India has embarked on the path of becoming self-reliant in meeting its energy needs: PM
Today, India ranks among the world's top 5 countries in solar power: PM
India needs two key things to become self-reliant - energy and semiconductors. Assam is playing a significant role in this journey: PM
We are constantly strengthening Assam's identity: PM

பாரத மாதாவுக்கு வணக்கம்

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களே, அசாம் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் இங்கு திரளாக வந்திருக்கும் எனது சகோதர சகோதரிகளே,

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், துர்கா பூஜை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மகாபுருஷ் ஸ்ரீமந்த சங்கர்தேவரின் பிறந்தநாளையொட்டி, பெரியோர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

நண்பர்களே,

நான் கடந்த 2 நாட்களாக நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறேன். நான் வடகிழக்கு பகுதிக்கு வரும்போதெல்லாம் முன்னெப்போதும் இல்லாத வகையில், எனக்கும் அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்கிறது. குறிப்பாக அசாமில் எனக்கு கிடைக்கும் அன்பும் பாசமும் சிறப்பானவை. இதற்காக நான் அனைத்து மக்களுக்கும் எனது இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த அசாம் மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியாவின் பயணத்திற்கு இன்று மிக முக்கியமான நாளாகும். அசாம் மாநிலம் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான  திட்டங்களைப் பெற்றுள்ளது. நான் சிறிது நேரத்திற்கு முன்பு டாரங்கில் சுகாதாரம் மற்றும் இணைப்பு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் வாய்ப்பை பெற்றேன். தற்போது இங்கு எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அசாமின் வளர்ச்சிப் பாதையை மேலும் வலுப்படுத்தும்.

 

நண்பர்களே,

அசாம் மாநிலம் நாட்டின் எரிசக்தி துறையை வலுப்படுத்தும் ஒரு நிலப்பகுதியாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்கள் நாட்டின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்துகின்றன. அசாம் புதிய உயரங்களை காண, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாடுபட்டு வருகிறது. இங்கு வருவதற்கு முன்பு, மூங்கிலில்  இருந்து பயோ எத்தனால் உற்பத்தி செய்யும் நவீனமயமாக்கப்பட்ட ஆலையின் திறப்பு விழாவில் பங்கேற்றேன் இதன் தொடர்ச்சியாக தற்போது இன்று பாலிப்ரொப்பிலீன் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அசாம் தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும். அசாம் வளர்ச்சியை துரிதப்படுத்தும். இவை விவசாயிகள், இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்காக நான் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

நண்பர்களே,

இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியா வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமக்கு மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த தேவைகளுக்கு நாம் வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் நாம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா கோடிக்கணக்கான ரூபாய்களை பிற நாடுகளுக்கு செலுத்த வேண்டிய நிலை உள்ளது. நமது பணம் வெளிநாடுகளில் பல வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. அதனால் அங்குள்ள மக்களுக்கு வருமானம் அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலை மாற்றப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. இதனால்தான் இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்கு தன்னிறைவை அடையும் பாதையில் பயணிக்கிறது.

 

நண்பர்களே,

ஒருபுறம் நாம் புதிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகிறோம். மறுபுறம் பசுமை எரிசக்தி ஆற்றல் திறனை அதிகரித்து வருகிறோம். தில்லி செங்கோட்டையில் இருந்து இந்தமுறை நான் சமுத்திர மந்தன் திட்டத்தை அறிவித்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நமது கடல்பகுதிகளில் அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு இருக்கலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த எரிசக்தி வளங்களை நாட்டிற்காக பயன்படுத்தவும் அவற்றை ஆராயவும் நாம் தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணியை தொடங்க உள்ளோம்.

