"அடிமைப்பட்டிருந்த காலத்தில், நாட்டில் சுவாமி விவேகானந்தர் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் ஊக்குவித்தார்"
"ராமர் கோயில் குடமுழுக்கு நன்னாளில் நாட்டின் அனைத்து கோயில்களிலும் தூய்மை இயக்கத்தை மேற்கொள்ளுங்கள்"
"புதிய திறமையான சக்தியாக உலகம் இந்தியாவைப் பார்க்கிறது"
"இன்றைய இளைஞர்கள் வரலாறு படைக்கவும், தங்கள் பெயர்களை வரலாற்றில் பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது"
"இன்று, நாட்டின் மனநிலையும், நடைமுறையும் இளமையாக உள்ளன"
“அமிர்த காலத்தின் வருகை இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது. 'வளர்ச்சியடைந்த பாரதம்’' உருவாக்க இளைஞர்கள் இந்த அமிர்த காலத்தில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்”
"ஜனநாயகத்தில் இளைஞர்களின் அதிக பங்கேற்பு நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்"
"முதல் முறை வாக்காளர்கள் இந்திய ஜனநாயகத்திற்கு புதிய ஆற்றலையும் வலிமையையும் கொண்டு வர முடியும்"
"அமிர்த காலத்தின் வரவிருக்கும் 25 ஆண்டுகள் இளைஞர்களுக்கு கடமைக்காலம். இளைஞர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றினால், சமுதாயம் முன்னேறும்

பாரத் மாதாவுக்கு ஜே!

பாரத் மாதாவுக்கு ஜே!

பாரத் மாதாவுக்கு ஜே!

 

மகாராஷ்டிராவின் முதலமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே , எனது அமைச்சரவை சகாக்கள் அனுராக் தாக்கூர், பாரதி பவார், நிசித் பிரமானிக், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்கள்  தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார், அரசின்  பிற அமைச்சர்கள், புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் எனது இளம் நண்பர்களே!

 

காலனித்துவ சகாப்தத்தில் இந்தியாவுக்கு புதிய உத்வேகத்தை அளித்த மாமனிதருக்கான அர்ப்பணிக்கப்பட்ட இந்திய இளைஞர் சக்தியின் கொண்டாட்டத்தை இன்று குறிக்கிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் உங்கள் அனைவருடனும் நாசிக்கில் இருப்பது எனது பாக்கியம். அனைவருக்கும் இனிய தேசிய இளைஞர் தின நல்வாழ்த்துக்கள். பாரதத்தின் பெண் சக்தியின் சின்னமான ராஜமாதா ஜிஜாவ் மா சாஹேப்பின் பிறந்த தினம் இன்று.

ராஜ்மாதா ஜிஜாவு மா சாஹேப்பின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக வீர பூமியான மஹாராஷ்டிராவுக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

பாரதத்தின் பல பெரிய ஆளுமைகள் மகாராட்டிர மண்ணுடன் வலுவான உறவுகளைக் கொண்டிருப்பது வெறும் தற்செயலானது அல்ல. இது இந்த புனிதமான, வீர பூமியின் தாக்கமாகும்.

இந்த மண்ணில், ராஜமாதா ஜிஜாவ் மா சாஹேப் போன்ற ஒரு தாய் சத்ரபதி சிவாஜி மகாராஜைப் போன்ற ஒரு பெரிய வீரரைப் பெற்றெடுத்தார். தேவி அகல்யா பாய் ஹோல்கர், ரமாபாய் அம்பேத்கர் போன்ற குறிப்பிடத்தக்க பெண்களை இந்த நிலம் நமக்கு வழங்கியது.

 

லோக்மான்ய திலகர், வீர் சாவர்க்கர், அனந்த் கன்ஹேரே, தாதாசாகேப் போட்னிஸ், சபேகர் பந்து போன்ற குறிப்பிடத்தக்க நபர்களையும் இந்த நிலம் உருவாக்கியது. பகவான் ஸ்ரீ ராமர் இந்த நாசிக்-பஞ்சவடி தேசத்தில் கணிசமான நேரத்தை செலவிட்டார். இன்று இந்த மண்ணுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

நாடு முழுவதும் உள்ள புனித தலங்கள் மற்றும் கோவில்களில், வரும், 22ம் தேதி வரை, துாய்மை இயக்கம் மேற்கொள்ள வேண்டும் என, ஏற்கனவே வலியுறுத்தினேன்.

