உடன்பாடு / புரிந்துணர்வு ஒப்பந்தம்

  1. இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே உத்திசார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது குறித்த பிரகடனம்.
  2. இந்தியா – பிலிப்பைன்ஸ் உத்திசார் கூட்டாண்மை : செயல்திட்டம் (2025-29)
  3. இந்திய விமானப்படை, பிலிப்பைன்ஸ் விமானப்படை இடையே, விமானப்படை வீரர்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகள்.
  4. இந்திய ராணுவம், பிலிப்பைன்ஸ் ராணுவம் இடையே ராணுவ வீரர்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகள்.
  5. இந்திய கடற்படை, பிலிப்பைன்ஸ் கடற்படை இடையே கடற்படை வீரர்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகள்.
  6. இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே கிரிமினல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான ஒப்பந்தம்.
  7. இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே தண்டிக்கப்பட்ட நபர்களை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தம்.
  8. இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை – பிலிப்பைன்ஸ் தொழில்நுட்பத் துறை இடையே 2025-28 காலத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துறையில், ஒத்துழைப்புத் திட்டம்.
  9. இந்திய சுற்றுலாத்துறை – பிலிப்பைன்ஸ் சுற்றுலாத்துறை இடையே 2025-28 காலத்தில் சுற்றுலா ஒத்துழைப்புத் திட்டம்.
  10. இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  11. இந்தியாவின் இஸ்ரோ மற்றும் பிலிப்பைன்ஸின் விண்வெளி முகமை இடையே விண்வெளியை அமைதிக்குப் பயன்படுத்துவது குறித்த விருப்ப அறிக்கை.
  12. இந்தியக் கடலோரக் காவல் – பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை இடையே கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான விதிமுறைகள்.
  13. இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே கலாச்சார பரிவர்த்தனைத் திட்டம்.

அறிவிப்புகள்

  1. பிலிப்பைன்ஸின் இறையாண்மைமிக்க தரவு சேகரிப்பு உள்கட்டமைப்பை உருவாக்கும் முன்னோடித் திட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவு.
  2. தகவல் ஒருங்கிணைப்பு மையம் – இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பங்கேற்க பிலிப்பைன்ஸுக்கு இந்தியாவின் அழைப்பு.
  3. ஓராண்டுக் காலத்திற்கு (ஆகஸ்ட் 2025 முதல்) பிலிப்பினோ மக்களுக்கு இ-சுற்றுலா விசா வசதி.
  4. இந்தியா – பிலிப்பைன்ஸ் தூதரக உறவுகளின் 75-வது ஆண்டினை நினைவுகூர கூட்டாக தபால் தலை வெளியீடு.
  5. இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே  முன்னுரிமை வர்த்தக பேச்சுவார்த்தை வரம்புகள் ஏற்பு.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Vikas Bhi, Virasat Bhi: How JATAN, AI and Digital Archives are revolutionising India’s cultural heritage preservation

Media Coverage

Vikas Bhi, Virasat Bhi: How JATAN, AI and Digital Archives are revolutionising India’s cultural heritage preservation
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் துணிச்சல் மிக்க தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
August 09, 2026

 பிரதமர் திரு நரேந்திர மோடி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தியாகிகள் அனைவரையும் நினைவுகூர்ந்து, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் துணிச்சலுக்கும் உறுதிக்கும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் தலைமையால் உத்வேகம் பெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அறைகூவல், சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியதுடன், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான இந்திய மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் பிரதிபலித்தது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தியாகிகள் அனைவரையும் நினைவுகூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் உத்வேகமாக விளங்கும். மகாத்மா காந்தியின் தலைமையால் உத்வேகம் பெற்ற வெள்ளையனே வெளியேறு முழக்கம், நமது சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியதுடன், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் பிரதிபலித்தது."