“அமலாக்கம் மற்றும் உரிய காலத்தில் விநியோகிப்பதன் கண்ணோட்டத்தில் இந்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக பயன்படுத்தப்படுவதையும் இது உறுதி செய்கிறது”
“சிறந்த ஆளுகையில் நாம் அதிக கவனம் செலுத்தினால் கடைசி மைலை சென்றடையும் நமது இலக்கை மிக சுலபமாக அடைய முடியும்”
‘கடைக்கோடியும் சென்றடைதல்’ அணுகுமுறையும், முழுமையான நிலை என்ற கொள்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது”
“அனைவரையும் சென்றடைவது என்பது நமது இலக்காக இருக்கும் போது ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழலுக்கு ஒருபோதும் வாய்ப்பு இருக்காது”
“ஊரகப் பகுதிகள் மற்றும் பழங்குடிப் பகுதிகளை சென்றடையும் தாரக மந்திரத்திற்கு இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது”
“பழங்குடி சமூகத்தின் மிகப்பெரிய திறனை முதன் முறையாக இந்த அளவுக்கு நாடு பயன்படுத்துகிறது”
“பழங்குடி சமூகத்தில் மிகவும் நலிவடைந்தவர்களுக்கான சிறப்பு இயக்கத்தின் கீழ் விரைவாக வசதிகளை அளிப்பதற்கு ஒட்டுமொத்த நாட்டின் அணுகுமுறை அவசியமாகிறது”
‘கடைக்கோடியும் சென்றடைதலில்’ முன்ன

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அரசு ஒரு படி முன்னேறி, பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்துக்களை சம்பந்தப்பட்டவர்களுடன் பரிமாறிக் கொள்ளும் புதிய நடைமுறையை அரசு கடந்த சில ஆண்டுகளாக தொடங்கியுள்ளது. அமலாக்கம் மற்றும் உரிய காலத்தில் விநியோகிப்பதன் கண்ணோட்டத்தில் இந்த பட்ஜெட்டுக்கு பிந்தைய  கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

நண்பர்களே,

வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக பயன்படுத்தப்படுவதையும் இது உறுதி செய்கிறது. வளர்ச்சிக்கு, நிதியுடன் அரசியல் உறுதிப்பாடும் அவசியம். சிறந்த ஆளுகையில் நாம் அதிக கவனம் செலுத்தினால் கடைநிலையை அடையும் நமது இலக்கை மிக சுலபமாக அடைய முடியும். தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களையும் சென்றடையும் சிறந்த ஆளுகையின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு இந்திரதனுஷ் இயக்கம் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசியை செலுத்துவதில் பின்பற்றப்பட்ட புதிய அணுகுமுறைகளை உதாரணமாகும்.

நண்பர்களே,

கடைநிலையை அடையும் அணுகுமுறையும், முழுமையான நிலை என்ற கொள்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது. முந்தைய காலத்தில் அடிப்படை வசதிகளை வேண்டி ஏழை மக்கள் அரசிற்கு பின்னால் சென்றிருந்த காலம் மாறி, தற்போது ஏழைகளின் இருப்பிடத்தை அரசு சென்றடைகிறது. அனைத்துப் பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சென்றடைய வேண்டும் என்று நாம் முடிவு செய்யும் நாள்தான், உள்ளூர் அளவில் பணி கலாச்சாரத்தில் பெரும் மாற்றத்தை நாம் சந்திக்க முடியும். முழுமையான நிலை என்ற கொள்கையின் பின்னணியில் உள்ள உணர்வு இதுதான். அனைவரையும் சென்றடைவது என்பது நமது இலக்காக இருக்கும் போது ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழலுக்கு ஒருபோதும் வாய்ப்பு இருக்காது. கடைநிலையை அடையும் இலக்கை அப்போதுதான் நம்மால் முழுமையாக எட்ட முடியும். நடைபாதை வியாபாரிகளை வங்கியோடு முறையாக இணைக்க வகை செய்யும் பிரதமரின் ஸ்வநிதித் திட்டம், சீர்மரபினர், நாடோடிகள், குடிநிரந்தரமற்றோருக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம், ஊரகப் பகுதிகளில் 5 லட்சம் பொது சேவை மையங்கள் மற்றும் 10 கோடி பேருக்கு தொலை - மருத்துவ சேவை வசதி வழங்கப்பட்டிருப்பது கடைகோடியையும் சென்றடைவதற்கான எடுத்துக்காட்டுகள்.

