People want to be rid of evils like corruption and black money existing within the system: PM Modi
NDA Government’s objective is to create a transparent and sensitive system that caters to needs of all: PM Modi
We are working to fulfill the needs of the poor and to free them from all the problems they face: PM Modi
Mudra Yojana is giving wings to the aspirations of our youth: PM Modi
Non-Performing Asset (NPA) is the biggest liability on the NDA Government passed on by the economists of previous UPA government: PM Modi
We are formulating new policies keeping in mind the requirements of people; we are repealing old and obsolete laws: PM Modi
Major reforms have been carried out in the last three years in several sectors: PM Modi

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தை இன்று தொடங்கிவைத்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் பழைய வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர், “இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) 1927ம் ஆண்டு நிறுவப்பட்டபோது, இந்தியாவில் தொழிலகங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சைமன் கமிஷனை எதிர்த்தன. தேசிய நலனைப் பொறுத்தவரையில் இந்தியாவின் தொழில்நிறுவனங்கள் அப்போது, இந்திய சமுதாயத்தின் இதர பிரிவினருடன் இணைந்து செயல்பட்டன” என்றார்.



பிரதமர் பேசுகையில், “தேசத்திற்காக தங்களது கடமையை நாட்டு மக்கள் நிறைவேற்றுவதற்கு முன் வருவதன் மூலம் அதைப் போன்ற ஒரு சூழ்நிலை தற்போதும் நிலவுகிறது. ஊழல், கறுப்புப் பணம் ஆகியவை தொலையவேண்டும் என்பது மக்களின் நம்பிக்கையாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. நாட்டு மக்களின் தேவைகள், உணர்வுகளை அரசியல் கட்சிகளும் தொழில் வர்த்தக சபைகளும் மனத்தில் கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
“சுதந்திரம் பெற்ற பிறகு ஏராளமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன.அதே சமயம் பல சவால்களும் தோன்றியுள்ளன. ஏழைகள் வங்கிக் கணக்கு தொடங்குவது, எரிவாயு இணைப்பு, உதவித் தொகை, ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதற்கு மிகுந்த சிரமத்துக்கு ஆளாவது போலத் தெரிகிறது. ஆனால், மத்திய அரசு இந்தச் சிரமத்துக்கு முடிவுகட்டி, வெளிப்படையான, உணர்வுபூர்வமாகச் செயல்படும் முறையைக் கொண்டு வருகிறது” என்றார் பிரதமர்.

“ஜன தன் திட்டம் (Jan Dhan Yojana) ஓர் உதாரணம். வாழ்வதை இன்னும் எளிதாக்குவதில்தான் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று கூறிய பிரதமர் திரு. மோடி, சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் (Ujjwala Yojana), தூய்மை இந்தியா இயக்கத்தின் (Swachh Bharat Mission) கீழ் கழிவறைகளைக் கட்டுவது, பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (Pradhan Mantri Awas Yojana) ஆகியவற்றைச் சுட்டிக் காட்டினார். “நான் வறுமையைக் கடந்துதான் வந்திருக்கிறேன். எனவே, ஏழைகள், தேசத்தின் தேவைகளுக்காகச் செயல்படவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், தொழில்முனைவோர்க்கு அடமானம் இல்லாமல் கடன் கொடுக்கும் முத்ரா யோஜனா திட்டம் குறித்துக் கூறினார்.

 

“வங்கி நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வாராக் கடன்கள் பிரச்சினை காலம் காலமாக இருந்து வருகிறது. நிதி ஒழுங்குமுறை மற்றும் சேமிப்பு காப்பீட்டு சட்ட முன்வடிவு (Financial Regulation and Deposit Insurance – FRDI Bill) குறித்து தற்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்குப் பாதுகாப்பு அளிக்கவே அரசு செயல்பட்டுவருகிறது. ஆனால், அதற்கு நேர் மாறாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற விஷயங்கள் குறித்து இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கடமையாகும். அதைப் போல், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை திறமாகச் செயலாக்கப்படுவதிலும் “ஃபிக்கி” அமைப்புக்குப் பங்கு இருக்கிறது” என்றார் பிரதம மந்திரி.

“ஜிஎஸ்டி குடையின் கீழ் அதிகபட்சமான வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுவருவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நடைமுறை அதிகமானால், ஏழைகளுக்கு அதிகமான பலன் கிடைக்கும். வங்கிகளிலிருந்து எளிதாகக் கடன் பெற வகை ஏற்படும். அலைவது குறையும். அதன் மூலம் வர்த்தகத்தில் போட்டித் தன்மை உயரும். சிறு வர்த்தகர்களிடையே பெரிய அளவில் விழிப்பு ஏற்படுத்த “ஃபிக்கி” நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன். பில்டர்கள் சாதாரண மக்களைச் சுரண்டுவது போன்ற பிரச்சினைகளில் தேவைப்படும்போது, “ஃபிக்கி” தனது கவலையை வெளிப்படுத்த வேண்டும்” என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

“யூரியா, ஜவுளி, சிவில் விமானப் போக்குவரத்து, சுகாதாரம் ஆகியவை தொடர்பாகவும், அவற்றின் மூலம் கிடைத்த ஆதாயங்கள் தொடர்பாகவும் சில கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, கட்டுமானம், உணவுப் பதனிடு உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் எடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் பலனாக உலக வங்கியின் ஆய்வில் “வர்த்தகம் செய்வதற்கு எளிதான நாடு” என்ற பட்டியலில் 142 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 100ஆவது இடத்தை எட்டியிருக்கிறது” என்று கூறிய பிரதமர், வலுவான ஆரோக்கியமான பொருளாதார நிலைக்கான அறிகுறி குறித்தும் சுட்டிக் காட்டினார். ”அரசு எடுத்த நடவடிக்கைகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகித்துள்ளன” என்றார் அவர்.

பிரதமர் மேலும் பேசுகையில், “உணவுப் பதனீட்டுத் துறை, இந்தியாவில் தொழில் தொடங்குதல்(start- ups), செயற்கை அறிவாற்றல் (கணினிப் பயன்பாடு), சூரிய சக்தித் திட்டம், மக்கள் நல்வாழ்வு ஆகிய துறைகளில் ஃபிக்கி நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் சிந்தனைக் களமாக (think-tank) செயல்பட வேண்டும்” என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Click here to read the full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA

Media Coverage

Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 13, 2025
December 13, 2025

PM Modi Citizens Celebrate India Rising: PM Modi's Leadership in Attracting Investments and Ensuring Security