இன்று, கலாராம் கோயிலுக்குச் சென்று தூய்மைப் பணியில் பங்கேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ராமர் கோயில் குடமுழுக்கு விழாவின் புனிதமான சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட முயற்சிகள் மூலம் பங்களிக்கும் வகையில் அனைத்து கோயில்கள் மற்றும் யாத்திரை பகுதிகளில் தூய்மைப் பணிகளைத் தொடங்குமாறு மக்களை நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

என் இளம் நண்பர்களே,

நம் நாட்டில் உள்ள முனிவர்கள், அறிஞர்கள், மகான்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் இளைஞர் சக்தியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து அங்கீகரித்துள்ளனர். இந்தியா அதன் இலக்குகளை அடைய, இளைஞர்கள் சுதந்திரமான சிந்தனையுடன் முன்னேற வேண்டும் என்று ஸ்ரீ அரவிந்தர் வலியுறுத்தினார். இந்தியாவின் அபிலாஷைகள் அதன் இளைஞர்களின் பண்பு, அர்ப்பணிப்பு மற்றும் புத்திக்கூர்மையைப் பொறுத்தது என்பதையும் சுவாமி விவேகானந்தர் எடுத்துரைத்தார்.

சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் ஆகியோரின் வழிகாட்டுதல் 2024 ஆம் ஆண்டிலும் இந்திய இளைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இன்று, இந்தியாவின் இளைஞர்களின் சக்தி காரணமாக, இந்தியா உலகளவில் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.

 

இந்தியாவின் இளைஞர்கள் நாட்டை உலகளவில் முதல் மூன்று ஸ்டார்ட்அப் சூழல் அமைப்புகளுக்குள் கொண்டு சென்றுள்ளனர். இந்தியா பல கண்டுபிடிப்புகளைக் காண்கிறது, சாதனை எண்ணிக்கையில் காப்புரிமைகளை தாக்கல் செய்கிறது. உலகளவில் ஒரு குறிப்பிடத்தக்க உற்பத்தி மையமாக வளர்ந்து வருகிறது - இவை அனைத்தும் இந்திய இளைஞர்களின் திறன் மற்றும் திறமையால் சாத்தியமாகின்றன.

நண்பர்களே,

இறுதியாக, அரசியல் மூலம் நாட்டுக்கு சேவை செய்வது குறித்த குறிப்பை தருகின்றேன். நான் உலகத் தலைவர்கள் அல்லது முதலீட்டாளர்களை சந்திக்கும் போதெல்லாம், அது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. ஜனநாயகத்தின் காரணமாகவே, இந்த நம்பிக்கையும் அபிலாஷைகளும் உள்ளன; இந்தியா ஜனநாயகத்தின் தாய். ஜனநாயகத்தில் இளைஞர்களின் ஈடுபாடு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.

இளைஞர்கள் தீவிர அரசியலில் இறங்கினால் வாரிசு அரசியலின் தாக்கம் குறையும். வாரிசு அரசியல் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தில் பங்கேற்பதற்கான மற்றொரு முக்கியமான வழி வாக்களிப்பதன் மூலம் உங்கள் கருத்தை வெளிப்படுத்துவதாகும். வாழ்க்கையில் முதல் முறையாக வாக்களிக்கும் பலர் உங்களில் இருப்பார்கள். முதல் முறை வாக்காளர்கள் நமது ஜனநாயகத்திற்கு புதிய ஆற்றலையும் வலிமையையும் கொண்டு வர முடியும். எனவே, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்ய, முழு செயல்முறையையும் விரைவில் முடிக்கவும். உங்கள் அரசியல் கருத்துக்களை விட, நாட்டின் எதிர்காலத்திற்காக நீங்கள் வாக்களித்து பங்கேற்பது முக்கியம்.

 

நண்பர்களே,

அடுத்த 25 ஆண்டுகளுக்கான 'அமிர்த காலம்' உங்களுக்கு கடமைக் காலம் ஆகும். கடமைகளை முதன்மையாக வைத்திருப்பது சமூக மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தவரை 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். போதைப் பொருள் மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விலகி இருங்கள், பெண்களுக்கு எதிராக தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தும் போக்குக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள். அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நான் ஒரு வேண்டுகோளை விடுத்தேன், அதை இன்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

 

நண்பர்களே, நீங்கள் அனைவரும், நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் ஒவ்வொரு பொறுப்பையும் பக்தியுடனும் திறமையுடனும் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வலிமையான, திறமையான இந்தியாவின் கனவை நனவாக்க நாம் ஏற்றிய தீபம் நித்திய ஒளியாக மாறி இந்த அமிர்த காலத்தில் உலகை ஒளிரச் செய்யும். இந்தத் தீர்மானத்துடன், உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

 

பாரத் மாதாவுக்கு ஜே!

பாரத் மாதாவுக்கு ஜே!

பாரத் மாதாவுக்கு ஜே!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

 

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

 

நன்றி!

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's exports growth momentum continues, services trade at all-time high in 2023-24

Media Coverage

India's exports growth momentum continues, services trade at all-time high in 2023-24
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 16, 2024
April 16, 2024

Viksit Bharat – PM Modi’s vision for Holistic Growth