நண்பர்களே,

பசுமை எரிசக்தி துறையை பொறுத்தவரையில், அதன் உற்பத்தியில் இந்தியா விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா மிகவும் பின்தங்கி இருந்தது. ஆனால் இன்று சூரிய மின்சார உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் உள்ள 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

நண்பர்களே,

மாறிவரும் இந்த காலகட்டத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு மாற்றாக வேறு எரிபொருட்கள் இந்தியாவிற்கு அதிகம் தேவைப்படுகின்றன. எத்தனால் இந்த மாற்று எரிசக்தியில் ஒன்றாகும். மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யும் ஆலை இன்று இங்கு திறக்கப்பட்டுள்ளது. இது அசாம் விவசாயிகளுக்கும், எனது பழங்குடியின சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

நண்பர்களே,

பயோ எத்தனால் ஆலைக்கு தேவையான மூங்கில் உற்பத்திக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மூங்கில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதுடன் இந்த மூங்கில்களையும் வாங்கும். மூங்கில்களை அறுக்கும் சிறிய அளவிலான அலகுகள் இங்கு அமைக்கப்படும். ஆண்டுதோறும் சுமார் 200 கோடி ரூபாய் இந்த துறைக்காக செலவழிக்கப்படும். இந்த ஆலையின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.

நண்பர்களே,

இன்று நாம் மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய உள்ளோம். ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு மூங்கில்களை வெட்டியவர்களை சிறையில் அடைத்த நாட்களை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பழங்குடியின மக்களின் வாழக்கை முறையின் ஒரு பகுதியாக இருக்கும் மூங்கிலை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. நமது அரசு இந்த தடையை நீக்கியது. இந்த நடவடிக்கை வடகிழக்கு பகுதி மக்களுக்கு அதிக பயனை அளிக்கிறது.

நண்பர்களே,

அன்றாட வாழ்க்கையில், நீங்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகிறீர்கள். பிளாஸ்டிக் வாளிகள், குவளைகள், பந்துகள், நாற்காலிகள், மேசைகள், பொதிப்பொருட்கள் / பாக்கேஜிங் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் நமக்கு தேவையாக உள்ளது. உங்களுக்கு தெரியுமா, இந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள் பாலிப்ரொப்பிலீனாகும். இது இல்லாமல் இன்றைய வாழக்கையை கற்பனை செய்வது கடினமாகும். விரிப்புகள், கயிறுகள், பைகள், முகக் கவசங்கள், மருந்து பெட்டிகள், நார் இழைகள் உள்பட பல்வேறு பொருட்களும் இதன்மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றன. வாகன உற்பத்திக்கும், மருந்து பொருட்கள் உற்பத்திக்கும், விவசாய கருவிகள் உற்பத்திக்கும் இது பயன்படுகிறது. அசாம் மாநிலம் இன்று நவீன பாலிப்ரொப்பிலீன் தொழிற்சாலையை பரிசாக பெற்றுள்ளது. அசாமில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற கொள்கையை மேலும் வலுப்படுத்தும். நமது உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கும்.

 

நண்பர்களே,

அசாம், கோமோஷா, எரி மற்றும் முகா பட்டுக்கு புகழ்பெற்ற மாநிலமாகும். தற்போது பாலிப்ரொப்பிலீன் கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளும் அசாமின் அடையாளமாக இணைந்துள்ளது.

நண்பர்களே,

நமது நாடு இன்று தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை முன்னெடுத்து கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகிறது. அசாம் மாநிலம் இந்த பிரச்சாரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. அசாமின் ஆற்றல் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இதனால்தான் நாங்கள் ஒரு முக்கிய திட்டமான செமி கண்டெக்டர் திட்டத்திற்காக அசாமை தேர்வு செய்துள்ளோம். அசாமின் மீதான எனது நம்பிக்கைக்கான காரணம் பெரியது. அடிமைக் காலத்தின்போது அசாம் தேநீர் பிரபலம் அடையவில்லை. ஆனால் இன்று அசாம் மக்களும் அந்த மாநில மண்ணும் அசாம் தேயிலையை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றியுள்ளன. தற்போது  ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இந்தியா தற்சார்பு நாடாக மாறுவதற்கு தேவையான எரிசக்தி மற்றும் செமி கண்டக்டர் உள்ளிட்ட இரண்டு துறைகளிலும் அசாம் மாநிலம் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது.

