மாணவர்களுக்கான 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வு - தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையம் மற்றும் சமுந்நதி - தொடங்கிவைத்தார்
7 கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட 7 புத்தகங்களை வெளியிட்டார்.
நினைவு தபால் தலையை வெளியிட்டார்
"இந்திய கலை, கட்டிடக்கலை, வடிவமைப்பு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி, நாட்டின் மாறுபட்ட பாரம்பரியம் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தின் கொண்டாட்டம்"
"புத்தகங்கள் உலகின் ஜன்னல்களாக செயல்படுகின்றன. கலை என்பது மனித மனதின் மகத்தான பயணம்.
"மனித மனதை உள் ஆன்மாவுடன் இணைப்பதற்கும் அதன் திறனை அங்கீகரிப்பதற்கும் கலை மற்றும் கலாச்சாரம் அவசியம்"
"தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையம் இந்தியாவின் தனித்துவமான மற்றும் அரிய கைவினைப்பொருட்களை ஊக்குவிக்க ஒரு தளத்தை வழங்கும்"
"தில்லி, கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் மற்றும் வாரணாசியில் கட்டப்படும் கலாச்சார இடங்கள் இந்த நகரங்களை கலாச்சார ரீதியாக வளப்படுத்தும்"
"கலை, சுவை மற்றும் வண்ணங்கள் இந்தியாவில் வாழ்க்கைக்கு ஒத்ததாகக் கருதப்படுகின்றன"
"இந்தியா உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு, அதன் பன்முகத்தன்மை நம்மை ஒன்றிணைக்கிறது"
"கலை என்பது இயற்கைக்கு ஆதரவானது, சுற்றுச்சூழலுக்கு ஆதரவானது மற்றும் பருவநிலைக்கு ஆதரவானது"

இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள  எனது நண்பர்களே, திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, திரு அர்ஜூன் ராம் மேக்வால் அவர்களே, திருமிகு மீனாட்சி லேகி அவர்களே, திருமிகு  டயானா கெல்லாக் அவர்களே, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்களே, கலை உலகின் புகழ்பெற்ற நண்பர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

 

செங்கோட்டையின் இந்த முற்றம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த கோட்டை வெறும் கட்டிடம் மட்டுமல்ல; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பல தலைமுறைகள் கடந்துவிட்டன, ஆனாலும் செங்கோட்டை உறுதியாகவும், விவரிக்க முடியாததாகவும் உள்ளது. இந்த உலக பாரம்பரிய தளமான செங்கோட்டைக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

நண்பர்களே,

ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தனித்துவமான சின்னங்கள் உள்ளன, அவை அதன் வரலாறு மற்றும் மதிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றன. மேலும், இந்த சின்னங்களை வடிவமைக்கும் பணி நாட்டின் கலை, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையால் செய்யப்படுகிறது. இந்திய கட்டிடக்கலையின் பெருமையை பிரதிபலிக்கும் இதுபோன்ற பல சின்னங்களின் மையமாக தலைநகர் தில்லி திகழ்கிறது. எனவே இந்த நிகழ்ச்சி பல வகைகளில் சிறப்பு வாய்ந்தது.

 

நண்பர்களே,

பாரதம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தேசம். ஒரு காலத்தில் பாரதத்தின் பொருளாதார வளம் பற்றிய கதைகள் உலகுக்குத் தெரிந்தன. இன்றும், பாரதத்தின் கலாச்சாரம் மற்றும் நமது பண்டைய பாரம்பரியம் உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இன்று அந்த பெருமையை 'பாரம்பரியத்தில் பெருமை' என்ற உணர்வோடு நாடு மீண்டும் முன்னெடுத்துச் செல்கிறது. நவீன முறையை உருவாக்க வேண்டும். வெனிஸ், சாவ் பாலோ, சிங்கப்பூர், சிட்னி, ஷார்ஜா மற்றும் துபாய் மற்றும் லண்டனின் கலை கண்காட்சிகள் போன்ற பாரதத்தின் நிகழ்வுகள் உலகமெங்கும்  அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இன்று மனித வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது, தனது சமூகம் ரோபோவைப் போல மாறுவதை யாரும் விரும்பவில்லை. நாம் ரோபோக்களை உருவாக்கவில்லை, மனிதர்களை உருவாக்க வேண்டும். அதற்கு, உணர்வுகள் தேவை, நம்பிக்கை தேவை, நல்லெண்ணம் தேவை, உற்சாகம் தேவை, வீரியம் தேவை. நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையில் வாழ நமக்கு வழிகள் தேவை. இவை அனைத்தும் கலை மற்றும் கலாச்சாரத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன.

