டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜூலை 3 முதல் 4, 2025 வரை அந்நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், 26 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமரின் முதல் இருதரப்பு பயணமாகும். 1845-ஆம் ஆண்டில் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இந்தியர்கள் குடியேறியதன் 180-வது ஆண்டு நிறைவோடு இப்பயணம் ஒத்திசைவானதாக இருப்பதால், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பின் அடித்தளமாக இருக்கும் ஆழமான வேரூன்றிய நாகரிக உறவுகள், துடிப்பான மக்களுக்கு இடையிலான இணைப்புகள் மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரின் சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார், மேலும் இந்தியாவிற்கும் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டினார்.
இந்தியாவிற்குள்ளும் உலக அரங்கிலும் பிரதமர் நரேந்திர மோடியின் அபாரமான தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இரு பிரதமர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தினர். இரு தலைவர்களும் வலுவான உறவு குறித்து திருப்தி தெரிவித்தனர், மேலும் சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், கலாச்சாரம், விளையாட்டு, வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, விவசாயம், நீதி, சட்ட விவகாரங்கள், கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் பரந்த அடிப்படையிலான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் எதிர்கால நோக்குடைய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான தங்கள் கடப்பாட்டை மீண்டும் உறுதிபட வெளிப்படுத்தினர்.
அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதத்தால் ஏற்படும் பொதுவான அச்சுறுத்தலை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பயங்கரவாதத்திற்கு தங்கள் கடுமையான கண்டனத்தையும், உறுதியான எதிர்ப்பையும் மீண்டும் அவர்கள் வலியுறுத்தினர். எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட பயங்கரவாதத்திற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது என்று அவர்கள் அறிவித்தனர்.
மருந்துகள், மேம்பாட்டு ஒத்துழைப்பு, கல்வி, கலாச்சாரப் பரிமாற்றம், ராஜதந்திர பயிற்சி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட முக்கிய துறைகளில் முக்கியமான ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை அவர்கள் வரவேற்றனர். 2024 நவம்பரில் நடைபெற்ற 2வது இந்தியா-காரிகோம் உச்சிமாநாட்டின் முடிவுகளை தலைவர்கள் நினைவு கூர்ந்தனர். மேலும், அதில் அறிவிக்கப்பட்ட முயற்சிகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்த அவர்கள் உறுதிபூண்டனர்.
டிஜிட்டல் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இரு நாடுகளும் வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தின. இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் கட்டண தளமான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (யுபிஐ) ஏற்றுக்கொண்ட முதல் கரீபியன் நாடாக மாறியதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோவை பிரதமர் மோடி வாழ்த்தினார். டிஜிலாக்கர், இ-சைன் மற்றும் அரசு மின்-சந்தை (ஜெம்) உள்ளிட்ட இந்தியத் தீர்வுகளை செயல்படுத்துவதில் மேலும் ஒத்துழைப்பை ஆராய அவர்கள் ஒப்புக்கொண்டனர். நிலப் பதிவுக்கான அமைப்பை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மேம்படுத்துவதில் இந்தியாவிடம் டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆதரவைக் கோரியது. டிஜிட்டல் ஆளுகை மற்றும் பொது சேவை வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, புதுமை மற்றும் தேசிய போட்டித்தன்மைக்கு உதவும் என்பதையும் தலைவர்கள் வலியுறுத்தினர்.
கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் பிரதமர் பெர்சாத்-பிஸ்ஸேசரின் லட்சிய தொலைநோக்குப் பார்வையைப் பிரதமர் மோடி பாராட்டினார், மேலும் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் முதன்மை கல்வித் திட்டத்தை ஆதரிப்பதற்காக 2000 மடிக்கணினிகளை பரிசாக வழங்குவதாகவும் அவர் அறிவித்தார். இந்திய அரசு வழங்கும் பல்வேறு உதவித்தொகை திட்டங்களின் கீழ் இந்தியாவில் உயர் கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது குறித்து ஆராயுமாறு டிரினிடாட் மற்றும் டொபாகோ மாணவர்களை பிரதமர் மோடி ஊக்குவித்தார்.
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பை மற்றொரு முன்னுரிமைப் பகுதியாக தலைவர்கள் அடையாளம் கண்டனர். உணவு பதனப்படுத்துதல் மற்றும் சேமிப்பிற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்களை டிரினிடாட் மற்றும் டொபாகோவின் தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டுக் கழகத்திற்கு (NAMDEVCO) பரிசாக இந்தியா வழங்கியது பாராட்டப்பட்டது. இது தொடர்பான ஒரு அடையாள விழாவின் போது, NAMDEVCO-விற்கான முதல் தொகுதி இயந்திரங்களை பிரதமர் மோடி, ஒப்படைத்தார். இயற்கை விவசாயம், கடற்பாசி சார்ந்த உரங்கள் மற்றும் தினை சாகுபடி ஆகிய துறைகளில் இந்தியாவின் உதவிகளையும் பிரதமர் மோடி வழங்கினார்.