நண்பர்களே,

இன்று வங்கி அட்டைகள் முதல் செல்போன்கள், கார்கள், விமானங்கள் மற்றும் விண்வெளி திட்டங்கள் வரை ஒவ்வொன்றும் ஒரு சிறிய மின்னணு சிப்பில் அடங்கி உள்ளது. இன்று நாம் இவை அனைத்தையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், அந்த மின்னணு சிப்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால்தான், இந்தியா செமி கண்டக்டர் திட்டத்தை தொடங்கியதுடன், அதற்கான முக்கிய உற்பத்தித் தலமாக அசாமை அமைத்துள்ளது. மோரிகான் பகுதியில் ஒரு செமி கண்டக்டர் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதற்காக 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது அசாம் மாநிலத்திற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

 

நண்பர்களே,

காங்கிரஸ் நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளது. அசாமிலும் பல தசாப்தங்களாக அரசை நடத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை வளர்ச்சியின் வேகம் மிக மெதுவாக இருந்தது. மேலும் நெருக்கடி நிலையும் நீடித்தது. இரட்டை என்ஜின் பாஜக அரசு அசாமின் பழைய அடையாளத்தை வலுப்படுத்தியதுடன், நவீன அடையாளத்தையும் இணைத்துள்ளது. அசாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளை பிரிவினை, வன்முறை மற்றும் சர்ச்சைகளுக்கு உட்பட்டதாக காங்கிரஸ் மாற்றியது. பிஜேபி அரசு அசாமை வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் மிக்க மாநிலமாக மாற்றுகிறது. அசாம் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது எங்கள் அரசு. அசாமில் புதிய தேசிய கல்விக் கொள்கையை பிஜேபி அரசு விரைந்து செயல்படுத்தி வருவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளூர் மொழிகளில் கல்விக்கு இங்கு ஊக்கமளிக்கப்படுகிறது.

நண்பர்களே,

வடகிழக்கு மற்றும் அசாமின் மகத்தான புதல்வர்களுக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதையை வழங்கியதில்லை, இந்த மண்ணில் வீர் லஷித் போர்புகான் போன்ற துணிச்சலான வீரர்கள் வாழ்ந்தனர். ஆனால், காங்கிரஸ் அவருக்கான உரிய மரியாதையை ஒருபோதும் அளித்ததில்லை. லஷித் போர்புகானின் பாரம்பரியத்தை எங்கள் அரசு கௌரவித்தது. அவரது 400 வது பிறந்தநாளை தேசிய அளவில் நாங்கள் கொண்டாடினோம். அவரது வாழ்க்கை வரலாற்றை 23 மொழிகளில் வெளியிட்டுள்ளோம். இங்குள்ள ஜோராட் பகுதியில் அவருக்கு பிரம்மாண்ட சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. காங்கிரஸ் புறக்கணித்தவற்றை எல்லாம் நாங்கள் முன்னிலைப்படுத்தி வருகிறோம்.

நண்பர்களே,

இங்கு புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த சிவசாகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கரை எங்கள் அரசு புதுப்பித்துள்ளது. ஸ்ரீமங்கா சங்கர்தேவின் பிறந்த இடமான பட்டத்ரவாவை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற்ற எங்கள் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் அமைக்கப்பட்டதைப் போன்று, உஜ்ஜைனியில் மகாகல் மகாலோக் கட்டப்பட்டதைப் போன்று, அசாமில் மா காமக்யா வழித்தடத்தையும் எங்கள் அரசு கட்டமைத்து வருகிறது.

 

நண்பர்களே,

அசாமில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வரலாற்று தொடர்புடைய அடையாளச் சின்னங்கள் மற்றும் இடங்கள் பல உள்ளன. அடுத்த தலைமுறையினருக்காக அவற்றை பாஜக அரசு பாதுகாத்து வருகிறது. இது அசாமின் பாரம்பரியத்துக்கும் பயனளிப்பது மட்டுமின்றி, அசாமின் சுற்றுலாவும் வளர்ச்சியடைய உதவுகிறது. அசாமின் சுற்றுலாத் வளர்ச்சிடையும்போது, நமது இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

