மகாரத்னா நிறுவனங்களில் 2032-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 60 ஜிகாவாட்டாக அதிகரிக்க தேசிய அனல் மின் கழகத்தின் பசுமை எரிசக்தி நிறுவனத்திற்கான ஒதுக்கீட்டு வரம்பை ரூ.7500 கோடியிலிருந்து ரூ.20,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு உள்ளூர் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. பசுமை எரிசக்தி நிறுவனம் அதன் இலக்கை எட்டுவதால் 2070-க்குள் நிகர பூஜ்ய உமிழ்வு என்ற இலக்கை எட்டுவதற்கு உதவியாக இருக்கும்.
A boost to India's efforts to strengthen renewable energy capacity! https://t.co/yUxehYRRul
— Narendra Modi (@narendramodi) July 16, 2025


