பரிசோதனை முதல் நூற்றுக்கணக்கான புதிய விதைகள் வரை, பிரதமரின் கிசான் சம்மான் நிதி முதல் வேளாண் உற்பத்தி செலவில்,  1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்தது வரை, நீர்ப்பாசனம் முதல் கிசான் ரயில் வரை  வேளாண் துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  நாடு முழுவதிலும் இருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

பசுமைப் புரட்சியில் ரசாயனங்கள் மற்றும் உரங்களின் முக்கியப் பங்கை அங்கீகரித்த அவர், அதே நேரத்தில் இதற்கான மாற்றுக்களுக்கு பணியாற்றுவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இறக்குமதி உரங்களின் அபாயம் குறித்து அவர் எச்சரிக்கை விடுத்தார். இது விவசாயிகளின் செலவை அதிகரிப்பதோடு சுகாதாரத்தையும் பாதிக்கவும் வழி வகுக்கும் என்று கூறினார். வேளாண்மை தொடர்பான பிரச்சினைகள் மோசமாவதற்கு முன்பாக நாம் நடவடிக்கை எடுப்பதற்கு இதுதான் சரியான நேரம் என பிரதமர் வலியுறுத்தினார். “விவசாயத்தை ரசாயனக் கூடத்திலிருந்து மீட்டு இயற்கை ஆய்வுக் கூடத்துடன் நாம் இணைக்க வேண்டும்.  இயற்கை ஆய்வுக் கூடம் பற்றி நாம் பேசும்போது அது முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது” என பிரதமர் கூறினார்.   தற்போது அதிநவீன மயத்திற்கு உலகம் மாறும்போது, அது மீண்டும் அடிப்படையை நோக்கி செல்கிறது என பிரதமர் கூறினார்.  நாம் மீண்டும் பழைய முறையுடன் இணைகிறோம். இதை விவசாய நண்பர்கள் நன்கு புரிந்து கொள்வர்.  வேர்களில் அதிக தண்ணீர் பாய்ச்சும் போது பயிர் நன்கு வளர்கிறது.

பழங்கால வேளாண் அறிவை நாம் மீண்டும் கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.  இந்த நோக்கில் நாம் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நவீன அறிவியல் கட்டமைப்புக்கு ஏற்ப நமது பழங்கால வேளாண் அறிவை மாற்ற வேண்டும் என பிரதமர் கூறினார்.  பழங்கால வேளாண் அறிவு குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.  நிலத்தில் வைக்கோல் எரிக்கும் போக்குக் குறித்துப் பேசிய பிரதமர், நிலத்தை தீயிட்டு எரிப்பதால் அதன் விளைச்சல் திறன் பாதிக்கும் என நிபுணர்கள் கூறியும் வைக்கோல் எரிப்புப் போக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

ரசாயனம் இல்லை என்றால் பயிர்கள் நன்றாக வளராது என்ற கருத்தும் நிலவுகிறது என அவர் கூறினார்.  ஆனால் உண்மை முற்றிலும் எதிர்மறையாக இருக்கிறது. முன்காலத்தில் எந்த ரசாயனமும் இல்லை ஆனால் அறுவடை நன்றாக இருந்தது.  மனித வளர்ச்சியின் வரலாறு இதைக் கண்கூடாகக் கண்டுள்ளது. புதிய விஷயங்களை கற்பதோடு நமது விவசாயத்தை அழிக்கும் தவறான நடைமுறைகளை நாம் தவிர்க்க வேண்டும் என அவர் கூறினார்.   இந்த விஷயத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

இயற்கை விவசாயத்திலிருந்து அதிகம் பயனடைபவர்களில்  சுமார் 80% பேர், இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளாக இருப்பர். பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களுக்கு அதிகம் செலவு செய்கின்றனர். அவர்கள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பினால் அவர்களது நிலை மேம்படும் என்று பிரதமர் கூறினார்.

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொரு மாநில அரசும் முன்வரவேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். இந்த அம்ரித் மகோத்சவத்தில்  ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தது ஒரு கிராமத்தை இயற்கை விவசாயத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் கூறினார்.

சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். உதாரணம் - வாழ்க்கை ஒரு உலகளாவியத் திட்டம். இதுதொடர்பாக 21-ம் நூற்றாண்டில் இந்தியாவும் அதன் விவசாயிகளும் வழி நடத்த உள்ளனர். சுதந்திரத்தின் அம்ரித் மகோத்சவத்தில் பாரதத்தாயின் நிலத்தை ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளிலிருந்து விடுவிக்க நாம் உறுதியேற்க வேண்டும் என மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். 

இயற்கை வேளாண்மை குறித்த தேசிய மாநாட்டை குஜராத் அரசு நடத்தியது.  மூன்றாவது உச்சி மாநாடு டிசம்பர் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பலர், மாநிலங்களில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில், வேளாண் அறிவியல் மையங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

 

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s digital landscape shows potential to add $900 billion by 2030, says Motilal Oswal’s report

Media Coverage

India’s digital landscape shows potential to add $900 billion by 2030, says Motilal Oswal’s report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi participates in Vijaya Dashami programme in Delhi
October 12, 2024

 The Prime Minister Shri Narendra Modi participated in a Vijaya Dashami programme in Delhi today.

The Prime Minister posted on X:

"Took part in the Vijaya Dashami programme in Delhi. Our capital is known for its wonderful Ramlila traditions. They are vibrant celebrations of faith, culture and traditions."