1. “நம்பகத்தன்மை மற்றும் பங்கேற்பு நிலையிலான ஒத்துழைப்புகளில் புதிய உச்சங்களை எட்டுவது'' குறித்த கூட்டறிக்கை.
  2. இந்தியா – ரஷ்யா வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான கூட்டு செயல் திட்டம்
  3. இந்தியக் குடியரசுக்கும் ரஷ்ய கூட்டமைப்பு அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் மற்றும் ரஷ்ய / ராணுவ சாதன  உதிரிபாகங்கள் தயாரிப்புக்கு ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
  4. ஆடியோ விசுவல் இணை-தயாரிப்பு குறித்து இந்தியக் குடியரசுக்கும் ரஷ்ய கூட்டமைப்பு அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம்.
  5. சாலைப் போக்குவரத்து மற்றும் சாலை தொழிலில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியக் குடியரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்துக்கும், ரஷ்ய கூட்டமைப்பின் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  6. இந்தியக் குடியரசில் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்திற்கும், விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கும் இடையில் கடல்சார் தகவல் தொடர்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியக் குடியரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும், ரஷ்யக் கூட்டமைப்பின் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் இடையில் விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒப்பந்தம்
  7. சுங்கத் துறை விதிமீறல்களைத் தடுப்பது தொடர்பாக இந்தியக் குடியரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கும், (ரஷ்யக் கூட்டமைப்பின்). மத்திய சுங்க சேவைகள் துறைக்கும் இடையிலான  ஒத்துழைப்பு குறித்த திட்டம்.
  8. போக்குவரத்துக்கு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவது தொடர்பாக ரஷ்யக் கூட்டமைப்பு எரிசக்தி அமைச்சகத்துக்கும், இந்தியக் குடியரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  9. எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக இந்தியக் குடியரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கும், ரஷ்யக் கூட்டமைப்பு எரிசக்தி அமைச்சகத்துக்கும் இடையிலான செயலாக்கத் திட்டம்.
  10. ரஷ்யாவில் தூரக் கிழக்குப் பகுதிகளில் கோக்கிங் நிலக்கரி சுரங்கத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கும், தூரக் கிழக்கு முதலீட்டு மற்றும் ஏற்றுமதி முகமைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  11. முதலீட்டில் கூட்டு முயற்சி தொடர்பாக இந்தியா முதலீடு மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
  12. இந்திய தொழில் வர்த்தக சபைக்கும்  ரோஸ் காங்கிரஸ் அறக்கட்டளைக்கும் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
  13. புதிய திட்டங்களை ஊக்குவிப்பதற்கு முக்கியமான முன்முயற்சிகள் எடுப்பது தொடர்பாக, இந்திய தொழில் வர்த்தக சபைக்கும், தன்னாட்சி பெற்ற லாப-நோக்கில்லாத அமைப்பு முகமைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  14. எல்.என்.ஜி. வணிகம் மற்றும் எல்.என்.ஜி. விநியோகத் திட்டங்களை கூட்டாக உருவாக்குவது தொடர்பாக நோவாடெக் கூட்டு பங்கு நிறுவனம் மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  15. ரோஸ்ஜியோலோகியா கூட்டு பங்கு நிறுவனத்துக்கும் எஸ்.ஆர்.ஈ.ஐ. கட்டமைப்பு நிதி லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையில் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
A Milestone in Financial Inclusion: The Success Story of PMSBY

Media Coverage

A Milestone in Financial Inclusion: The Success Story of PMSBY
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 9, 2026
May 09, 2026

Citizens Celebrate India’s Civilisational & Economic Awakening Under PM Narendra Modi