"கல்வி என்பது நமது நாகரிகத்தை கட்டமைத்த அடித்தளமாக மட்டுமல்ல, அது எதிர்கால மனித சமுதாயத்தை வடிவமைக்கும் சிற்பியாகவும் உள்ளது"
"உண்மையான அறிவு பணிவையும், பணிவிலிருந்து மதிப்பையும், மதிப்பில் இருந்து செல்வத்தையும் தருகிறது, செல்வம் ஒருவருக்கு நற்செயல்களைச் செய்ய உதவுகிறது, அதுவே மகிழ்ச்சியைத் தருகிறது"
"சிறந்த நிர்வாகத்துடன் தரமான கல்வி அளிப்பதே நமது நோக்கமாக இருக்கிறது"
"நமது இளையோரை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த, நாம் தொடர்ந்து அவர்களை திறன், மறுதிறன் மற்றும் திறன்மேம்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும்"
"டிஜிட்டல் தொழில்நுட்பம் கல்வியை பெறுவதில் பன்னோக்கு சக்தியாக திகழ்ந்து எதிர்கால தேவைகளை சார்ந்துள்ளது"

மேன்மைதாங்கியவர்களே, மகளிரே, பண்பாளரே, வணக்கம்!

ஜி20 கல்வித்துறை அமைச்சர்கள் மாநாட்டிற்கு  நான் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கல்வி என்பது நமது நாகரிகத்தைக் கட்டமைத்த அடித்தளம் மட்டுமல்ல, அது எதிர்கால மனித சமுதாயத்தை வடிவமைக்கும் சிற்பியாகவும் உள்ளது. கல்வித்துறை அமைச்சர்களாகிய நீங்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்குமான வளர்ச்சி, அமைதி, செழுமைக்கான முயற்சியில் நீங்கள் முன்னணி வகிக்கின்றனர். கல்வியின் பங்களிப்பு மகிழ்ச்சியை அளிக்கும் கருவியாக திகழ்கிறது என்று இந்திய வேதங்கள் கூறுகின்றன. உண்மையான அறிவு பணிவையும், பணிவிலிருந்து மதிப்பையும், மதிப்பில் இருந்து செல்வத்தையும் தருகிறது,  செல்வம் ஒருவருக்கு நற்செயல்களைச் செய்ய உதவுகிறது. அதுவே மகிழ்ச்சியைத் தருகிறது என்பது  சமஸ்கிருத வரிகளாகும். ஒட்டுமொத்த மற்றும் விரிவான பயணத்தை இந்தியா தொடங்கியுள்ளது. அடிப்படை எழுத்தறிவு முறைகள் இளைஞர்களுக்கான வலுவான அடித்தளமாக இருக்கிறது, இதனை இந்திய தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது. இதற்காக புரிதலுடன் படிப்பதில் புலமை மற்றும் எண்ணறிவு திறமைக்கான தேசிய முன்னெடுப்பு அல்லது அரசின் நிபுன் பாரத் முன்னெடுப்பை நாம் தொடங்கியுள்ளோம். ஜி20-ன் முன்னுரிமையாக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திறமை கண்டறியப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது குறித்து 2030-ம் ஆண்டுக்குள் நாம் அவசியம் கண்டறியவேண்டும்.

 

மேன்மைதாங்கியவர்களே,

புதிய இணையதள வாயிலான கற்பித்தலை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சிறந்த நிர்வாகத்துடன் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும். முன்னேற விரும்புவோரின் செயல்பாட்டுடன் கூடிய கற்றலுக்கான  கற்றல் வலையங்கள் (ஆக்டிவ் லர்னிங்  அல்லது யங் அஸ்பைரிங் மைன்ட்ஸ்  அல்லது ஸ்வயம்) இணையதளங்கள் மூலம் ஒன்பதாம் வகுப்பு பாடம் முதல் முதுநிலைப் படிப்பு வரை கற்பிக்கப்படுகிறது.  எளிதான, சமமான  மற்றும் தரமான முறையில் மாணவர்கள்  கற்றுக்கொள்ள முடிகிறது. 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடங்கள் மற்றும் 34 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள்  பதிவு ஆகியவற்றுடன் இது மிகவும் திறன்வாய்ந்த  கற்பிக்கும் வருவியாக திகழ்கிறது. அறிவுச் பகிர்வுக்கான  டிஜிட்டல் கட்டமைப்பு அல்லது திக்ஷா இணையதளம்  வாயிலாக  தொலைதூர பள்ளிக்கல்வி  கற்பிக்கப்படுகிறது. இது 29 இந்திய மொழிகள் மற்றும் ஏழு வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது. 137 மில்லியனுக்கும் மேற்பட்ட பாடங்கள் இதுவரை நிறைவடைந்துள்ளன. இந்த அனுபவங்களையும்,  ஆதாரங்களையும் மற்ற நாடுகளுடன் குறிப்பாக, உலகின் தென்பகுதி நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதில் இந்தியா மகிழ்ச்சியடையும்.

