Prime Minister releases a commemorative coin and postage stamp on the occasion
“The country is moving ahead as per the teachings of the revered Gurus”
“India’s freedom from hundreds of years of slavery cannot be separated from its spiritual and cultural journey”
“In front of Aurangzeb's tyrannical thinking Guru Tegh Bahadur ji, acted as  'Hind di Chadar'”
“We feel blessings of Guru Tegh Bahadur ji everywhere in the aura of 'New India’”
“We see 'Ek Bharat' everywhere in the form of the wisdom and blessings of Gurus”
“Today's India strives for peace with complete stability even in the midst of global conflicts, and India is equally firm for defence and security of the country”

புதுதில்லி செங்கோட்டையில் ஸ்ரீ குரு தேஜ் பகதூரின்  400-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பிரதமர்  திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களை பிரதமர்  பிரார்த்தித்தார். இந்த நிகழ்வில் சீக்கியத் தலைவர்களால் பிரதமர் கவுரவிக்கப்பட்டார். நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.  

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், புனிதமான குருக்களின் போதனைகளால் நாடு வழிநடத்தப்படுவதாக கூறினார்.  குருக்களின் பாதங்களில் அவர், தலைவணங்கினார். குரு தேஜ் பகதூர் அவர்களின் தியாகத்திற்கு  சாட்சியமாக வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை இருப்பதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்தப் பின்னணியில் இன்றைய நிகழ்ச்சி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் மாபெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

பல நூறு ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்தியாவின் விடுதலையை அதன் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பயணத்திலிருந்து பிரிக்க இயலாது என்பதை பிரதமர் வலியுறுத்தினார். மத அடிப்படை வாதத்தை நினைவுப்படுத்திய பிரதமர், தேஜ் பகதூரின் காலத்தில் மதத்தின் பெயரால், வன்முறைகள் நிகழ்ந்ததை சுட்டிக்காட்டினார். அந்த சமயத்தில் இந்தியாவின் அடையாளத்தை பாதுகாக்க குரு தேஜ் பகதூர் அவரிடமிருந்து மகத்தான நம்பிக்கை வெளிப்பட்டது.  அவுரங்கசீபின் முன்னால் அவர் ஒரு மலை போல் நின்று எதிர்கொண்டார். இந்தி்யாவின் கவுரவத்தை பாதுகாக்கவும், கலாச்சாரம், மதிப்பு, மரியாதை ஆகியவற்றுக்காக தியாகம் செய்யவும், ஈர்ப்பு சக்தியாக தேஜ் பகதூரின் தியாகம் அமைந்தது.

சீக்கிய கலாச்சாரத்தை கொண்டாடுவதற்கு  அரசின் முயற்சிகளை தொட்டுக் காட்டிய பிரதமர், கடந்த ஆண்டே டிசம்பர் 26 அன்று   வீர்பால் தினம் கொண்டாட அரசு முடிவு செய்தது என்றார். சீக்கிய பாரம்பரியம் கொண்ட யாத்திரை தலங்களை இணைக்க அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். கர்த்தார் சாஹிபுக்காக காத்திருந்த காலம் மாறிவிட்டது. இது போன்ற புனித தலங்களுக்கு எளிதாகவும், விரைவாகவும்,  செல்வதற்கு பல திட்டங்களை  அரசு உருவாக்கியுள்ளது.  சுதேச தரிசன திட்டத்தின் கீழ், ஆனந்த்பூர் சாஹிப், அம்ரிட்சர் சாஹிப் உள்ளிட்ட பல முக்கியமான தலங்களை இணைப்பதற்கு சுற்றுவட்ட யாத்திரைப் பாதை அமைக்கப்பட உள்ளது.

உலக அளவில் மோதல்கள் உள்ள போதும், முழுமையான நிலைத்தன்மையுடன், அமைதிக்கு இந்தியா பாடுபடுகிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்துக்கு சமமான இடத்தை இந்தியா அளிக்கிறது.   புதிய சிந்தனை தொடர்ச்சியான கடின உழைப்பு, 100 சதவீத அர்ப்பணிப்பு என்பவை இன்றும் கூட சீக்கிய சமூகத்தின் அடையாளமாக இருக்கிறது. இந்த அடையாளத்திற்காக நாம் பெருமிதம் கொள்கிறோம்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
In young children, mother tongue is the key to learning

Media Coverage

In young children, mother tongue is the key to learning
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 11, 2024
December 11, 2024

PM Modi's Leadership Legacy of Strategic Achievements and Progress