முத்து பதித்த வேலைப்பாடு கொண்ட கலைப் பொருள் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அன்பளிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் வரைபடமும் பிரதமரின் உருவமும் இடம் பெற்றுள்ளது.
முத்துகளாலான இந்த ஓவிய வேலைப்பாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட முத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதை உருவாக்கிய கைவினை கலைஞர் திரு மிகு. குஷ்பூ ஆகாஷ் தவ்தா கூறியுள்ளார். இந்த ஓவியத்தில் சுமார் பத்து மீட்டர் நீளத்திற்கு நூல்இழை பயன்படுத்தப்பட்டுள்ளது. 7 அடிக்கு 7 அடி பரிமாணம் கொண்ட இந்த கலை வேலைப்பாட்டை தயார் செய்ய, சுமார் 850 மணி நேரம் தேவைப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜ்கோட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மோகன்பாய் குந்தாரியா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


