கல்வியை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு திறன்களுடன் இணைக்க எடுத்த முயற்சிகளை பட்ஜெட் விரிவாக்குகிறது

வணக்கம்!!

கல்வி, திறன், ஆராய்ச்சி மற்றும் இது போன்ற முக்கியமான துறைகளுடன் தொடர்புடைய அனைத்து பிரமுகர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 நாடு தனது தனிப்பட்ட, அறிவுசார், தொழில்துறை மனோபாவம் மற்றும் திறமை ஆகியவற்றின் முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் மாற்றுவதை நோக்கி வேகமாக நகரும் நேரத்தில், இந்த ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. 

இதற்கு மேலும் உத்வேகம் அளிக்க பட்ஜெட்டுக்கு முன்னதாக உங்கள் அனைவரிடமிருந்தும் ஆலோசனைகள் கேட்கப்பட்டன. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, நாட்டின் கோடிக்கணக்கான மக்களிடம் கலந்தாலோசித்தோம். தற்போது அதை அமல்படுத்துவது நோக்கி நாம் செல்ல வேண்டும்.

நண்பர்களே,

தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாட்டின் இளைஞர்கள் இடையே தன்னம்பிக்கை அவசியமானதாகும். இளைஞர்களுக்கு தங்களின் கல்வியிலும், அறிவிலும், முழு நம்பிக்கை இருக்கும்போதுதான், தன்னம்பிக்கை வருகிறது.   தங்களது படிப்புகள், வேலை வாய்ப்பு மற்றும் தேவையான திறமைகளை வழங்கும்போதுதான் அவர்களுக்கு தன்னம்பிக்கை வருகிறது.

 இந்த சிந்தனையுடன் தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப கல்விக்கு முந்தைய வகுப்புகளில் இருந்து பி.எச்.டி ஆய்வு படிப்புகள் வரை தேசிய கல்விக் கொள்கையின் விதிமுறைகளை அமல்படுத்த நாம் விரைவாக பணியாற்ற வேண்டும். இதற்கு இந்தாண்டு பட்ஜெட் உதவியாக இருக்கும்.

பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு அடுத்த படியாக இந்தாண்டில், மிகப் பெரிய அளவில் கவனம் செலுத்தப்பட்டது கல்வி, திறன், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மீது ஆகும்.

நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இடையே சிறந்த ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும். 

நண்பர்களே,

திறன் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பயிற்சிக்கு இந்த பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இதற்கு முன் இல்லாதது. பல ஆண்டுகளாக கல்வியை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு திறன்களுடன் இணைப்பதற்கான முயற்சிகளை இந்த பட்ஜெட் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

இந்த முயற்சிகள் காரணமாக, அறிவியல் வெளியீடுகள், பி.எச்.டி ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கை, மற்றும் தொடக்க நிறுவனங்களின் சூழல் ஆகியவற்றில் உலகின் முதல் மூன்று நாடுகளின் பட்டியலில் இந்தியாவும்  இடம் பெற்றுள்ளது.

 

 உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு பட்டியலில், முதல் 50 இடங்களில் இந்தியாவும் இணைந்துள்ளது மற்றும் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறது.  உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பில் நிலையான வளர்ச்சியுடன், மாணவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் புதிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் பங்கேற்பு திருப்திகரமாக உள்ளது. இது நல்ல விஷயம்.

நண்பர்களே,

பள்ளிகளில் உள்ள அடல் பயிற்சி கூடங்கள் முதல் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள பயிற்சி மையங்கள் வரை பல விஷயங்களில் முதல் முறையாக கவனம் செலுத்தப்படுகிறது.  தொடக்க நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப போட்டி என்ற புதிய பாரம்பரியம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த தொழில்நுட்ப போட்டி, நாட்டின் இளைஞர்களுக்கும், தொழிற்துறைக்கும் மிகப் பெரிய சக்தியாக உருவாகி வருகிறது. புதுமைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும், தேசிய முன்முயற்சி மூலம், 3500-க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள்  வளர்க்கப்படுகின்றன. 

 அதேபோல், தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் திட்டம் மூலம், பரம் சிவாய், பரம் சக்தி மற்றும் பரம் பிரம்மா என்ற மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்கள் புவனேஸ்வர் ஐஐடி, காரக்பூர் ஐஐடி மற்றும் புனே ஐஐஎஸ்இஆர்  ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

 நாட்டில் உள்ள இன்னும் பல உயர் நிறுவனங்கள் சூப்பர் கம்ப்யூட்டர்களை  பெறவுள்ளன.

காரக்பூர் ஐஐடி, தில்லி ஐஐடி, புவனேஸ்வர் ஐஐடி ஆகியவற்றில்  3 அதி நவீன  பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப உதவி மையங்கள் செயல்படுகின்றன.

இவற்றையெல்லாம் குறிப்பிடுவது இன்று முக்கியமானது. ஏனென்றால், இது அரசின் தொலைநோக்கையும், அணுகுமுறையையும் வெளிகாட்டுகிறது.

21ம் நூற்றாண்டு இந்தியாவில், 19ம் நூற்றாண்டின் அணுகுமுறையை பின்னுக்குத் தள்ளி நாம் முன்னேற வேண்டும்.

நண்பர்களே,

அறிவுதான் சொத்து. இது பகிர்வதன் மூலம் வளர்கிறது. இதை ஒருவருக்குள்ளேயே வைத்திருக்க கூடாது.

