முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகளுக்கான மாநிலத்தின் மகத்தான திறனை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது: பிரதமர்
நாட்டின் வளர்ச்சியில் கிழக்கு இந்தியா வளர்ச்சி எந்திரமாக உள்ளது; இதில் ஒடிசா முக்கியப் பங்கு வகிக்கிறது: பிரதமர்
கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களால் உந்தப்படும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா இன்று சென்று கொண்டிருக்கிறது: பிரதமர்
ஒடிசா உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது, ஒடிசா புதிய இந்தியாவின் நேர்மறை மற்றும் அசல் தன்மையின் அடையாளமாகும், ஒடிசா வாய்ப்புகளின் நிலமாகும், இங்குள்ள மக்கள் சிறப்பாக செயல்பட எப்போதும் ஆர்வம் காட்டியுள்ளனர்: பிரதமர்
பசுமை எதிர்காலத்திலும் பசுமை தொழில்நுட்பத்திலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது: பிரதமர்
21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த சகாப்தம் இணைக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பல்முனை இணைப்பு பற்றியது: பிரதமர்
ஒடிசாவில் சுற்றுலாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன: பிரதமர்
ஏராளமான இளம் திறமைசாலிகள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு ஏராளமான ஆர்வலர்கள் இருப்பதால், செழிப்பான பொருளாதாரத்திற்கு இந்தியாவில் பெரும் வாய்ப்புகள் உள்ளன:

ஜெய் ஜெகநாத்!

ஒடிசா ஆளுநர் திரு ஹரி பாபு அவர்களே, முதல்வர் திரு மோகன் சரண் மாஜி அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சக அமைச்சர்களே, ஒடிசாவின் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தொழில் மற்றும் வணிக உலகின் முன்னணி தொழில்முனைவோர்களே, முதலீட்டாளர்களே, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஒடிசாவின் என் அன்பான சகோதர சகோதரிகளே!

நாட்டு முன்னேற்றத்தின் வளர்ச்சி இயந்திரமாக கிழக்கு இந்தியாவை நான் கருதுகிறேன். இதில் ஒடிசா முக்கிய பங்கு வகிக்கிறது. உலக வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கைக் கொண்டிருந்தபோது, ​​கிழக்கு இந்தியாவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியது என்பதற்கு வரலாறே சாட்சியாகும். கிழக்கு இந்தியாவில் முக்கிய தொழில்துறை மையங்கள், துறைமுகங்கள், வர்த்தக மையங்கள் இருந்தன. மேலும் ஒடிசாவும் அதில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது. ஒடிசா, தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய வர்த்தக மையமாக இருந்தது.

நண்பர்களே,

இப்போது 21-ஆம் நூற்றாண்டில், ஒடிசா அதன் புகழ்பெற்ற பாரம்பரியத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் சிங்கப்பூர் அதிபர் ஒடிசாவுக்கு வந்திருந்தார். ஒடிசாவுடனான உறவில் சிங்கப்பூர் மிகவும் உற்சாகமாக உள்ளது. ஆசியான் நாடுகளும் ஒடிசாவுடன் வர்த்தகம் மற்றும் பாரம்பரியத்தின் தொடர்பை வலுப்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. சுதந்திரத்திற்குப் பின் எப்போதும் இல்லாத வகையில், இன்று இப்பகுதியில் பல வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் ஒவ்வொரு முதலீட்டாளரிடமும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன், இதுதான் சரியான நேரம். ஒடிசாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் உங்கள் முதலீடு, உங்களை வெற்றியின் புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும், இது மோடியின் உத்தரவாதம்.

 

நண்பர்களே,

கோடிக்கணக்கான மக்களின் அபிலாஷைகளால் உந்தப்பட்டு வரும் இந்தியா இன்று அத்தகைய வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இது ஏ.ஐ-இன் சகாப்தம். செயற்கை நுண்ணறிவு பற்றி விவாதிக்கப்படுகிறது, ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இது  ஏ.ஐ மட்டுமல்ல, இது இந்தியாவின் அபிலாஷை, நமது பலம். மக்களின் தேவைகள் பூர்த்தியாகும் போது அபிலாஷைகள் வளரும். கடந்த பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளித்ததன் பலனை இன்று நாடு கண்டு வருகிறது. இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற மைல் கல்லும் வெகு தொலைவில் இல்லை. கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் பலம் உற்பத்தியிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. இப்போது இந்தியாவின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கு இரண்டு முக்கிய தூண்கள் உள்ளன, ஒன்று நமது புதுமையான சேவைத் துறை, மற்றொன்று இந்தியாவின் தரமான தயாரிப்புகள். நாட்டின் விரைவான முன்னேற்றம் என்பது மூலப்பொருள் ஏற்றுமதியால் மட்டும் சாத்தியமில்லை. அதனால்தான் ஒட்டுமொத்த சூழலையும் மாற்றி, புதிய பார்வையுடன் செயல்படுகிறோம். இங்கிருந்து கனிமங்கள் எடுக்கப்பட்டு, அதன்பிறகு உலகில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு மதிப்புக் கூட்டல் நடைபெற்று, புதிய பொருள் தயாரிக்கப்பட்டு, அதன்பின் அந்த பொருள் இந்தியாவுக்குத் திரும்பும் போக்கு மோடிக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தியா இப்போது இந்தப் போக்கை மாற்றிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள கடலில் இருந்து கடல் உணவு பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் உலகின் வேறு சில நாடுகளில் பதப்படுத்தப்பட்டு சந்தைகளை அடைகிறது. இந்தியா இந்தப் போக்கையும் மாற்றிக்கொண்டிருக்கிறது. ஒடிசாவில் உள்ள வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

இன்று பசுமை வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. காலத்தின் தேவைக்கேற்ப, நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த சிந்தனையுடன், பசுமையான எதிர்காலத்திலும் பசுமை தொழில்நுட்பத்திலும் இந்தியா அதிக கவனம் செலுத்துகிறது. சூரிய சக்தி, காற்று, நீர், பசுமை ஹைட்ரஜன் என எதுவாக இருந்தாலும், இவை வளர்ந்த இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு சக்தி அளிக்கும். ஒடிசாவில் இதற்கான பல வாய்ப்புகள் உள்ளன. இன்று நாட்டில், தேசிய அளவில் பசுமை ஹைட்ரஜன் இயக்கம் மற்றும் சூரியசக்தி திட்டம்  ஆகியவற்றைத் தொடங்கியுள்ளோம்.

 

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் ஒடிசாவுக்கு பெரும் பங்கு உண்டு. வளமான ஒடிசாவை உருவாக்க ஒடிசா மக்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். இந்த உறுதிமொழியை நிறைவேற்ற, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. ஒடிசாவின் திறன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, இங்குள்ள மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்கள் அனைவரின் முதலீடும் உங்கள் தொழிலையும், ஒடிசாவின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

 

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், மிக்க நன்றி.

 

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், மிக்க நன்றி.

 

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Shortcuts will cut you short’: PM Modi’s message for youngsters at former President Kovind’s autobiography launch

Media Coverage

‘Shortcuts will cut you short’: PM Modi’s message for youngsters at former President Kovind’s autobiography launch
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 13, 2026
August 13, 2026

Aatmanirbhar in Motion: Solar Homes, Made-in-India Containers, Record Exports & a Rising Global Footprint Under the Leadership of PM Modi