மருந்துத் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பையும், டிரினிடாட் மற்றும் டொபாகோ மக்களுக்கு இந்தியாவில் இருந்து தரமான மற்றும் மலிவு விலையில் பொதுவான மருந்துகளை அணுகுவதையும், இந்தியாவில் மருத்துவ சிகிச்சையை வழங்குவதையும் உறுதி செய்யும் இந்திய மருந்தகத்தை அங்கீகரித்ததற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசை பிரதமர் மோடி பாராட்டினார். வரும் மாதங்களில், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் 800 நபர்களுக்கு செயற்கை மூட்டு பொருத்துதல் முகாம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு அப்பால் சுகாதார ஒத்துழைப்பை வழங்கும் பிரதமர் மோடிக்கு பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் நன்றி தெரிவித்தார். சிறந்த தரமான சுகாதார சேவையை வழங்குவதற்காக இந்திய அரசு இருபது ஹீமோடையாலிசிஸ் அலகுகள் மற்றும் இரண்டு கடல் ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கியதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோவின் நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார். இது
டிரினிடாட் மற்றும் டொபாகோ வளர்ச்சிக்கான ஒத்துழைப்பின் மதிப்பை சுட்டிக் காட்டியது. இந்தியாவின் உதவியுடன் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்த உதவும் விரைவான திட்டங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை வரவேற்ற அதே வேளையில், கோவிட்-19 தொற்றுநோயின் கடினமான காலங்களில் விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் இந்தியாவின் முன்னணி பங்கை பிரதமர் பெர்சாத்-பிஸ்ஸேசர் பாராட்டினார். டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு கோவிட் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விரைவாக வழங்கிய இந்தியாவின் மதிப்புமிக்க விநியோகத்திற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். கோவிட்-19 திட்டத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள , மொபைல் சுகாதார ரோபோக்கள், டெலிமெடிசின் கருவிகள் போன்றவற்றை வழங்கிய இந்தியாவின் ஆதரவை அவர் குறிப்பாகப் பாராட்டினார்.
பருவநிலை நடவடிக்கை, மீள்தன்மை உருவாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணி மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் சேரும் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் முடிவை பிரதமர் மோடி வரவேற்றார். பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்காக இந்தியா உருவாக்கிய ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளில் மேலும் ஒத்துழைப்பை ஆராய தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். வெளியுறவு மற்றும் காரிகோம் விவகார அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு கூரை ஒளிமின்னழுத்த அமைப்பை வழங்க இந்தியா மானியம் வழங்கியதற்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசும் நன்றி தெரிவித்தது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட 'மிஷன் லைஃப்' முயற்சியை பிரதமர் பெர்சாத்-பிஸ்ஸார் பாராட்டினார். இது கவனத்துடன் கூடிய நுகர்வு மற்றும் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. உலகளாவிய குடிமக்களை காலநிலை உணர்வுள்ள நடத்தைக்கு அணிதிரட்டுவதில் அதன் பொருத்தத்தை அவர் சுட்டிக் காட்டினார்.
டிரினிடாட் மற்றும் டொபாகோவுடனான இந்தியாவின் கூட்டாண்மையின் முக்கிய தூணாக திறன் மேம்பாடு அங்கீகரிக்கப்பட்டது. தங்கள் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு துறைகளில் இந்தியா ஆண்டுதோறும் 85 ஐடிஇசி இடங்களை வழங்குவதை டிரினிடாட் மற்றும் டொபாகோ தரப்பு பாராட்டியது. தங்கள் அதிகாரிகளுக்கு பெரிய அளவிலான பயிற்சி அளிக்க நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களை டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு அனுப்ப இந்திய தரப்பு விருப்பம் தெரிவித்தது.
தடயவியல் அறிவியல் மற்றும் நீதி அமைப்பில் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் திறன்களை வளர்ப்பதில் டிரினிடாட் மற்றும் டொபாகோவை ஆதரிக்க பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார், பயிற்சிக்காக அவர்களை இந்தியாவிலிருந்து டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு அனுப்புவது உட்பட இரு நாடுகளின் வணிக ஆதரவு அமைப்புகளுக்கு இடையே நேரடி வழிகளை ஊக்குவிப்பதன் மூலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு பரிமாற்றங்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
நாடுகளுக்கு இடையேயான வலுவான விளையாட்டு உறவுகளை, குறிப்பாக கிரிக்கெட் மீதான பகிரப்பட்ட ஆர்வத்தை இரு தலைவர்களும் கொண்டாடினர். பயிற்சி, திறமை பரிமாற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கூட்டு திறன் மேம்பாட்டை வளர்ப்பதற்காக விளையாட்டு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர். இந்தியாவில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த இளம் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாக , இந்தியாவில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த பண்டிதர்களின் குழுவிற்கு பயிற்சி அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்தப் பண்டிதர்கள் இந்தியாவில் நடைபெறும் 'கீதா மஹோத்சவத்திலும்' பங்கேற்பார்கள். பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் இந்த நற்செயலுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் கொண்டாட்டங்களுடன் இணைந்து டிரினிடாட் மற்றும் டொபாகோவில் கீதா மஹோத்சவத்தை கூட்டாகக் கொண்டாடுவதற்கான இந்திய முன்மொழிவை அவர் உற்சாகமாக ஆதரித்தார்.