நண்பர்களே,

இந்த வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு மத்தியில், அசாமிற்குள் ஊடுருவல் பெறும் சவாலாக இருக்கிறது. காங்கிரஸ் அரசு இங்கு ஆட்சியில் இருந்தபோது, ஊடுருவல்காரர்களுக்கு நிலங்களை வழங்கியது மற்றும் சட்டவிரோத ஆக்கரமிப்பாளர்களுக்கு பாதுகாப்பு அளித்தது. வாக்கு வங்கி பேராசையால், அசாம் மக்கள் தொகை  சமநிலையை காங்கிரஸ் சீர்குலைத்தது. தற்போது பாஜக அரசு அசாம் மக்களுடன் இணைந்து இந்த சவாலை எதிர்கொண்டு வருகிறது. ஊடுருவல்காரர்களிடமிருந்து உங்கள் நிலங்களை நாங்கள் மீட்டு வருகிறோம். நிலமில்லாத மற்றும் நிலம் தேவைப்படும் பழங்குடியின குடும்பங்களுக்கு எங்கள் அரசு குத்தகைக்கு நிலத்தை வழங்கி வருகிறது. பசுந்தரா திட்டத்திற்காக அசாம் அரசை நான் பாராட்டுகிறேன். இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு குத்தகைக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. சில பழங்குடியின் பகுதிகளில், அஹோம், கோச், ராஜ்போங்சி மற்றும் கோர்கா சமூகங்களின் நில உரிமைகள் அங்கீரிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த சமூகங்கள் பாதுகாக்கப்பட்ட வகுப்புகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியாக பழங்குடியின சமூகத்திற்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை சரிசெய்வதற்கு பிஜேபி அரசு முழு உறுதியுடன் உள்ளது.

நண்பர்களே,

பாஜக அரசிடம் வளர்ச்சிக்கான மந்திரம் மட்டுமே உள்ளது. நாட்டு மக்களே கடவுள் என்பதுதான் அது. அதாவது, நாட்டு மக்கள் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளக் கூடாது, சிறிய தேவைகளுக்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. நீண்டகாலமாக காங்கிரஸ் ஆட்சியின்போது ஏழைகள் துன்பத்தை சந்தித்தனர். மேலும் நிராகரிப்புக்கு உள்ளாயினர். ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை திருப்திபடுத்தும் காங்கிரஸின் செயல்பாடே இதற்கு காரணம். இதற்காகத்தான் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தினர். ஆனால் பாஜக திருப்திபடுத்துவதைவிட அனைவரும் திருப்தி அடைவதையே வலியுறுத்துகிறது. நாட்டின் எந்தவொரு ஏழையும் எந்தவொரு பகுதியும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அசாமில், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. 20 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு ஏழைகளுக்கு  வழங்கப்படுள்ளன. அசாமில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம்  குடிநீர் வழங்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

 

நண்பர்களே,

தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் நமது சகோதர சகோதரிகள் பாஜக அரசின் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர். தேயிலை தொழிலாளர்களின் நலனுக்கு நாங்கள் முன்னிரிமை அளித்து வருகிறோம். தேயிலை தோட்டங்களின் பணிபுரியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசு உதவி செய்து வருகிறது. பெண்களின் சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வியில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தைப்பேறின் போது தாய் மற்றும் சிசு உயிரிழப்பை குறைப்பதற்கான திட்டங்களையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிறுவனங்களின் ஆதரவில் விடப்பட்டனர். தற்போது பாஜக அரசு அவர்களுக்கு வீடுகள் மற்றும் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதிலும் அக்கறை செலுத்தி வருகிறது. அவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. இத்திட்டங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகின்றன.

நண்பர்களே,

அசாமின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையின் முக்கிய மையமாக அசாம் மாறும். வளர்ச்சியடைந்த அசாம் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நாம் உருவாக்குவோம். வளர்ச்சித் திட்டங்களுக்காக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் இணைந்து உங்கள் கைகளை உயர்த்தி முழு பலத்துடன் பாரத மாதாவுக்கு ஜெ என்று சொல்லுங்கள்.

பாரத மாதாவுக்கு ஜெ…  பாரத மாதாவுக்கு ஜெ…

பாரத மாதாவுக்கு ஜெ…  மிக்க நன்றி

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India’s Northeast: Where nature, progress, people breathe together - By Jyotiraditya M Scindia

Media Coverage

India’s Northeast: Where nature, progress, people breathe together - By Jyotiraditya M Scindia
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Devbhoomi Uttarakhand is the heartbeat of India's spiritual life: PM Modi in Dehradun
November 09, 2025
PM inaugurates, lays foundation stones for various development initiatives worth over ₹8140 crores
Seeing the heights Uttarakhand has reached today, it is natural for every person who once struggled for the creation of this beautiful state to feel happy: PM
This is indeed the defining era of Uttarakhand’s rise and progress: PM
Devbhoomi Uttarakhand is the heartbeat of India's spiritual life: PM
The true identity of Uttarakhand lies in its spiritual strength: PM

