"தனிநபர்கள் முதல் நாடுகள் வரை அனைத்து மட்டங்களிலும் வளர்ச்சியில் எரிசக்தி தாக்கத்தை ஏற்படுத்துகிறது"
"இந்தியா தனது புதைபடிவமற்ற நிறுவப்பட்ட மின் திறன் இலக்கை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளது"
"அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த, சமமான மற்றும் நிலையான எரிசக்திக்காக பணியாற்றுவதே எங்கள் முயற்சி"
"ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பசுமை கட்டங்களின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவது, நம் அனைவருக்கும் நமது காலநிலை இலக்குகளை அடையவும், பசுமை முதலீட்டை ஊக்குவிக்கவும், கோடிக் கணக்கான பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்"
‘’நமது எண்ணங்களும் செயல்களும் எப்போதும் நமது 'ஒரே பூமியைப் பாதுகாக்கவும், நமது 'ஒரே குடும்பத்தின்' நலன்களைப் பாதுகாக்கவும், பசுமையான 'ஒரே எதிர்காலத்தை' நோக்கி நகரவும் உதவ வேண்டும்’’

மேதகு பெண்களே, பெருமக்களே, வணக்கம்! உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கு வரவேற்கிறேன். எரிசக்தி  இல்லாமல் எதிர்காலம், நிலைத்தன்மை அல்லது வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய எந்த பேச்சும் முழுமையடையாது. இது தனிநபர்கள் முதல் நாடுகள் வரை அனைத்து மட்டங்களிலும் வளர்ச்சியை பாதிக்கிறது.

நண்பர்களே, 

நமது வெவ்வேறு யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு, ஆற்றல் மாற்றத்திற்கான நமது பாதைகள் வேறுபட்டவை. இருப்பினும், நமது  இலக்குகள் ஒன்றுதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்தில் இந்தியா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இருப்பினும், எங்கள் காலநிலை கடமைகளில் நாங்கள் வலுவாக நகர்ந்து வருகிறோம். காலநிலை நடவடிக்கையில் இந்தியா தலைமையைக் காட்டியுள்ளது. புதைபடிவமற்ற நிறுவப்பட்ட மின் திறன் இலக்கை நாங்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே அடைந்தோம்.  நாங்கள் இப்போது அதிக இலக்கை நிர்ணயித்துள்ளோம். 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீத புதைபடிவமற்ற நிறுவு திறனை எட்ட திட்டமிட்டுள்ளோம். சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. பணிக்குழுப் பிரதிநிதிகள் பாவகடா சோலார் பூங்கா மற்றும் மொதேரா சோலார் கிராமத்தைப் பார்வையிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தூய்மையான எரிசக்திக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அளவையும் அவர்கள் கண்டுள்ளனர்.

நண்பர்களே, 

இந்தியாவில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் 190 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களை எல்பிஜியுடன் இணைத்துள்ளோம். ஒவ்வொரு கிராமத்தையும் மின்சாரத்துடன் இணைக்கும் வரலாற்று மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம். மக்களுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது இன்னும் சில ஆண்டுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை உள்ளடக்கும் திறனைக் கொண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய, நெகிழ்வான, சமமான மற்றும் நிலையான எரிசக்திக்காக பணியாற்றுவதே எங்கள் முயற்சி. 

நண்பர்களே, 

சிறிய படிகள் பெரிய முடிவுகளுக்கு வழிவகுக்கும்.  2015 ஆம் ஆண்டில், எல்.ஈ.டி விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்கி ஒரு சிறிய இயக்கத்தைத் தொடங்கினோம். இது உலகின் மிகப்பெரிய எல்.ஈ.டி விநியோகத் திட்டமாக மாறியது, இது ஆண்டுக்கு 45 பில்லியன் யூனிட்டுகளுக்கும் அதிகமான ஆற்றலை மிச்சப்படுத்துகிறது. உலகின் மிகப்பெரிய விவசாய பம்ப் சோலார்மயமாக்கல் முயற்சியையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்தியாவின் உள்நாட்டு மின்சார வாகனச் சந்தை 2030 ஆம் ஆண்டில் 10 மில்லியன் வருடாந்திர விற்பனையை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளோம். 2025-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் பரவ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்தியாவை கார்பனேற்றம் செய்ய, மாற்றாக பசுமை ஹைட்ரஜனை தீவிரமாக  செயல்படுத்தி வருகிறோம். பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் வழித்தோன்றல்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதே இதன் நோக்கம். எங்கள் கற்றல்களைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நண்பர்களே, 

நிலையான, நியாயமான, மலிவு விலையில், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை முன்னெடுக்க உலகம் இந்தக் குழுவை எதிர்பார்க்கிறது. இதைச் செய்யும்போது, உலகளாவிய தெற்கில் உள்ள நமது சகோதர சகோதரிகள் பின்தங்காமல் இருப்பது முக்கியம். வளரும் நாடுகளுக்கு குறைந்த செலவில் நிதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்ப இடைவெளிகளைக் குறைப்பதற்கும், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்துவதற்கும் நாம் வழிகளைக் கண்டறிய வேண்டும். மேலும், 'எதிர்காலத்திற்கான எரிபொருட்கள்' குறித்த ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும். 'ஹைட்ரஜன் குறித்த உயர்மட்டக் கொள்கைகள்' சரியான திசையில் ஒரு படியாகும். நாடு கடந்த கிரிட் இணைப்புகள் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த முடியும். இந்த பிராந்தியத்தில் உள்ள நமது அண்டை நாடுகளுடன் இந்த பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். நான் உங்களுக்குச் சொல்ல முடியும், நாங்கள் ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காண்கிறோம். ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பசுமைக் கட்டங்களின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இது நம் அனைவருக்கும் நமது காலநிலை இலக்குகளை அடையவும், பசுமை முதலீட்டை ஊக்குவிக்கவும், கோடிக்கணக்கான பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். "ஒரு சூரியன், ஒரே உலகம், ஒரே கட்டம் சர்வதேச சூரியக் கூட்டணி என்னும் பசுமைக் கட்டமைப்புகள் முன்முயற்சியில் இணையுமாறு உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.

நண்பர்களே, 

உங்கள் சுற்றுப்புறத்தை கவனித்துக்கொள்வது இயற்கையானது. அது கலாச்சாரமாகவும் இருக்கலாம். இந்தியாவில், இது நமது பாரம்பரிய ஞானத்தின் ஒரு பகுதியாகும். இங்கிருந்துதான் மிஷன் லைப் அதன் வலிமையைப் பெறுகிறது. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை நம் ஒவ்வொருவரையும் காலநிலை சாம்பியனாக மாற்றும்.

நண்பர்களே, 

நாம் எப்படி மாறினாலும், நமது எண்ணங்களும் செயல்களும் எப்போதும் நமது 'ஒரே பூமியை' பாதுகாக்கவும், நமது 'ஒரே குடும்பத்தின்' நலன்களைப் பாதுகாக்கவும், பசுமையான 'ஒரே எதிர்காலத்தை' நோக்கி நகரவும் உதவ வேண்டும். உங்கள் விவாதங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.நன்றி !

வணக்கம்!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Republic Day sales see fastest growth in five years on GST cuts, wedding demand

Media Coverage

Republic Day sales see fastest growth in five years on GST cuts, wedding demand
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 27, 2026
January 27, 2026

India Rising: Historic EU Ties, Modern Infrastructure, and Empowered Citizens Mark PM Modi's Vision