கலாச்சார ஒத்துழைப்பில், இரு தலைவர்களும் 1997- ஆம் ஆண்டு மகாத்மா காந்தி கலாச்சார ஒத்துழைப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இருதரப்பு 'கலாச்சார பரிமாற்றத் திட்டத்தின்' முற்போக்கான பங்கைக் குறிப்பிட்டுக் காட்டினர். 2025-28 காலகட்டத்திற்கு இந்தத் திட்டத்தைப் புதுப்பிக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புதுப்பிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளுடனும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்காக, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பெர்குஷன் (ஸ்டீல் பான்) மற்றும் பிற கலாச்சாரப் பிரிவுகளில் கலைஞர்களை இந்தியாவிற்கு அனுப்பும். நாடு முழுவதும் யோகா மற்றும் இந்தி மொழியை ஊக்குவித்ததற்காக பிரதமர் மோடி டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவில் இருந்து யோகா பயிற்சியாளர்களை அனுப்பவும், டிரினிடாட் மற்றும் டொபாகோவின் தேசிய பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவைச் சேர்ப்பதற்கு ஆதரவளிக்கவும் அவர் முன்வந்தார்.
1845-ஆம் ஆண்டு டிரினிடாட் மற்றும் டொபாகோவில் நடந்த முதல் இந்திய குடியேற்றத்தின் 180-வது ஆண்டு நிறைவை 2025 மே 30 அன்று இரு பிரதமர்களும் நினைவு கூர்ந்தனர். கலாச்சார சுற்றுலாவிற்கான இடமாக நெல்சன் தீவின் முக்கியத்துவத்தையும், தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்திய வருகை மற்றும் பிற பதிவுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் அங்கீகரித்தனர். டிரினிடாட் மற்றும் டொபாகோவில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோரின் ஆறாவது தலைமுறை வரை இந்திய வெளிநாட்டு குடியுரிமை (ஓசிஐ) அட்டைகளை வழங்குவதற்கான இந்திய அரசின் முடிவையும் பிரதமர் மோடி அறிவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் இந்தி மற்றும் இந்திய படிப்புகளில் கல்வி இருக்கைகள் மீண்டும் அமைக்கப்பட இருப்பதற்கு இரு பிரதமர்களும் வரவேற்பு தெரிவித்தனர், இது இந்தியாவிற்கும் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கும் இடையிலான கல்வி மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை ஆழப்படுத்தவும், ஆயுர்வேதத்தின் பண்டைய ஞானம் மற்றும் பாரம்பரியத்தைப் பரப்புவதை ஊக்குவிக்கவும் உதவும்.
இந்தியா-டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடாளுமன்ற நட்புறவுக் குழுவை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும்; இந்தியாவில் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.
பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, அமைதி, பருவநிலை நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய தெற்கின் குரலை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். பலதரப்பு மன்றங்களில் வழங்கப்படும் மதிப்புமிக்க பரஸ்பர ஆதரவுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தற்போதைய உலகளாவிய நிலைகளை சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் விரிவான சீர்திருத்தங்கள் தேவை என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய மோதல்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை முன்னோக்கி செல்லும் வழி என்று கூறினர். விரிவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியாவுக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. 2027-28 காலகட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற இடத்திற்கான டிரினிடாட் மற்றும் டொபாகோவின் வேட்புமனுவை இந்தியா ஆதரிக்கும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது; அதே நேரத்தில் டிரினிடாட் மற்றும் டொபாகோ 2028-29 காலகட்டத்திற்கு இந்தியாவின் வேட்புமனுவை ஆதரிக்கும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
பிரதமர் மோடி, தனக்கு அளிக்கப்பட்ட அசாதாரண விருந்தோம்பலுக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசுக்கும் மக்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். பரஸ்பரம் வசதியான நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு அவர் அழைப்பு விடுத்தார். பரஸ்பரம் வசதியான நேரத்தில் மீண்டும் டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு, கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் அழைப்பு விடுத்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கான மிகவும் வெற்றிகரமான அதிகாரப்பூர்வ பயணத்தின் விளைவு, இரு நாடுகளுக்கும் இடையே உயர்ந்த இருதரப்பு உறவுகளின் புதிய சகாப்தத்திற்கு வழி வகுக்கும் என்றும், வலுவான, உள்ளடக்கிய மற்றும் எதிர்கால நோக்கில் செயல்படும் இந்தியா-டிரினிடாட் மற்றும் டொபாகோ கூட்டாண்மைக்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என்றும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.