देवभूमि उत्तराखंड का मेरा भै-बन्धों, दीदी–भुल्यों, दाना-सयाणों। आप सबू कैं, म्यर नमस्कार, पैलाग, सेवा सौंधी।

उत्तराखंड के राज्यपाल गुरमीत सिंह जी, मुख्यमंत्री भाई पुष्कर सिंह, केंद्र में मेरे सहयोगी अजय टम्टा, विधानसभा अध्यक्ष बहन ऋतु जी, उत्तराखंड सरकार के मंत्रिगण, मंच पर मौजूद पूर्व मुख्यमंत्री और सांसदगण, बड़ी संख्या में आशीर्वाद देने आए हुए पूज्य संतगण, अन्य सभी महानुभाव और उत्तराखंड के मेरे भाइयों और बहनों।

साथियों,

9 नवंबर का ये दिन एक लंबी तपस्या का फल है। आज का दिन हम सभी को गर्व का एहसास करा रहा है। उत्तराखंड की देवतुल्य जनता ने वर्षों तक जो सपना देखा था, वो अटल जी की सरकार में 25 साल पहले पूरा हुआ था और अब बीते 25 वर्षों की यात्रा के बाद, आज उत्तराखंड जिस ऊंचाई पर है, उसे देखकर हर उस व्यक्ति का खुश होना स्वाभाविक है, जिसने इस खूबसूरत राज्य के निर्माण के लिए संघर्ष किया था। जिन्हें पहाड़ से प्यार है, जिन्हें उत्तराखंड की संस्कृति, यहां की प्राकृतिक सुंदरता, देवभूमि के लोगों से लगाव है, उनका मन आज प्रफुल्लित है, वो आनंदित हैं।

साथियों,

मुझे इस बात की भी खुशी है कि डबल इंजन की भाजपा सरकार उत्तराखंड के सामर्थ्य को नई ऊंचाई देने में जुटी है। मैं आप सभी को उत्तराखंड की रजत जयंती पर बहुत-बहुत बधाई देता हूं। मैं इस अवसर पर उत्तराखंड के उन बलिदानियों को भी श्रद्धांजलि देता हूं, जिन्होंने आंदोलन के दौरान आपना जीवन न्यौछावर कर दिया। मैं उस वक्त के सभी आंदोलनकारियों का भी वंदन करता हूं, अभिनंदन करता हूं।

साथियों,

आप सब जानते हैं, उत्तराखंड से मेरा लगाव कितना गहरा है। जब मैं spiritual जर्नी पर यहां आता था, तो यहां पहाड़ों पर रहने वाले मेरे भाई बहनों का संघर्ष, उनका परिश्रम, कठिनाइयों को पार करने की उनकी ललक, मुझे हमेशा प्रेरित करती थी।

साथियों,

यहां बिताए हुए दिनों ने, मुझे उत्तराखंड के असीम सामर्थ्य का साक्षात परिचय करवाया है। इसलिए ही जब बाबा केदार के दर्शन के बाद, मैंने कहा कि ये दशक उत्तराखंड का है, तो ये सिर्फ मेरे मुंह से निकला हुआ एक वाक्य नहीं था, मैंने जब ये कहा, तो मुझे पूरा-पूरा भरोसा आप लोगों पर था। आज जब उत्तराखंड अपने 25 वर्ष पूरे कर रहा है, तो मेरा ये विश्वास और दृढ़ हो गया है कि ये उत्तराखंड के उत्कर्ष का कालखंड है।

