நான் 2019 ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரேனுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

எனது பிரான்ஸ் பயணம் நம் இரு நாடுகளும் ஆழமாக மதிக்கும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் வலுவான யுக்திசார்ந்த பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது. 2019 ஆகஸ்ட் மாதம் 22, 23 ஆம் தேதிகளில் பிரான்ஸில் அதிபர் மெக்ரானோடு உச்சி மாநாட்டு கலந்துரையாடல் மற்றும் பிரதமர் பிலிஃப்-வுடனான சந்திப்பு உட்பட இருதரப்பு கூட்டங்களில் பங்கேற்க உள்ளேன். இந்திய சமுதாயத்தோடு கலந்துரையாடுவதோடு 1950 மற்றும் 60-களில் பிரான்ஸில் நிகழ்ந்த இரண்டு ஏர் இந்தியா விமான விபத்துக்களில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவிடத்தை நான் அர்ப்பணிக்கவிருக்கிறேன்.

அதற்குப் பிறகு, ஆகஸ்ட் 25, 26 ஆம் தேதிகளில் அதிபர் மெக்ரானின் அழைப்பிற்கிணங்க, பியார்ரிட்ஸில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்பாளர் என்கின்ற முறையில், சுற்றுச்சூழல், பருவநிலை, கடல் மற்றும் டிஜிட்டல் மடைமாற்றம் பற்றிய நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறேன்.

இந்தியாவும், பிரான்சும் சிறப்பான இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. இது நம் இரு நாடுகள் மற்றும் உலகளவில், அமைதியையும், வளத்தையும் மேலும் மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பில் உள்ள தொலைநோக்கின் மூலம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் மிகப் பெரிய பிரச்சினைகளான பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்த பங்களிப்போடு கூடிய பார்வையால், நமது வலுவான, யுக்தி சார்ந்த மற்றும் பொருளாதார பங்களிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பரஸ்பர வளம், அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக பிரான்சுடனான நமது நீண்டகால மற்றும் மதிக்கத்தக்க நட்பு இந்த பயணத்தால் மேலும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று நான் நம்புகிறேன்.

ஆகஸ்ட் 23, 24 ஆம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின் போது, பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த, இருதரப்பு மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அபுதாபியின் பட்டத்து இளவரசர் மதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயத் அல் நயனோடு, கலந்துரையாடுவதை எதிர்பார்த்திருக்கிறேன்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் மதிப்பிற்குரிய பட்டத்து இளவரசரோடு இணைந்து அஞ்சல்தலை வெளியிடுவதையும் எதிர்பார்த்திருக்கிறேன். இந்தப் பயணத்தின் போது, ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கும் மிகப் பெரிய விருதான “ஆர்டர் ஆஃப் சையத்” பெற்றுக் கொள்வது கௌரவமாக இருக்கும். வெளிநாடுகளில் ரொக்கம் அல்லாத பரிவர்த்தனை தளத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ரூபே அட்டையை முறைப்படி தொடங்கிவைக்கவும் உள்ளேன்.

இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே அவ்வப்போது நடைபெறும் உயர்நிலை கலந்துரையாடல்கள் நமது துடிப்பான உறவுகளுக்கு அத்தாட்சியாக உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் நமது மூன்றாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளி மற்றும் இந்தியாவிற்கான நான்காவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகும். இந்த உறவுகளின் தரத்தின் மேம்பாடு, நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான சாதனைகளில் முதன்மையானவற்றில் ஒன்றாகும். இந்தப் பயணம் ஐக்கிய அரபு அமீரகம் உடனான பன்முக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆம் தேதிகளில் பஹ்ரேன் அரசாட்சிக்கு நான் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். இந்தியப் பிரதமர் ஒருவர் இந்த அரசாட்சிக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர், மதிப்பிற்குரிய இளவரசர் ஷேக் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபாவோடு பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு உறவுகளுக்கு மேலும் உத்வேகம் கொடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும், மண்டல, சர்வதேச விவகாரங்கள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் எதிர்பார்த்திருக்கிறேன். மதிப்பிற்குரிய பஹ்ரேன் மன்னர் ஷேக் அகமது பின் ஈசா அல் கலிஃபா மற்றும் இதரத் தலைவர்களையும் சந்திக்கவிருக்கிறேன்.

புலம் பெயர்ந்த இந்தியர்களோடு கலந்துரையாடவும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவிருக்கிறேன். மங்களகரமான ஜென்மாஷ்டமி விழாவையொட்டி வளைகுடா பகுதியில் மிகப்பழமையானதான ஸ்ரீநாத்ஜி ஆலயத்தின் மறு புனரமைப்பின் தொடக்கத்திலும் பங்கேற்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் பயணம் அனைத்து துறைகளிலும் உள்ள உறவுகளை மேலும் ஆழமாக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India launches ORV Sagar Manthan, boosting ocean research fleet

Media Coverage

India launches ORV Sagar Manthan, boosting ocean research fleet
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 10, 2026
September 10, 2026

Beyond Metros, Beyond Borders: How India Is Rewriting Its Growth Story Under PM Modi