நண்பர்களே,

இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நலத்திட்ட உதவிகள், பழங்குடியினர் மற்றும் ஊரகப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு முற்றிலும் சென்றடையும் நோக்கத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அம்ரித் சரோவர்-எதிர்காலத்திற்காக நீர் ஆதாரத்தை பாதுகாத்தல் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் நீர் ஆதார அமைப்புகள் அமைப்பதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் 30 ஆயிரம் திட்டப்பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டன. இந்த இயக்கங்கள் மூலம் பல தசாப்தங்களாக பல்வேறு வசதிகளுக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்த தொலைதூரத்தில் வாழும் இந்தியர்களின் வாழ்வாதாரங்கள் மேன்மை அடைந்துள்ளன.

நண்பர்களே,

நாம் இதோடு நின்றுவிடக் கூடாது. புதிய நீர் இணைப்புகள் உருவாக்குவது தொடர்பான நடைமுறை அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் நீர் ஆதாரம் தொடர்பான அமைப்புகளை எவ்விதம் வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து சீராய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

நண்பர்களே,

அனைவருக்கும் வீட்டுவசதி கிடைக்கும் வகையில் எவ்விதம் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து துறைசார்ந்த வல்லுநர்கள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். சூரியசக்தி கிடைப்பதற்காக எளிமையான முறைகளைக் கண்டறிய வேண்டும். நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் தொகுப்பு வீட்டு வசதி திட்டங்களை உருவாக்கவேண்டும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏழைகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக 80,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

முதல் முறையாக நமது நாட்டின் பழங்குடி சமூகத்தின் பிரம்மாண்டமான வளம் பெருமளவிற்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பழங்குடியின மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏக்லாவியா உறைவிடப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை அறியவேண்டும். இந்தப் பள்ளிகளில் கூடுதலாக அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை உருவாக்குவதற்கும், புத்தொழில்களுடன் தொடர்புடைய அம்சங்களுக்காகப் பயிலரங்குகளை நடத்துவதற்கு வழிவகைகளைக் காணவேண்டும்.

நண்பர்களே,

பழங்குடி சமூகங்களுக்கிடையே மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் முறையாக சிறப்பு இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 200-க்கும் அதிகமான மாவட்டங்களில் 22,000-க்கும் அதிகமான கிராமங்களில் நமது பழங்குடி நண்பர்களுக்கு அதிவேகமாக வசதிகளை நாம் வழங்கவிருக்கிறோம். அரிவாள் வடிவ செல்களால் ஏற்படும் நோயிலிருந்து முற்றிலுமாக விடுபடவும் பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒட்டுமொத்த தேசம் என்ற அணுகுமுறை தேவைப்படுகிறது. சுகாதாரத்தோடு தொடர்புடைய அனைவரும் அதிவேகமாக பணியாற்ற வேண்டியுள்ளது.

நண்பர்களே,

கடைக்கோடி பகுதியையும் சென்றடைவது என்ற வகையில், முன்னேறவிரும்பும் மாவட்டத் திட்டம் வெற்றிகரமான முன்மாதிரியாக உருவாகியுள்ளது. இந்த அணுகுமுறையை மேலும் முன்னெடுத்துச் செல்ல நாட்டின் 500 வட்டாரங்களில் முன்னேற விரும்பும் வட்டாரத் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முன்னேற விரும்பும் வட்டாரத் திட்டங்களைப் பொறுத்தவரை, முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்காகப் பணியாற்றிய அதே வழிமுறையுடன் ஒப்பீட்டு அளவுகளை மனதில் கொண்டு நாம் செயல்படவேண்டியுள்ளது.

அரசின்  நலத்திட்டங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஏழையும் தன்னையும் தன் குடும்பத்தையும் வறுமையிலிருந்து வெளியில் கொண்டுவரவேண்டும். இதற்கான சூழலை நாம் ஏற்படுத்தவேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கிறேன். இணையவழிக்கருத்தரங்கு அனைவரின் மகிழ்ச்சி  மற்றும் நலனுக்கு வழிவகுப்பதாக அமையும் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்! நன்றி !

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Parliament clears SHANTI Bill, opening India’s nuclear sector to private players

Media Coverage

Parliament clears SHANTI Bill, opening India’s nuclear sector to private players
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the enduring benefits of planting trees
December 19, 2025

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam that reflects the timeless wisdom of Indian thought. The verse conveys that just as trees bearing fruits and flowers satisfy humans when they are near, in the same way, trees provide all kinds of benefits to the person who plants them, even while living far away.

The Prime Minister posted on X;

“पुष्पिताः फलवन्तश्च तर्पयन्तीह मानवान्।

वृक्षदं पुत्रवत् वृक्षास्तारयन्ति परत्र च॥”