साथियों,

25 साल पहले जब उत्तराखंड नया-नया बना था, तब चुनौतियां कम नहीं थीं। संसाधन सीमित थे, राज्य का बजट छोटा था, आय के स्रोत बहुत कम थे, और ज्यादातर ज़रूरतें केंद्र की सहायता से पूरी होती थीं। आज तस्वीर पूरी तरह बदल चुकी है। यहां आने से पहले मैंने रजत जयंती समारोह पर शानदार प्रदर्शनी देखी। आपसे भी मेरा आग्रह है, उस प्रदर्शनी को उत्तराखंड के हर नागरिक को देखनी चाहिए। इसमें उत्तराखंड की पिछले 25 वर्षों की यात्रा की झलकियां हैं। इंफ्रास्ट्रक्चर, एजुकेशन, इंडस्ट्री, टूरिज्म, हेल्थ, पावर और ग्रामीण विकास, ऐसे अनेक क्षेत्रों में सफलता की गाथाएं प्रेरित करने वाली हैं। 25 साल पहले उत्तराखंड का बजट सिर्फ 4 हजार करोड़ रुपए था। आज जो 25 साल की उमर के हैं, उनको उस समय का कुछ भी पता नहीं होगा। उस समय 4 हजार करोड़ रूपये का बजट था। आज ये बढ़कर एक लाख करोड़ रुपए को पार कर चुका है। 25 साल में उत्तराखंड में बिजली उत्पादन 4 गुना ज्यादा हो गया है। 25 वर्षों में उत्तराखंड में सड़कों की लंबाई बढ़कर दोगुनी हो गई है। और यहां 6 महीने में 4 हजार यात्री हवाई जहाज से आते थे, 6 महीने में 4 हजार। आज एक दिन में 4 हजार से ज्यादा यात्री हवाई जहाज से आते हैं।

साथियों,

इन 25 सालों में इंजीनियरिंग कॉलेजों की संख्या 10 गुना से ज्यादा बढ़ी है। पहले यहां सिर्फ एक मेडिकल क़ॉलेज था। आज यहां 10 मेडिकल कॉलेज हैं। 25 साल पहले वैक्सीन कवरेज का दायरा सिर्फ 25 प्रतिशत भी नहीं था। 75 प्रतिशत से ज्यादा लोग बिना वैक्सीन की जिंदगी शुरू करते थे। आज उत्तराखंड का करीब-करीब हर गांव वैक्सीन कवरेज के दायरे में आ गया है। यानी जीवन के हर आयाम में उत्तराखंड ने काफी प्रगति की है। विकास की ये यात्रा, अद्भुत रही है। ये बदलाव सबको साथ लेकर चलने की नीति का नतीजा है, हर उत्तराखंडी के संकल्प का नतीजा है। पैली पहाड़ोंक चढ़ाई, विकासक बाट कें रोक दे छी। अब वई बटी, नई बाट खुलण लाग गी।

साथियों,

मैंने कुछ देर पहले उत्तराखंड के युवाओं से, उद्यमियों से बात की, वे सभी उत्तराखंड की ग्रोथ को लेकर बहुत उत्साहित है। आज जो उत्तराखंड वासियों के उद्गार हैं, उनको अगर मैं गढ़वाली में कहूं, तो शायद कोई गलती तो कर लूंगा, लेकिन 2047 मा भारत थे, विकसित देशों की लैन मा, ल्याण खुणी, मेरो उत्तराखंड, मेरी देवभूमि, पूरी तरह से तैयार छिन।

साथियों,

उत्तराखंड की विकास यात्रा को गति देने के लिए, आज भी यहां कई परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया गया है। शिक्षा, स्वास्थ्य, पर्यटन और खेल से जुड़े ये प्रोजेक्ट्स, यहां रोजगार के नए अवसर तैयार करेंगे। जमरानी और सॉन्ग बांध परियोजनाएं, देहरादून और हल्द्वानी शहर की पेयजल की समस्या को दूर करने में महत्वपूर्ण भूमिका निभाएंगी। इन सभी स्कीम्स पर 8 हजार करोड़ रुपए से ज्यादा खर्च किए जाएंगे। मैं उत्तराखंड वासियों को इन परियोजनाओं की बधाई देता हूं।

साथियों,

उत्तराखंड सरकार, अब सेब और कीवी के किसानों को डिजिटल करेंसी में अनुदान देना शुरू कर रही है। इसमें आधुनिक टेक्नोलॉजी के माध्यम से आर्थिक मदद की पूरी ट्रैकिंग करना संभव हो रहा है। इसके लिए मैं राज्य सरकार, Reserve Bank of India समेत सभी स्टेकहोल्डर्स की भी प्रशंसा करता हूं।

साथियों,

देवभूमि उत्तराखंड भारत के आध्यात्मिक जीवन की धड़कन है। गंगोत्री, यमुनोत्री, केदारनाथ, बद्रीनाथ, जागेश्वर और आदि कैलाश, ऐसे अनगिनत तीर्थ हमारी आस्था के प्रतीक हैं। हर वर्ष लाखों श्रद्धालु इन पवित्र धामों की यात्रा पर आते हैं। उनकी यात्रा भक्ति का मार्ग खोलती है, साथ ही, उत्तराखंड की अर्थव्यवस्था में नई ऊर्जा भरती है।

