ஆந்திர ஆளுநர் திரு சையத் அப்துல் நசீர் அவர்களே, முதலமைச்சரும் எனது நண்பருமான திரு சந்திரபாபு நாயுடு அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, ஆற்றல் மிக்க துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் அவர்களே, மாநில அமைச்சர்களே, அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே!
இன்று, நான் அமராவதியின் புனித மண்ணில் நிற்கும்போது, நான் ஒரு நகரத்தை மட்டும் பார்க்கவில்லை. என் கண்களுக்கு முன்பாக ஒரு கனவு உருவாகுவதை நான் காண்கிறேன். ஒரு புதிய அமராவதி, ஒரு புதிய ஆந்திரா என்பதை காண்கிறேன். அமராவதி என்பது பாரம்பரியமும் முன்னேற்றமும் இணைந்து செல்லும் பூமியாகும். புத்த பாரம்பரியத்தின் அமைதியும், ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான ஆற்றலும் அமைந்துள்ள இடத்தில். இன்று, சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இவை வெறும் கான்கிரீட் கட்டுமானங்கள் அல்ல. அவை ஆந்திராவின் விருப்பங்கள் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நம்பிக்கைகளின் உறுதியான அடித்தளங்கள் ஆகும்.
நண்பர்களே,
இந்திரலோகத்தின் தலைநகரம் அமராவதி என்று அழைக்கப்பட்டது, இப்போது அமராவதி ஆந்திராவின் தலைநகரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. இது "தங்க ஆந்திரா" உருவாவதற்கு ஒரு நல்ல அறிகுறியாகும். இந்த "கோல்டன் ஆந்திரா", வளர்ச்சியடைந்த இந்தியா' நோக்கிய பயணத்தை வலுப்படுத்தும். மேலும் அமராவதி "தங்க ஆந்திரா" என்ற பார்வைக்கு உற்சாகமளிக்கும்.
நண்பர்களே,
ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் தன் கனவுகளை நனவாக்கும் நகரமாக அமராவதி இருக்கும். தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி, தூய்மையான தொழில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில், வரும் ஆண்டுகளில், அமராவதி ஒரு முன்னணி நகரமாக உருவெடுக்கும். இந்தத் துறைகள் அனைத்திற்கும், அத்தியாவசிய உள்கட்டமைப்பு மத்திய அரசால் சாதனை வேகத்தில், மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு, தொடக்க காலத்தில், சந்திரபாபு அவர்கள் ஹைதராபாத்தில் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அந்தக் கற்றல்களை இன்று செயல்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
நண்பர்களே,
கடந்த ஆண்டுகளில், மத்திய அரசு அமராவதிக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்கியுள்ளது. இங்கு அடிப்படை உள்கட்டமைப்பை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சந்திரபாபு அவர்கள் தலைமையில் மாநில அரசு அமைக்கப்பட்டதால், முன்னேற்றத்திற்கு முன்னர் தடையாக இருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. மேம்பாட்டுப் பணிகள் விரைவடைந்துள்ளன. உயர் நீதிமன்றம், சட்டமன்றம், செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகை போன்ற முக்கிய கட்டிடங்களின் கட்டுமானத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நண்பர்களே,
கடந்த பத்து ஆண்டுகளில் நாடு இயற்பியல், மின்னணு மற்றும் சமூக உள்கட்டமைப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளது. தற்போது உள்கட்டமைப்பு விரைவாக நவீனமாகி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த முன்னேற்றத்தின் பலன்களை ஆந்திரப் பிரதேசமும் அனுபவித்து வருகிறது. இன்றும் கூட, ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் ஆந்திராவிற்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்தை மேம்படுத்தி, அண்டை மாநிலங்களுடனான தொடர்புகளை மேம்படுத்தும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்வதை எளிதாக்கும் மற்றும் தொழில்களுக்கு அதிக வசதியை உருவாக்கும். சுற்றுலாத் துறை மற்றும் புனித யாத்திரைகளும் மேம்படும். உதாரணமாக, ரேணிகுண்டா-நாயுடுபேட்டா நெடுஞ்சாலையுடன், திருப்பதி பாலாஜி தரிசனம் எளிதாகிவிடும், மேலும் பக்தர்கள் மிகக் குறைந்த நேரத்தில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய முடியும்.
நண்பர்களே,
கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் உற்பத்தித் துறையை மேம்படுத்துகின்றன. அது சிமென்ட், எஃகு அல்லது போக்குவரத்து என எதுவாக இருந்தாலும் அத்தகைய ஒவ்வொரு துறையும் பயனடைகிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டின் நேரடி தாக்கம் நமது இளைஞர்கள் மீது உள்ளது. அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
நண்பர்களே,
சந்திரபாபு அவர்கள், பேசுவதை நாம் இப்போது கேட்டிருக்கிறோம், அப்போது அவர் ஜூன் 21 அன்றைய சர்வதேச யோகா தினத்தைக் குறிப்பிட்டார். சர்வதேச யோகா தினத்திற்கான நாட்டின் முக்கிய நிகழ்வை ஆந்திரப் பிரதேசத்தில் நடத்த என்னை அழைத்ததற்காக சந்திரபாபு அவர்களுக்கும், ஆந்திர அரசு மற்றும் மாநில மக்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த கௌரவத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திரபாபு அவர்கள் குறிப்பிட்டது போல, ஜூன் 21-ம் தேதி ஆந்திரப் பிரதேச மக்களுடன் நானும் யோகாவில் பங்கேற்பேன். உலக அளவிலான ஒரு நிகழ்வு இங்கு நடைபெறும், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமைகிறது. சர்வதேச யோகா தினத்தின் பத்து ஆண்டு பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் என்பதால், இந்த ஆண்டு கொண்டாட்டம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்போது, யோகா மீது உலகளாவிய ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. ஜூன் 21-ம் தேதி, முழு உலகத்தின் பார்வையும் ஆந்திரப் பிரதேசத்தின் மீது இருக்கும். அடுத்த 50 நாட்களில், மாநிலம் முழுவதும் யோகாவை ஊக்குவிக்கும் ஒரு துடிப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மூன்று ஆண்டுகளில் அமராவதியை மட்டுமே மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் ஆந்திரப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

மீண்டும் ஒருமுறை, ஆந்திரப் பிரதேச மக்களுக்கும், இன்று இங்கு கூடியிருக்கும் எனது மதிப்பிற்குரிய சகாக்களுக்கும், நான் உறுதியளிக்கிறேன்.