QuotePolicy to ensure technologically-enabled, integrated, cost-efficient, resilient and sustainable logistics ecosystem for accelerated and inclusive growth
QuoteAims to reduce Logistics costs and achieve Global benchmarks, improve India’s global ranking in Logistics sector, help achieve larger share of global trade
Quote​​​​​​​MSMEs, Farmers to benefit due to improved logistics efficiency

 பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையானது சரக்குப் போக்குவரத்து துறைக்கான கட்டமைப்பை வகுத்துள்ளது.  இந்தக் கொள்கை, பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தை செயல்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது.  இந்த கொள்கையின் மூலம் சரக்குப் போக்குவரத்து  மற்றும் மனித வளங்களை ஒழுங்குபடுத்தும் செயல்முறைகள், ஒழுங்குமுறை கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் செயல்திறனைக் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 விரைவுபடுத்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த, செலவு-திறனுள்ள, நெகிழ்ச்சியான, நிலையான மற்றும் நம்பகமான சரக்குப் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய அளவுகோல்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில் இந்தியாவில் சரக்குப் போக்குவரத்தில் கட்டணத்தை குறைப்பது, செயல்திறன் குறியீட்டு தரவரிசையை மேம்படுத்தி, 2030க்குள் முதல் 25 நாடுகளில் ஒன்றாக கொண்டு வருவது, திறமையான சரக்குப் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்புக்கான தரவு சார்ந்த பொறிமுறையை உருவாக்குவது ஆகியவை இதன் நோக்கமாகும்.

 தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கை, இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள், தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பல சுற்று ஆலோசனைகள் நடத்தப்பட்டு, உலகளாவிய சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்ளும் ஒரு ஆலோசனை செயல்முறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

 இந்த கொள்கை செயல்பாட்டுக்கு வரும்போது, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோருக்கு பயன் அளிக்கும்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
New trade data shows significant widening of India's exports basket

Media Coverage

New trade data shows significant widening of India's exports basket
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 17, 2025
May 17, 2025

India Continues to Surge Ahead with PM Modi’s Vision of an Aatmanirbhar Bharat