साथियों,

बेहतर कनेक्टिविटी का उत्तराखंड के विकास से गहरा नाता है, इसलिए आज राज्य में दो लाख करोड़ रुपए से अधिक की परियोजनाओं पर काम चल रहा है। ऋषिकेश-कर्णप्रयाग रेल परियोजना प्रगति पर है। दिल्ली-देहरादून एक्सप्रेस-वे अब लगभग तैयार है। गौरीकुंड-केदारनाथ और गोविंदघाट-हेमकुंट साहिब रोपवे का शिलान्यास हो चुका है। ये परियोजनाएं उत्तराखंड में विकास को नई गति दे रही हैं।

साथियों,

उत्तराखंड ने 25 वर्षों में विकास की एक लंबी यात्रा तय की है। अब सवाल ये है कि अगले 25 वर्षों में हम उत्तराखंड को किस ऊंचाई पर देखना चाहेंगे? आपने वो कहावत जरूर सुनी होगी, जहां चाह, वहां राह। इसलिए जब हमें ये पता होगा कि हमारा लक्ष्य क्या हैं, तो वहां पहुंचने का रोडमैप भी उतनी ही तेजी से बनेगा। और अपने लक्ष्यों पर चर्चा के लिए 9 नवंबर से बेहतर दिन और क्या होगा?

साथियों,

उत्तराखंड का असली परिचय उसकी आध्यात्मिक शक्ति है। उत्तराखंड अगर ठान ले तो अगले कुछ ही वर्षों में खुद को, “स्पिरिचुअल कैपिटल ऑफ द वर्ल्ड” के रूप में स्थापित कर सकता है। यहाँ के मंदिर, आश्रम, ध्यान और योग के सेंटर, इन्हें हम ग्लोबल नेटवर्क से जोड़ सकते हैं।

साथियों,

देश-विदेश से लोग यहां वेलनेस के लिए आते हैं। यहां की जड़ी-बूटियों और आयुर्वेदिक औषधियों की मांग तेजी से बढ़ रही है। पिछले 25 वर्षों में अरोमैटिक प्लांट्स, आयुर्वेदिक जड़ी-बूटियों, योग और वेलनेस टूरिज़्म में उत्तराखंड ने शानदार प्रगति की है। अब समय है कि उत्तराखंड की हर विधानसभा क्षेत्र में योग केंद्र, आयुर्वेद केंद्र, नैचुरोपैथी संस्थान, होम स्टे, एक कंपप्लीट पैकेज, उस दिशा में हम सोच सकते हैं। ये हमारे विदेशी टूरिस्ट्स को बहुत अपील करेगा।

साथियों,

आप जानते ही हैं कि भारत सरकार बॉर्डर पर वाइब्रेंट विलेज योजना पर कितना जोर दे रही है। मैं चाहता हूँ कि उत्तराखंड का हर वाइब्रेंट विलेज खुद में एक छोटा पर्यटन केंद्र बने। वहां होम-स्टे बने, स्थानीय भोजन और संस्कृति को बढ़ावा मिले। आप कल्पना करिए, जब बाहर से आने वाले पर्यटक, एकदम घरेलू माहौल में डुबके, चुड़कानी खाएंगे, रोट-अरसा, रस-भात खाएंगे, झंगोरे की खीर खाएंगे, तो उन्हें कितना आनंद आएगा। यही आनंद उन्हें दूसरी बार, तीसरी बार उत्तराखंड वापस लेकर आएगा।

साथियों,

अब हमें उत्तराखंड में छिपी हुई संभावनाओं के विस्तार पर फोकस करने की आवश्यकता है। यहां हरेला, फूलदेई, भिटौली जैसे त्योहारों का हिस्सा बनने के बाद पर्यटक उस अनुभव को हमेशा याद रखते हैं। यहां के मेले भी उतने ही जीवंत हैं। नंदा देवी का मेला, जौलजीवी मेला, बागेश्वर का उत्तरायणी मेला, देवीधुरा का मेला, श्रावणी मेला और बटर फेस्टिवल, इनमें उत्तराखंड की आत्मा बसती है। यहां के स्थानीय मेलों और पर्वों को वर्ल्ड मैप पर लाने के लिए वन डिस्ट्रिक्ट वन फेस्टिवल, अर्थात एक जिला एक मेला जैसा कोई अभियान चलाया जा सकता है।

