QuoteMy Government's "Neighbourhood First" and your Government's "India First" policies have strengthened our bilateral cooperation in all sectors: PM
QuoteIn the coming years, the projects under Indian assistance will bring even more benefits to the people of the Maldives: PM

மாலத்தீவின் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடியும்மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமத் சோலிஹும் இன்று காணொலிக் காட்சி மூலம் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மாலத்தீவுகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கடலோரக் காவல்படைக் கப்பல் காமியாப், ரூபே அட்டை அறிமுகம், எல்இடி விளக்குகளைப் பயன்படுத்தி மாலேயில் ஒளியூட்டியது, உயர் சிறப்பு கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், மீன் பதப்படுத்தும் திட்டங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

அதிபர் பதவியில் ஓராண்டை நிறைவு செய்துள்ள சோலிஹை வாழ்த்திய பிரதமர் மோடி, இந்தியா-மாலத்தீவு நட்புறவில் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்கது என்றார்.

|

முதலில் அண்டை நாடுகள் எனும் இந்தியாவின் கொள்கையும், முதலில் இந்தியா என்ற மாலத்தீவின் கொள்கையும் அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

அதிவேகமாக இடைமறிக்கும் திறன் கொண்ட கடலோரக் காவல் படையின் காமியாப் கப்பல் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இது மாலத்தீவின் கடல்சார் பாதுகாப்பை விரிவுபடுத்தவும், மீன் வளப் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும் என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகளின் முக்கிய அம்சமாக இருப்பது மக்களுக்கு இடையேயான தொடர்பு என்று பிரதமர் கூறினார். இந்தச் சூழலில், மாலத்தீவில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாகி உள்ளது என்று கூறிய அவர், இந்த வாரம் தில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து 3 நேரடி விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது என்றார். ரூபே அட்டை மூலம் பணம் செலுத்தும் நடைமுறை தொடங்கப்பட்டிருப்பதால் மாலத்தீவுகளுக்கு இந்தியர்களின் பயணம் மேலும் எளிதாகும் என்று அவர் தெரிவித்தார்.

|

ஹுல்ஹுல்மாலேயில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கிரிக்கெட் விளையாட்டரங்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், 34 தீவுகளில் குடிநீர் மற்றும் துப்புரவுத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும் வலுப்படுத்த மாலத்தீவுடன் பங்களிப்பு தொடரும் என்ற தமது உறுதிப்பாட்டைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை இரு நாடுகளும் விரிவுபடுத்தும் என்றும் பிரதமர் கூறினார். 

Click here to read full text speech

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
What Happened After A Project Delayed By 53 Years Came Up For Review Before PM Modi? Exclusive

Media Coverage

What Happened After A Project Delayed By 53 Years Came Up For Review Before PM Modi? Exclusive
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the loss of lives due to a road accident in Pithoragarh, Uttarakhand
July 15, 2025

Prime Minister Shri Narendra Modi today condoled the loss of lives due to a road accident in Pithoragarh, Uttarakhand. He announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased and Rs. 50,000 to the injured.

The PMO India handle in post on X said:

“Saddened by the loss of lives due to a road accident in Pithoragarh, Uttarakhand. Condolences to those who have lost their loved ones in the mishap. May the injured recover soon.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi”