பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளுக்கான சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக விடுத்த அறிக்கை:

 

பாலஸ்தீனம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் அரசுமுறைப்பயணமாக நான் இப்பயணத்தை மேற்கொள்கிறேன். கடந்த 2015 ஆண்டு முதல் ஐந்தாவது முறையாக  மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளுக்கான பயணத்தை மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பிராந்தியம் நமது வெளியுறவு தொடர்புகளில் முதன்மையானதாகும். இந்நாடுகளுடன் நாம் பல காலமாக துடிப்புமிக்க பல்பரிமாண உறவுகளை மகிழ்வுடன் பேணி வருகிறோம்.

பிப்ரவரி 10 ஆம் நாள் இந்த பயணம் பாலஸ்தீனத்திலிருந்து தொடங்கி, ஜோர்டான் வழியாக பயணிக்க வழிவகுத்து உதவிய மாட்சிமை வாய்ந்த ’மன்னர் அப்துல்லா இரண்டாம்’ அவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவரை நான் வரும் பிப்ரவரி 9 ம் நாள் அம்மானில் சந்திக்க எதிர்பார்த்திருக்கிறேன்.

இந்திய பிரதமர் பாலஸ்தீனத்திற்கு    செல்வது இதுவே முதன் முறையாகும். அந்நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாசுடனான எனது பேச்சுவார்த்தையின் போது பாலஸ்தீன மக்களுக்கான நமது ஆதரவையும் அந்நாட்டின் வளர்ச்சிக்கான உதவிகளை எப்போதும் நாம் அளிப்போமென்று மறு உறுதியளிப்பேன்.

 

 

 

பிப்ரவரி 10,மற்றும் 11 ஆம் நாட்களில் நான் ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு செல்கிறேன். இது கடந்த 2015 ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு பிறகான எனது இரண்டாவது பயணமாகும்.   

 

நமது மதிப்புமிக்க தளத்தகைக் கூட்டாளியாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் பொருளாதாரம், ஆற்றல், உயர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பெரிய துறைகளிலும் நாம் வேகமான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். இத்துறைகளில் நமது அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து மாட்சிமைதாங்கிய ”ஷேக் முகமத் பின் ரஷீத் அல் மக்தூம்” அவர்களுடனும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளரும், அபுதாபியின் முடியரசருமான மாட்சிமை தாங்கிய ’ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான்’ ஆகியோருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறேன்.

 

ஐக்கிய அரபு அமீரக தலைமையின் அழைப்பின் பேரில், துபாயில் உலக அரசாங்க உச்சிமாநாட்டின் 6 வது சந்திப்பில் நான் உரையாற்றவிருக்கிறேன்.

 

அதே நாளில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முன்னணி அரபு தலைமை அதிகாரிகளை துபாயில் சந்தித்து இந்தியாவின் பரந்த பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வதற்கு மேற்கொண்டு எப்படிப்பட்ட முன்னெடுப்புகள் தேவை என்பதைப்பற்றியும் விவாதிக்கவிருக்கிறேன்.

நமது நெருக்கமான கடல் வழி அண்டை நாடான ஓமனுடன் நாம் சிறப்பான அரசாங்க உறவுகளை மகிழ்வுடன் தொடர்ந்து வருகிறோம். இந்த சந்திப்பின் போது மாட்சிமைதாங்கிய ஓமானின் ஆட்சியாளர்களுடனும், அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்களுடனும் இந்தியாவுடனான வலுவான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வளர்ப்பது பற்றி நான் ஆலோசிப்பேன்.

 

பிப்ரவரி 11 மற்றும் 12 ஆம் நாட்களில் இந்திய பிரதமராக நான் முதன் முறையாக இந்நாட்டுக்கு பயணம் செய்வதை எண்ணி மகிழ்கிறேன். இந்தியாவும் ஓமனும் பல நூற்றாண்டு காலங்களாக மக்களுக்கிடையேயான பல்வேறு பரிமாற்றங்களில் ஆழமாக  வேரூன்றிய உறவுகளைக்கொண்ட நாடுகளாகும்.

 

பிப்ரவரி 11 ஆம் நாள் மாலை மாட்சிமை தாங்கிய ஓமன் சுல்தான் அவர்களை நான் சந்திக்கவிருக்கிறேன்.

அவருடன் அனைத்து அமைச்சர்களுக்கான துணை பிரதமர் ”மேதகு சயீது ஃபஹ்ஹத் பின் முகமத் அல் சயீது” அவர்களையும்,

சர்வதேச உறவுகள்,ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான துணை பிரதமர் ”மேதகு சயீத் ஆசாத் பின் தாரிக் அல் சயீத்” அவர்களையும் சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான பாரம்பரிய வலுவான உறவுகளை மேம்படுத்த இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்யவிருக்கிறோம்.

 

பிப்ரவரி 12 ஆம் நாள் ஓமனின் முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவுடனான வலுவான பொருளாதார வர்த்தக உறவுகளை வளர்ப்பது பற்றி ஆலோசிக்கவிருக்கிறேன்

 

ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் இவ்விரு நாடுகளிலும் இந்நாடுகளை தம் நாடுகளாக பாவித்து வாழும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த இந்திய மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வளைகுடாவில் வாழும் 90 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள்.. ஓமனில் அவர்கள் மிகப்பெரிய வெளிநாட்டவர் சமூகத்தை உருவாக்குகின்றனர்.

 

புலம்பெயர்ந்திருக்கும் இந்த இந்தியர்களின் சமூகம் , இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையில் நட்பு ஒரு பாலமாக விளங்குவதோடு இவர்கள் வாழும் இந்நாடுகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் சிறப்புடன் பங்கெடுத்து வருகிறார்கள்.

 

நான் மேற்கொண்டிருக்கும் இந்த பயணம் மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா பிராந்தியத்துடன் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Why The SHANTI Bill Makes Modi Government’s Nuclear Energy Push Truly Futuristic

Media Coverage

Why The SHANTI Bill Makes Modi Government’s Nuclear Energy Push Truly Futuristic
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 19, 2025
December 19, 2025

Citizens Celebrate PM Modi’s Magic at Work: Boosting Trade, Tech, and Infrastructure Across India