பகிர்ந்து
 
Comments
PM Modi campaigns in Rudrapur, Uttarakhand & urges people to vote for BJP
Shri Modi speaks about Mudra Yojana, says BJP Govt wants today's youth to be entrepreneurs of tomorrow
Dev Bhoomi Uttarakhand must get rid of corruption. harda tax must end: PM Modi
Uttarakhand has the potential to attract tourists from the entire world: PM

உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரில் மாபெரும் பொதுமக்கள் திரளணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பெருமளவில் திரளணியில் கலந்து கொண்டமைக்காக உத்தராகண்ட் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

உத்தரப்பிரதேசத்தில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட 3 எம்.எல்.சி. இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ``உத்தரப்பிரதேசத்தில் எம்.எல்.சி. தேர்தலில் மகத்தான வெற்றியை பா.ஜ.க. பெற்றுள்ளது என்ற பெரிய செய்தியுடன் அங்கிருந்து வந்திருக்கிறேன்'' என்று அவர் கூறினார்.v

ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்தமைக்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ``எதிரி ஏவுகணைகளை விண்ணிலேயே தடுத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை நமது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதனை செய்து பார்தமைக்காக அவர்களைப் பாராட்டுகிறேன்'' என அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளை குறைகூறிய பிரதமர், ``முன்பு சர்ஜிக்கல் தாக்குதல் பற்றி நமது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அவர்கள் நிரூபணங்கள் வேண்டும் என கேட்டார்கள். இந்த ஏவுகணையின் செயல்பாடு பற்றி அவர்கள் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என நம்புகிறேன்'' என்று மோடி கூறினார்.

உத்தராகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி பங்களிப்பை திரு. மோடி நினைவுகூர்ந்தார். ``உத்தராகண்ட் மாநிலத்தை அடல்பிகாரி வாஜ்பாயி ஜி உருவாக்கினார். அவருடைய முயற்சிகள் மற்றும் கொள்கைகளால்தான் இந்த மாநிலம் புதிய உச்சங்களுக்குச் செல்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநில வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக திரு. மோடி குறிப்பிட்டார். உத்தராகண்ட் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் பா.ஜ.க. அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் அவர் கூறினார். ``முத்ரா திட்டத்தில் நாங்கள் கடன்கள் தந்து இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தோம். அவர்கள் நாளைய தொழில்முனைவோராக ஆக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'' என்றார் அவர்.

கறைபடிந்த மற்றும் ஊழல் அரசை உத்தராகண்ட் மக்கள் அகற்றிட வேண்டும் என பிரதமர் திரு. மோடி வலியுறுத்தினார். ``தேவபூமியான உத்தராகண்ட் ஊழலை ஒழித்தாக வேண்டும். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் எதற்காக ஹர்டா வரி செலுத்த வேண்டும்? இது ஒழிய வேண்டும்'' என்று அவர் கூறினார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் வளர்ச்சிதான் பா.ஜ.க.வுக்கு அதிமுக்கியமான விஷயம் என்று திரு. மோடி கருத்து தெரிவித்தார். ``உத்தராகண்ட் மாநிலத்துக்கு விகாஸ்  (VIKAS) தேவை - அதாவது வித்யூத் (மின்சாரம்), கானூன் வியவஸ்தா  (சட்டம், ஒழுங்கு) & சடக் (சாலைகள் மூலம் உரிய இணைப்புகள்) தேவை'' என்று மோடி கூறினார்.

இறைவனின் நான்கு உறைவிடங்களாக கருதப்படும் நான்கு தாம்களுக்கு(சார் தாம்) செல்ல நல்ல இணைப்பு சாலைகள் அமைக்க மத்திய அரசு ரூ.12,000 கோடி ஒதுக்கியதாக திரு. மோடி தெரிவித்தார். ``உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வாய்ப்புகள் உத்தராகண்ட்டில் உள்ளன. சார் தாம் - சாலை இணைப்புக்கு நாங்கள் ரூ.12,000 கோடி ஒதுக்கியுள்ளோம்'' என்று அவர் கூறினார்.

உத்தராகண்ட் மாநிலம் வீரமிக்கவர்களின் பூமி என்று திரு மோடி பெருமிதம் கொண்டார். ``ஒரே பதவி நிலைக்கு ஒரே ஓய்வூதியம் (OROP) என்ற முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கை நாற்பது ஆண்டுகளாக உள்ளது. அதில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தராகண்ட் மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்து ஊழல் இல்லாத அரசைத் தேர்வு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ``வளமான உத்தராகண்ட் என்ற அடல்ஜியின் கனவை நனவாக்குவதில் அர்ப்பணிப்பு கொண்டுள்ள பா.ஜ.க. அரசை தேர்வு செய்ய வேண்டும் என உத்தராகண்ட் மக்களை கேட்டுக் கொள்கிறேன்'' என அவர் நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Mann KI Baat Quiz
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
 PM Modi Gifted Special Tune By India's 'Whistling Village' in Meghalaya

Media Coverage

PM Modi Gifted Special Tune By India's 'Whistling Village' in Meghalaya
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Social Media Corner 1st December 2021
December 01, 2021
பகிர்ந்து
 
Comments

India's economic growth is getting stronger everyday under the decisive leadership of PM Modi.

Citizens gave a big thumbs up to Modi Govt for transforming India.