மேன்மைதாங்கியவர்களே,

நமது இளையோரை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த, நாம் தொடர்ந்து அவர்களுக்கு திறன், மறுதிறன் மற்றும் திறன்களை மேம்படுத்த வேண்டும்.  அவர்களுடைய பணி அனுபவங்கள் மற்றும் பயிற்சிகளுடன் திறமைகளை வகைப்படுத்த வேண்டும். இந்த முன்னெடுப்புடன்  கல்வி, திறன் மற்றும் தொழிலாளர் நல அமைச்சகங்கள் மூலம் திறன் வரைபடத்தை உருவாக்கி வருகிறது  சர்வதேச அளவில் திறன் வரைபடத்தை ஜி20 நாடுகள் உருவாக்க முடியும். அதில் உள்ள இடைவெளிகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம் சமநிலை தன்மையாக  செயலாற்றி வருகிறது.  அனைத்து உள்ளடக்கத்தையும் மேம்படுத்துகிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் சமநிலைப்படுத்துவதில் பங்களித்து, உள்ளடக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது. கல்வியை அணுகுவதில் பன்னோக்கு சக்தியாக  திகழ்ந்து எதிர்காலத் தேவைகளை ஏற்றுக்கொள்கிறது. கற்பித்தல், திறன் மற்றும் கல்வித்துறைகளில்  செயற்கை நுண்ணறிவுக்கு சிறந்த வாய்ப்புள்ளது. தொழில்நுட்பம் மூலம் எழும் வாய்ப்புகள், சவால்களுக்கிடையே சரியான சமநிலையை பராமரிக்க வேண்டியதில் ஜி20 நாடுகளின் பங்களிப்பு அவசியம்.

மேன்மைதாங்கியவர்களே,

ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் குறித்து இந்தியா வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் 10 ஆயிரம் அடல் மேம்படுத்தும் ஆய்வகங்களை இந்தியா அமைத்துள்ளது, இது  நமது பள்ளிக்குழந்தைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புத் தளங்களாக திகழ்கிறது.  இந்த ஆய்வகங்களில் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட புதுமைக் கண்டுபிடிப்புத் திட்டங்களில் 7.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியாற்றுகின்றனர். ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதில்  குறிப்பாக, உலகின் தென்பகுதி நாடுகளுக்கு ஜி20 நாடுகள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். அதிகரிக்கப்பட்ட ஆராய்ச்சி  ஒருங்கிணைப்பிற்கான வழிகளை உருவாக்க வேண்டும்.

மேன்மைதாங்கிவர்களே,

உங்களது கூட்டம் நமது குழந்தைகள் மற்றும் இளையோரின் எதிர்காலத்திற்கு மகத்துவமாக அமைந்துள்ளது. நீடித்த வளர்ச்சிக்கான நோக்கங்களை அடைவதற்கு உந்து சக்தியாக பசுமை மாற்றம், டிஜிட்டல் மாற்றங்கள், மகளிரின் அதிகாரம் ஆகியவற்றை  கண்டறியப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்த அனைத்து முயற்சிகளுக்கும் ஆணி வேராக கல்வி அமைந்துள்ளது. இந்தக் கூட்டம் அனைத்தையும் உள்ளடக்கிய, நடைமுறை சார்ந்த, எதிர்காலக் கல்வித்திட்டம் ஆகியவற்றை கொண்டதாக அமையும் என்று நான் நம்புகிறேன்.  இது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று பொருள்படும் வகையிலான வசுதைவ குடும்பகம் என்ற உண்மையான உத்வேகத்தில் உலகம் முழுமைக்கும் பயனளிக்கும். இந்த ஆரோக்கியமான, வெற்றிகரமான கூட்டத்திற்காக நான் உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From taxes to jobs to laws: How 2025 became India’s biggest reform year

Media Coverage

From taxes to jobs to laws: How 2025 became India’s biggest reform year
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles passing of Shri Biswa Bandhu Sen Ji
December 26, 2025

The Prime Minister, Shri Narendra Modi has condoled the passing of Shri Biswa Bandhu Sen Ji, Speaker of the Tripura Assembly. Shri Modi stated that he will be remembered for his efforts to boost Tripura’s progress and commitment to numerous social causes.

The Prime Minister posted on X:

"Pained by the passing of Shri Biswa Bandhu Sen Ji, Speaker of the Tripura Assembly. He will be remembered for his efforts to boost Tripura’s progress and commitment to numerous social causes. My thoughts are with his family and admirers in this sad hour. Om Shanti."