ஃபுட் பேங்க் இந்தியாவின் நிறுவனரான சினேகா மோகன்தாஸ், 'ஷீ இன்ஸ்பையர்ஸ் அஸ்' (#‘She Inspires us’) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மகளிர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள கணக்குகளைக் கையாண்டு உற்சாகப்படுத்தும் தனது வாழ்க்கைக் கதையை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த தமது தாயாரால் ஊக்கம் பெற்ற சினேகா ஃபுட் பாங்க் – இந்தியா அமைப்பைத் தொடங்கினார்
பசியைப் போக்குவதற்காக, தன்னார்வலர்களுடன் இணைந்து சினேகா செயல்படுகிறார். இருபது கிளைகளைக் கொண்டுள்ள ஃபுட் பேங்க் இந்தியா, தனது செயல்களின் மூலம் பலரின் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் சேர்ந்து ஒரே இடத்தில் சமைத்தல், சமையல் மாரத்தான், தாய்ப்பால் ஊட்டுதல் விழிப்புணர்வு இயக்கம் போன்ற நிகழ்ச்சிகளை ஃபுட் பேங்க் இந்தியா நடத்தியுள்ளதாகவும் சினேகா தெரிவித்தார்.
பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் முன்வந்து தன்னுடன் கை கோர்க்க வேண்டும் என சினேகா வலியுறுத்தினார். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது உணவளித்து, பசியில்லா உலகை உருவாக்குவதற்கு உதவ வேன்டும் என கேட்டுக்கொண்டார்..
You heard of food for thought. Now, it is time for action and a better future for our poor.
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
Hello, I am @snehamohandoss. Inspired by my mother, who instilled the habit of feeding the homeless, I started this initiative called Foodbank India. #SheInspiresUs pic.twitter.com/yHBb3ZaI8n


