இஸ்ரேல் பிரதமர் திரு. பெஞ்சமின் நேதன்யாஹூ மற்றும் திருமதி சரா நேதன்யாஹூ ஆகியோருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை குஜராத் விஜயம் செய்கிறார்.
அfமதாபாத் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் சபர்மதி ஆசிரமத்திற்கு பயணம் மேற்கொள்ளும் போது திருமதி மற்றும் திரு நேதன்யாஹூவுக்கு அகமதாபாத் நகரம் வாழ்த்துகளைத் தெரிவிக்கும். சபர்மதி ஆசிரமத்தில் அவர்கள் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
அகமதாபாத்தில் உள்ள தேவ் தோலேரா கிராமத்தில் ஐகிரியேட் மையத்தை பிரதமர் மோடி மற்றும் பிரதமர் நேதன்யாஹூ ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். ஸ்டார்ட் அப் கண்காட்சி ஒன்றைப் பார்வையிடும் அவர்கள் ஸ்டார்ட் அப் முதன்மை செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளனர். பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சூய்கன் தாலுகாவுக்கு நடமாடும் தண்ணீர் சுத்திகரிப்பு வாகனத்தை இரு பிரதமர்களும் வீடியோ இணைப்பு மூலம் அர்ப்பணிக்க உள்ளனர். அப்போது இரு தலைவர்களும் கூடியிருப்போரிடையே உரையாற்ற உள்ளனர்.
பிரதமர் நேதன்யாஹூ மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சபர்காந்தா மாவட்டத்தில் உள்ள காய்கறிகளுக்கான சிறப்பு மையம் ஒன்றுக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். இந்த மையத்தின் செயல் திட்டம் குறித்து அவர்களுக்கு விளக்கப்படும். கட்ச் மாவட்டத்தில் உள்ள குகாமா மாவட்டத்தில் பேரிச்சம் பழங்களுக்கான சிறப்பு மையம் ஒன்றை அவர்கள் திறந்து வைக்க உள்ளனர். பின்னர் இரு பிரதமர்களும் விவசாயிகளுடன் கலந்துரையாடுகின்றனர்.
பின்னர் பிரதமர் நேதன்யாஹூ அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.


