தேசிய ஒற்றுமை தினத்தன்று, நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் தங்களின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் அலுவலக அலுவலகர்கள் இன்று ஒற்றுமை உறுதிமொழி ஏற்றனர்.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உறுதிமொழி செய்து வைத்தார்.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் – 2 திரு சக்திகாந்த தாஸ், பிரதமரின் ஆலோசகர் திரு தருண் கபூர், பிரதமரின் தனிச்செயலாளர் திரு அதீஷ் சந்திரா மற்றும் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தேசிய ஒற்றுமை தினம் கடைப்பிடிப்பது, சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளை, அவரது தொலைநோக்குப் பார்வையான ஒன்றுபட்ட, வலுவான இந்தியா என்பதை கொண்டாடுவதை குறிக்கிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“பிரதமர் அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஒற்றுமை உறுதிமொழி செய்து வைத்தார்.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் – 2 திரு சக்திகாந்த தாஸ், பிரதமரின் ஆலோசகர் திரு தருண் கபூர், பிரதமரின் தனிச்செயலாளர் திரு அதீஷ் சந்திரா மற்றும் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.”
Union MoS @DrJitendraSingh administered the Ekta Pledge in the Prime Minister's Office.
— PMO India (@PMOIndia) October 31, 2025
Principal Secretary to PM, Dr. P.K. Mishra, Principal Secretary-2 to PM, Shri Shaktikanta Das, Advisor to PM, Shri Tarun Kapoor, Special Secretary to PM, Shri Atish Chandra and other… pic.twitter.com/yp8oBurtfb


