அமெரிக்காவை சேர்ந்த ஓப்பன் ஏஐ ஆய்வு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு சாம் ஆல்ட்மேன் இன்று (பிப்ரவரி 20) பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மகத்தான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும், திறமை மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான உலகின் மையமாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

திறன் வாய்ந்த இளைஞர்களை கொண்ட இந்தியாவில் உலக நாடுகள் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென்று பிரதமர் அழைப்பு விடுத்தார். இது இத்துறையில் மாற்றங்களுக்கு வலுசேர்க்கும் என்று அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு சாம் ஆல்ட்மேன் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு மோடி கூறியிருப்பதாவது:
இந்த சந்திப்பு சிறப்பு வாய்ந்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் இந்தியா மகத்தான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. திறன் வாய்ந்த இளைஞர்களை கொண்ட இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். இது இத்துறையில் மேலும் வளர்ச்சிக்கு உதவிடும்.
It was a very good meeting indeed. India is making immense strides in the world of AI. We invite the world to invest in our talented youth and add vigour to this sector.@OpenAI https://t.co/FC3IsVaX23
— Narendra Modi (@narendramodi) February 20, 2026


