Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
PM Modi responds to passenger from Bihar boarding flight for first time with his father from Darbhanga airport

Media Coverage

PM Modi responds to passenger from Bihar boarding flight for first time with his father from Darbhanga airport
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
அணுஆயுதப் பேரழிவை கட்டவிழ்ப்பது பற்றிய அச்சுறுத்தல் ஆபத்தை விளைவிக்கும் தன்மையுடையதாக உள்ளது, அரசியல் தன்மை உடையதாக இல்லை
September 28, 2019
பகிர்ந்து
 
Comments

தலைவர் அவர்களே,

1. பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு பதிலளிக்கும் இந்தியாவின் உரிமையை செயல்படுத்துவதற்கு இந்த அவையை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

2. மிக உயர்ந்த இந்த அவையின் மேடையில் இருந்து பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது.  துரதிருஷ்டவசமாக இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் இருந்து நாம் கேட்டது.  உலகத்தை இரண்டு கூறுகளாக சித்தரிக்கும் இரக்கமற்ற வார்த்தைகளாகும்.  அமெரிக்கா எதிர் மற்றவர்கள்; வசதிபடைத்தவர்கள் எதிர் ஏழைகள்; வடக்கு எதிர் தெற்கு; வளர்ச்சியடைந்த நாடுகள் எதிர் வளரும் நாடுகள்; முஸ்லீம்கள் எதிர் மற்றவர்கள்; ஐநா சபையில் பாகுபாட்டை உருவாக்குவதாக அந்தப் பேச்சு இருந்தது.  வேறுபாடுகளைக் கூர்மையடையச் செய்வதான, வெறுப்பைத் தூண்டுவதான முயற்சி; சுருக்கமாக சொன்னால் “வெறுப்புப் பேச்சு”.

3. இவ்வாறு ஐநா பொதுச்சபையை அவதூறுக்கும் மேலாக தவறாகப் பயன்படுத்தும் காட்சியை அபூர்வமாகத்தான் இருந்துள்ளது.  ராஜிய அரங்கில் வார்த்தைகள் மிக முக்கியமானவை.  ”இனப்படுகொலை”, “ரத்த வெள்ளம்”, “இன ஆதிக்கம்”, “துப்பாக்கி ஏந்துவோம்”, “இறுதிவரை போர்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது மத்திய கால மனநிலையைப் பிரதிபலிக்கிறதே தவிர, 21 ஆம் நூற்றாண்டின் பார்வையாக இல்லை.

4. அணுஆயுதப் பேரழிவைக் கட்டவிழ்ப்பது பற்றிய பிரதமர் கானின் அச்சுறுத்தல் ஆபத்தை விளைவிக்கும் தன்மையுடையதாக உள்ளதே தவிர, அரசியல் தன்மை உடையதாக இல்லை. 

5. பயங்கரவாத தொழிற்சாலையின் ஏகபோகமாக உள்ள ஒருநாட்டின் தலைவராக வந்திருக்கும் பிரதமர் கானின் பேச்சு பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் திமிர்த்தனமான ஆத்திரமூட்டும் பேச்சாகும். 

6. ஒருகாலத்தில், நாகரீகமான மனிதர்களின் விளையாட்டான கிரிக்கெட்டின் வீரராக இருந்த அவரின் தற்போதைய பேச்சு தாரா ஆதம் கேல் சந்தையின் பலவகை துப்பாக்கிகளை நினைவுப்படுத்தும் முரட்டுத்தனமான பேச்சாக இருந்தது.  

7. பாகிஸ்தானில்  தீவிரவாத அமைப்புகள் இல்லை என்பதை உறுதி செய்ய, பிரதமர் இம்ரான் கான்  ஐநா பார்வையாளர்களைப் பாகிஸ்தானுக்கு அழைத்திருக்கிறார்.  உலகம், இந்த வாக்குறுதியை அவர்  பற்றிநிற்கச் செய்ய வேண்டும்.

8. இந்த சரிபார்ப்புக்கு முன்னதாக பாகிஸ்தான்  ஒருசில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். 

· இப்போதைய நிலவரப்படி ஐநா பட்டியலிட்ட 130 பயங்கரவாதிகளுக்கும், 25 பயங்கரவாதமாக அமைப்புகளுக்கும் புகலிடமாக இருக்கும் உண்மையை பாகிஸ்தான் உறுதி செய்யுமா?

