பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (26 நவம்பர் 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தின்கீழ், வழித்தடம் 4 (காரடி–ஹடப்சர்–ஸ்வர்கேட்–கடக்வாஸ்லா) மற்றும் பாதை 4ஏ (நல் ஸ்டாப்–வர்ஜே–மாணிக் பாவ்) ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
31.636 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு புனே முழுவதும் உள்ள ஐடி மையங்கள், வணிக மண்டலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளை இணைக்கும். இந்தத் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும். இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிர அரசு மற்றும் வெளிப்புற இருதரப்பு/பன்முக நிதி நிறுவனங்களால் கூட்டாக நிதியளிக்கப்படும்.
கணிப்புகளின்படி, வழித்தடம் 4 மற்றும் 4ஏ-ல் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 2028-ம் ஆண்டில் 4.09 லட்சமாகவும், 2038-ல் சுமார் 7 லட்சமாகவும், 2048-ல் 9.63 லட்சமாகவும், 2058-ல் 11.7 லட்சத்திற்கும் அதிகமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், காரடி-கடக்வாஸ்லா வழித்தடம் 2028-ம் ஆண்டில் 3.23 லட்சம் பயணிகளைக் கொண்டிருக்கும், 2058-ம் ஆண்டில் 9.33 லட்சமாக அதிகரிக்கும், அதே நேரத்தில் நல் ஸ்டாப்-வார்ஜே-மானிக் பாக் ஸ்பர் வழித்தடம் இதே காலகட்டத்தில் 85,555 என்பதிலிருந்து 2.41 லட்சமாக அதிகரிக்கும்.
இந்த ஒப்புதலுடன், புனே மெட்ரோவின் நெட்வொர்க் 100 கிமீ என்பதைக் கடந்து விரிவடையும். இது நவீன, ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து அமைப்பை நோக்கிய நகரத்தின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

A major boost to Pune’s public transport network.
— Narendra Modi (@narendramodi) November 26, 2025
Cabinet approves Phase-2 of Pune Metro (Lines 4 & 4A) connecting various areas of the city. This decision ensures faster and more comfortable commute for the people of Pune, which is an important centre for growth and…