 

நண்பர்களே,

இந்த இலக்குகளை அடைவதற்காக, 'தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையம்' இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம் பாரதத்தின் தனித்துவமான மற்றும் அரிய கைவினைப்பொருட்களை ஊக்குவிக்க ஒரு தளத்தை வழங்கும். இது கைவினைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை ஒன்றிணைத்து சந்தைக்கு ஏற்ப புதுமைகளை புகுத்த உதவும். இதன் மூலம், கைவினைஞர்கள் வடிவமைப்பு மேம்பாடு பற்றிய அறிவைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் டிஜிட்டல் சந்தைப்படுத்தலிலும் நிபுணத்துவம் பெறுவார்கள். மேலும் இந்திய கைவினைஞர்கள் நவீன அறிவு மற்றும் வளங்களுடன் உலகம் முழுவதும் தங்கள் முத்திரையைப்  பதிக்கக்கூடிய அளவுக்கு திறமைகளைக் கொண்டுள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

 

நண்பர்களே,

இந்தியாவின் 5 நகரங்களில் கலாச்சார இடங்களை அமைக்கும் செயல்முறையும் ஒரு வரலாற்று நடவடிக்கையாகும். தில்லி மற்றும் கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் மற்றும் வாரணாசியில் கட்டப்படும் இந்த கலாச்சார இடங்கள் இந்த நகரங்களை கலாச்சார ரீதியாக மேலும் செழுமைப்படுத்தும். இந்த மையங்கள் உள்ளூர் கலையை வளப்படுத்த புதுமையான யோசனைகளை முன்வைக்கும். பாரதத்தில் கலை, சுவை, வண்ணங்கள் ஆகியவை வாழ்க்கைக்கு இணையானவையாகக் கருதப்படுகின்றன.

நண்பர்களே,

பல கலை வடிவங்கள் நம் நாட்டில் உள்ளன. இது பாரதத்தின் பண்டைய வரலாறு, இன்றும் பாரதத்தின் ஒவ்வொரு மூலையிலும் அதன் சுவடுகளைக் காண்கிறோம். எனது தொகுதியான காசி இதற்கு சிறந்த உதாரணம். கலை வடிவங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் கலை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவை மனித நாகரிகத்தின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் ஆதாரங்களாக உள்ளன. நாம் உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு, ஆனால் அதே நேரத்தில் அந்த பன்முகத்தன்மை நம்மை ஒன்றிணைக்கிறது.

 

நவீன அறிவியல் தரத்தில் ஆயுர்வேதத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் தொடங்கியபோது, முழு உலகமும் அதன் முக்கியத்துவத்தைப்  புரிந்து கொண்டது. நம் கலாச்சார விழுமியங்களை மனதில் கொண்டு நிலையான வாழ்க்கை முறைக்கான புதிய தேர்வுகளையும் தீர்மானங்களையும் நாம் செய்தோம். இன்று, லைஃப் இயக்கம் போன்ற பிரச்சாரங்கள் மூலம், முழு உலகமும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஒளியைப் பெறுகிறது. கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புத் துறையில் வலுவான பாரதம் உருவாகும்போது, அது முழு மனிதகுலத்திற்கும் பயனளிக்கும்.

 

நண்பர்களே,

தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே நாகரிகங்கள் செழித்து வளர்கின்றன. எனவே, இந்த திசையில் உலகின் மற்ற அனைத்து நாடுகளின் பங்களிப்பு, அவர்களுடனான நமது கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. மேலும் பல நாடுகள் ஒன்றிணைவதால், இந்த நிகழ்வு மேலும் விரிவடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நிகழ்வு இந்த திசையில் ஒரு முக்கியமான தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த உணர்வில், உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

 

தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே நாகரிகங்கள் செழித்து வளர்கின்றன. எனவே, இந்த திசையில் உலகின் மற்ற அனைத்து நாடுகளின் பங்களிப்பு, அவர்களுடனான நமது கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. மேலும் பல நாடுகள் ஒன்றிணைவதால், இந்த நிகழ்வு மேலும் விரிவடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நிகழ்வு இந்த திசையில் ஒரு முக்கியமான தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த உணர்வில், உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors

Media Coverage

PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 12, 2025
December 12, 2025

Citizens Celebrate Achievements Under PM Modi's Helm: From Manufacturing Might to Green Innovations – India's Unstoppable Surge