· தடைவிதிக்கப்பட்ட அல்கொய்தா மற்றும் ஐ எஸ் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்று ஐநாவால் அறிவிக்கப்பட்டுள்ள தனிநபர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கும், உலகின் ஒரே அரசு என்பதை பாகிஸ்தான் ஒப்புக் கொள்கிறதா!

· பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததற்காக பல லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதால் நியூயார்க்கில் இருந்த முதன்மை வங்கியான ஹபிப் வங்கி, மூடப்பட்டது பற்றி பாகிஸ்தான் விளக்கமளிக்குமா?

· பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதைக் கண்காணிக்கும் பணிக்குழு  அதன் 27 விதிகளில் 20-க்கும் அதிகமான அத்துமீறல் இருப்பதற்காக பாகிஸ்தான் கண்காணிக்கப்படுவதை அதனால் மறுக்க முடியுமா?

· பிரதமர் கான், ஒசாமா பின்லாடனை வெளிப்படையாக ஆதரித்தவர் என்பதை இந்த நியூயார்க் நகரில் அவரால் மறுக்க முடியுமா?

தலைவர் அவர்களே,

9. பயங்கரவாதத்தை முதன்மையானதாக வைத்துக் கொண்டு வெறுப்பை உமிழ்ந்து பேசும் பாகிஸ்தான், மனித உரிமைகளின் சாம்பியனாக தன்னை காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது.

10. கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், அகமதியர்கள், இந்துக்கள், ஷியாக்கள், பஷ்டூன்கள், சிந்திக்கள், பலுசிஸ்தானிகள் ஆகியோருக்கு எதிராகக் கொடூரமான தெய்வ நிந்தனை சட்டங்கள் இயற்றியும், வழக்கு தொடுத்தும், தவறாகப் பயன்படுத்தியும், பலவந்த மதமாற்றங்கள் செய்தும், சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.  1947 –ல் 23 சதவீத சிறுபான்மை சமூகத்தினரைக் கொண்டிருந்த ஒருநாட்டில் இன்று அவர்களின் எண்ணிக்கை மூன்று சதவீதமாக சுருங்கிவிட்டது. 

11. இவர்களின் புதிய கண்டுபிடிப்பான மனித உரிமைகள் போதனை, மலை ஆடு வேட்டைக்குக் கேடயம் பெறுவதை ஒத்திருக்கிறது. 

12. பிரதமர் இம்ரான்கான் நியாசி அவர்களே, இக்கால துடிப்புமிக்க ஜனநாயகத்தில் இனப்படுகொலை என்பதெல்லாம் நடைமுறையே அல்ல.  வரலாற்றைப் புரிந்து கொள்ள நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.  1971-ல் தங்களின் சொந்த மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் செய்த இனப்படுகொலைகளும், அதில் லெப்டினன்ட் ஜென்ரல் ஏ ஏ கே நியாசியின்  பங்களிப்பும் மறக்க முடியாதவை.  இந்த அவையில்  இன்று பிற்பகல் பங்களாதேஷின் மாண்புமிகு பிரதமர் இந்த உண்மையை நினைவுப்படுத்தினார்.

தலைவர் அவர்களே,

13.   இந்திய மாநிலமான ஜம்மு கஷ்மீரின் ஒருமைப்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் இடையூறாக இருந்த காலாவதியான தற்காலிக அம்சம் ஒன்றை நீக்கியதற்கு பாகிஸ்தானின் தீவிரமான எதிர்வினை என்பது மோதல் போக்கில் அமைதியின் ஒளியை ஒருபோதும் வரவேற்காத தன்மையையே காட்டுகிறது. 

14. அங்கு பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அதிகரித்து வெறுப்புப் பேச்சை பரவச் செய்யும் நிலையில், இந்தியா ஜம்மு கஷ்மீரின் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

15. ஆயிரக்கணக்கான ஆண்டுகால பன்முகப் பாரம்பரியம், சகிப்புத்தன்மை ஆகியவற்றுடனான இந்தியா, ஜம்மு கஷ்மீரிலும், லடாக்கிலும் உயிர்த் துடிப்புமிக்க ஜனநாயகத்தை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறது.  அது உண்மையில் நடந்தும் வருகிறது.  இதனை மாற்ற முடியாது. 

16. இந்திய குடிமக்களுக்காக எவரும், அதிலும் குறிப்பாக  வெறுப்பின் சித்தாந்தத்திலிருந்து பயங்கரவாத தொழிற்சாலையை கட்டமைப்பவர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை.

தலைவர் அவர்களே, உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன்.