பிரதமர் திரு. நரேந்திர மோடியை பின்லாந்து அதிபர் மாண்புமிகு திரு அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன் மோதலைத் தீர்ப்பது தொடர்பாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் தலைவர்களுக்கு இடையே வாஷிங்டனில் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்த தனது கருத்துக்களை அதிபர் திரு ஸ்டப் பகிர்ந்து கொண்டார்.
மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுக்கவும் இந்தியாவின் நிலையான ஆதரவை பிரதமர் திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியா-பின்லாந்து இருதரப்பு உறவின் முன்னேற்றத்தையும் தலைவர்கள் மதிப்பாய்வு செய்தனர், மேலும் குவாண்டம் தொழில்நுட்பங்கள், 6ஜி, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
பரஸ்பர நன்மை பயக்கும் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பின்லாந்து ஆதரவளிப்பதாக அதிபர் திரு ஸ்டப் மீண்டும் வலியுறுத்தினார். 2026-ம் ஆண்டில் இந்தியா நடத்தும் ஏஐ உச்சிமாநாட்டின் வெற்றிக்கான ஆதரவையும் அவர் உறுதிப்படுத்தினார்.
முன்கூட்டியே இந்தியாவுக்கு வருகை தருமாறு அதிபர் திரு ஸ்டப்பிற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
Had a good conversation with President Alexander Stubb. Finland is a valued partner in the EU. Discussed ways to strengthen cooperation in key sectors such as trade, technology and sustainability. Exchanged perspectives on the ongoing efforts for peaceful resolution of the…
— Narendra Modi (@narendramodi) August 27, 2025




