புத்த ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் ஏப்ரல் 30, 2018 திங்கட்கிழமை, இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.
அவர் அங்கு சங்க தானம் வழங்குவார். சாரநாத்தில் உள்ள திபத்திய மேல் படிப்புகளுக்கான மத்திய நிலையத்திற்கும் புத்த கயாவில் உள்ள அகில இந்திய புத்த பிக்கு சங்கத்திற்கும் வைசாக் சம்மான் பிரஷாஸ்தி பாத்திரம் வழங்குவார். அங்கு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார்.


