பகிர்ந்து
 
Comments
The Rajya Sabha gives an opportunity to those away from electoral politics to contribute to the nation and its development: PM
Whenever it has been about national good, the Rajya Sabha has risen to the occasion and made a strong contribution: PM
Our Constitution inspires us to work for a Welfare State. It also motivates us to work for the welfare of states: PM Modi

நாடாளுமன்ற மாநிலங்களவையின் 250 ஆவது கூட்டத் தொடரைக் கொண்டாடும் வகையில், இன்று (18.11.2019) மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கூட்டத் தொடரில் பேசிய பிரதமர், நாட்டின் வரலாற்றுக்கு மாநிலங்களவை சிறப்புமிக்க பங்களிப்பை வழங்கியிருப்பதுடன், இந்த அவையில் எப்போதும் வரலாறு படைக்கப்பட்டு வருவதாக கூறினார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு சிந்தனை காரணமாக, நாடாளுமன்றம் இரண்டு அவைகளாக பிரிக்கப்பட்டு, நமது ஜனநாயகம் வலிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையின் பிரதிநிதியாக மாநிலங்களவை திகழ்வதாக குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தையும் பிரதிபலிப்பதாக தெரிவித்தார். மாநிலங்களவை ஒருபோதும் கலைக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், அதன் நிலைத்தன்மை, அவையை புனிதமாக்குவதாகவும் குறிப்பிட்டார். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும், நாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தங்களது பங்களிப்பை வழங்க மாநிலங்களவை ஒரு வாய்ப்பாக திகழ்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

இந்திய அரசியல் சாசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் மாநிலங்களவை முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டின் நலனை பேணிக்காப்பதில் மாநிலங்களவையின் பங்கு மேலோங்கி நிற்பதாகவும் பிரதமர் கூறினார். அந்த வகையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, முத்தலாக் மற்றும் அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

தேச வளர்ச்சிக்கு வலிமையான ஆதரவை வழங்கும் அவையாக மாநிலங்களவை திகழ்கிறது என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி மாநிலங்களவையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருப்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். அத்துடன் டாடர் அம்பேத்கர் மாநிலங்களவை மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருப்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றுவதிலும், அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் தங்களது கருத்துக்களை வலுவாக எடுத்துரைப்பதிலும் சில உறுப்பினர்கள் பின்பற்றும் நடைமுறையையும் பிரதமர் பாராட்டினார். இதுபோன்ற நடைமுறைகளிலிருந்து நாம் நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தின் வலிமையான செயல்பாட்டிற்கு மாநிலங்களவை மிகவும் முக்கியம் என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், மாநிலங்களவையின் கட்டுப்பாடுகள் மற்றும் சீரான போக்கை, அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Forex reserves rise $3.07 billion to lifetime high of $608.08 billion

Media Coverage

Forex reserves rise $3.07 billion to lifetime high of $608.08 billion
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 19, 2021
June 19, 2021
பகிர்ந்து
 
Comments

India's forex reserves rise by over $3 billion to lifetime high of $608.08 billion under the leadership of Modi Govt

Steps taken by Modi Govt. ensured India's success has led to transformation and effective containment of pandemic effect