பகிர்ந்து
 
Comments
Science and technology ecosystem should be impactful as well as inspiring: PM Modi
Scientific Temper wipes out superstition: PM Modi
There are no failures in science; there are only efforts, experiments and success: PM

கொல்கத்தாவில் 5-வது இந்திய சர்வதேச அறிவியல் விழாவைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் என்பவை தேசத்தை வலுவாக்குகிறது என்பதைக் குறிக்கும் ரைசென்” இந்த விழாவின் மையப் பொருளாக இருப்பது 21-ஆம் நூற்றாண்டின் இந்திய விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது.

அறிவியலும், தொழில்நுட்பமும் சமூகத்தில் மாபெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே, அரிய கண்டுபிடிப்புக்கும், புதிய கண்டுபிடிப்புக்கும் அரசு நிர்வாக ரீதியான ஆதரவை வழங்குகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஆதரவான சூழலை வலுவாக எடுத்துரைத்த அவர், நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவ அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த நிலையில், ஐந்தாயிரத்திற்கும் அதிகமான அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களும், 200-க்கும் அதிகமான அடல் புதுமுயற்சி மையங்களும் நிறுவப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

“நமது வாழ்க்கையை எளிதாக்க அறிவியல் எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால், அறிவியல் என்பது சமூகத்திற்கு மிகவும் தேவையாக உள்ளது. இந்த நோக்கில் ஒவ்வொரு அறிவியலாளரும், குடிமகனும் சிந்தித்து செயல்பட்டால் நாடு முன்னேறும்” என்று பிரதமர் கூறினார்.

அறிவியல் நமக்கு வழங்குகின்ற நீண்டகால தீர்வுகள், நீண்டகால பயன்கள் குறித்து ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். “அதேசமயம், சர்வதேச சட்டங்கள் மற்றும் தரங்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

“பிரச்சினையின் இருப்பு மற்றும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நமது பரிசோதனைகள் என்ற இரண்டு தன்மைகளும் தொழில்நுட்பத்தின் பயன் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அறிவியலில் தோல்விகள் என்பது இல்லை. முயற்சிகள், பரிசோதனைகள், வெற்றி என்பது மட்டுமே உண்டு. நீங்கள் பணியாற்றும்போது, இதனை மனதில் கொண்டால் உங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அல்லது, உங்கள் வாழ்க்கையில் எந்த சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்காது” என்று அவர் கூறினார்.

Click here to read PM's speech

நன்கொடைகள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Overjoyed by unanimous passage of Bill extending reservation for SCs, STs in legislatures: PM Modi

Media Coverage

Overjoyed by unanimous passage of Bill extending reservation for SCs, STs in legislatures: PM Modi
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
2019 டிசம்பர் 11-க்கான முக்கிய செய்திகள்
December 11, 2019
பகிர்ந்து
 
Comments

முக்கிய செய்திகள் உங்களது தினப்படியான நேர்மறையான செய்திகளாகும். அரசு, பிரதமர் தொடர்பான அனைத்து புதிய செய்திகளையும் கவனித்து, பிறருடன் பகிர்ந்துகொண்டு, அதனால் உங்கள் மீது ஏற்படும் தாக்கத்தை கண்டுபிடிங்கள்!