ஆகையால், அறிவை பகிர்வது விலை மதிப்பு மிக்கது. அறிவையும் ஆராய்ச்சியையும் கட்டுப்படுத்துவது நாட்டின் ஆற்றலுக்கு பெரும் அநீதி.   திறமையான இளைஞர்களுக்கு விண்வெளி, அணுசக்தி, டிஆர்டிஓ மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் பல வழிகள் திறந்துவிடப்படுகின்றன. 

வானிலை தொடர்பான விஷயங்களில், முதல் முறையாக  சர்வதேச தரத்தை நாடு எட்டியுள்ளது. இது  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது மற்றும் நமது உலகளாவிய போட்டித்திறனையும் அதிகரித்துள்ளது.

மேலும், புவி-இடம் சார்ந்த தரவுகள் துறையிலும், முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

விண்வெளி தரவுகள், விண்வெளி தொடர்பான தொழில்நுட்பங்கள் இளைஞர்களுக்கு  சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளன. இது விண்வெளித் துறை மற்றும் நாட்டின் இளம் தொழில் முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு  மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த சீர்திருத்தங்களை அனைவரும் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

தேசிய ஆய்வு நிறுவனமும், நாட்டில் முதல் முறையாக அமைக்கப்படுகிறது.  இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சி தொடர்பான நிறுவனங்களின் நிர்வாக அமைப்பை வலுப்படுத்தும் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தொடர்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும்.

உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிக்கு, இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு  100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இது அரசின் முன்னுரிமைகளை காட்டுகிறது.  

நண்பர்களே,

மருந்து மற்றும் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ள இந்திய ஆராய்ச்சியாளர்கள், நாட்டுக்கு பாதுகாப்பையும், மரியாதையையும் உறுதி செய்துள்ளனர். 

நாட்டில் உள்ள ஏழு மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்களின் ஆற்றலை பலப்படுத்த, அவற்றை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையங்களாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

மருந்தியல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறையின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது. இது எதிர்காலத்தில் மேலும் விரிவடையும்.

நண்பர்களே,

நாட்டின் உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் வேளாண்மையின் நலனுக்காக,  உயிரி தொழில்நுட்பத்தில் ஆற்றலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகளின் வருவாய் மற்றும் நலனை அதிகரிக்க, உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நாடு அதிகம் எதிர்பார்க்கிறது.

நண்பர்களே,

எரிசக்தித் துறையில் தன்னம்பிக்கைக்கு, எதிர்கால எரிபொருள் மற்றும் பசுமை எரிசக்தி அவசியம்.  இதற்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஹைட்ரஜன் திட்டம் தீவிரமான வாக்குறுதி ஆகும்.  ஹைட்ரஜன் வாகனங்களை இந்தியா பரிசோதித்துள்ளது.  ஹைட்ரஜனை போக்குவரத்துக்கான எரிபொருளாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொண்டு நமது தொழில்துறையை தயார்படுத்த  வேண்டும்.

 மேலும், கடல் வள ஆராய்ச்சியையும் நாம் அதிகரிக்க வேண்டும். இதற்காக, ஆழ்கடல் திட்டத்தை அரசு தொடங்கவுள்ளது.

நண்பர்களே,

கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழிற்துறையினர் இடையேயான ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும்.  இந்திய திறமைசாலிகளுக்கு தேவை அதிகமாக உள்ளது.

 திறமைசாலிகளை ஒன்றிணைக்க வேண்டும்.  அதற்கேற்ப இளைஞர்களை தயார் செய்ய வேண்டும்.   திறன் மேம்பாட்டுக்கு சர்வதேச நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் அழைக்க வேண்டும். 

இந்த பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள எளிதான பயிற்சித் திட்டம்,  நாட்டின் இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

நண்பர்களே,

உள்ளூர் மொழிகளை அதிகம் பயன்படுத்துவதற்கு, புதிய கல்விக் கொள்கை ஊக்குவித்துள்ளது. 

நாட்டின் மற்றும் உலகின் சிறந்த விஷயங்களை இந்திய மொழிகளில் தயாரிக்க வேண்டியது, இனி  கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு மொழி நிபுணர்களின் பொறுப்பு. தொழில்நுட்ப யுகத்தில் இது சாத்தியம். ஆரம்ப கல்வி முதல், உயர் கல்வி வரை, அனைத்து பாடங்களும் இந்திய மொழிகளில் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்திய மொழிகளில் உருவாக்குவது அவசியம்.  இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தேசிய மொழி பெயர்ப்பு திட்டம், மிகுந்த ஊக்குவிப்பாக இருக்கும்.

நண்பர்களே,

அனைத்து விதிமுறைகள்  மற்றும் சீர்திருத்தங்கள் அனைவரின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்.  புதிய திட்டங்களை விரைவில் அமல்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த இணைய கருத்தரங்குக்கும், உங்களின் சிந்தனைகளுக்கும், சிறந்த திட்டத்துக்கும்  எனது வாழ்த்துக்கள். நன்றி!

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's Q3 GDP grows at 8.4%; FY24 growth pegged at 7.6%

Media Coverage

India's Q3 GDP grows at 8.4%; FY24 growth pegged at 7.6%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
West Bengal CM meets PM
March 01, 2024

The Chief Minister of West Bengal, Ms Mamta Banerjee met the Prime Minister, Shri Narendra Modi today.

The Prime Minister’s Office posted on X:

“Chief Minister of West Bengal, Ms Mamta Banerjee ji met PM Narendra Modi.”