साथियों,

उत्तराखंड के सभी पहाड़ी जिले फलों के उत्पादन में काफी पोटेंशियल रखते हैं। हमें पहाड़ी जिलों को हॉर्टिकल्चर सेंटर बनाने पर फोकस करना चाहिए। ब्लूबेरी, कीवी, हर्बल और मेडिसिनल प्लांट्स, ये भविष्य की खेती है। उत्तराखंड में फूड प्रोसेसिंग, हस्तशिल्प, ऑर्गेनिक प्रोडक्ट्स, इन सबके लिए MSMEs को नए सिरे से सशक्त किए जाने की जरूरत है।

साथियों,

उत्तराखंड में बारहों महीने पर्यटन की संभावनाएं हमेशा से रही हैं। अब यहां कनेक्टिविटी सुधर रही है, और इसलिए मैंने सुझाव दिया था कि हमें बारहमासी टूरिज्म की ओर बढ़ना चाहिए। मुझे खुशी है कि उत्तराखंड विंटर टूरिज़्म को नया आयाम दे रहा है। मुझे अभी जो जानकारियां मिलीं, वो उत्साह बढ़ाने वाली हैं। सर्दियों में आने वाले पर्यटकों की संख्या में तेज़ बढ़ोतरी हुई है। पिथौरागढ़ में 14 हजार फुट से अधिक ऊंचाई पर, हाई एल्टीट्यूड मैराथन का आयोजन हुआ। आदि कैलाश परिक्रमा रन भी देश के लिए प्रेरणा बनी है। तीन वर्ष पहले आदि कैलाश यात्रा में दो हजार से भी कम श्रद्धालु आते थे। अब ये संख्या तीस हजार से अधिक हो चुकी है। अभी कुछ दिन पूर्व ही केदारनाथ मंदिर के कपाट बंद हुए हैं। केदारनाथ धाम में इस बार करीब 17 लाख श्रद्धालु, देवदर्शन के लिए आए हैं। तीर्थाटन, बारहमासी पर्यटन, उत्तराखंड का वो सामर्थ्य है, जो उसे निरंतर विकास की नई ऊंचाई पर ले जाएगा। इको टूरिज्म के लिए भी संभावना है, एडवेंचर टूरिज्म के लिए भी बहुत संभावना है। देशभर के नौजवानों के लिए, ये आकर्षण का केंद्र बन सकता है।

साथियों,

उत्तराखंड अब फिल्म डेस्टिनेशन के रूप में भी उभर रहा है। राज्य की नई फिल्म नीति से शूटिंग करना और आसान हो गया है। वेडिंग डेस्टिनेशन के रूप में भी उत्तराखंड लोकप्रिय हो रहा है। और मेरा तो अभियान चल रहा है, Wed In India. Wed In India के लिए, उत्तराखंड को अपने यहां उसी आलीशान स्तर की सुविधाएं विकसित करनी चाहिए। और इसके लिए 5-7 बड़ी डेस्टिनेशंस को तय करके उन्हें विकसित किया जा सकता है।

साथियों,

देश ने आत्मनिर्भर भारत का संकल्प लिया है। इसका रास्ता वोकल फॉर लोकल से तय होगा। उत्तराखंड इस विजन को हमेशा से जीता आया है। स्थानीय उत्पाद से लगाव, उनका उपयोग, उनको अपने जीवन का हिस्सा बना लेना, ये यहां की परंपरा का अभिन्न हिस्सा है। मुझे खुशी है कि उत्तराखंड सरकार ने वोकल फॉर लोकल अभियान को तेज गति दी है। इस अभियान के बाद उत्तराखंड के 15 कृषि उत्पादों को जीआई टैग मिला है। यहां के बेडू फल और बद्री गाय के घी को, हाल के दिनों में जी आई टैग मिलना, सचमुच में बहुत गौरव की बात है। बद्री गाय का घी, पहाड़ के हर घर की शान है। अब बेड़ू, पहाड़ के गांवो से निकलकर बाहर के बाजारों तक पहुंच रहा है। इससे बने उत्पादों पर अब जीआई टैग लगा होगा। वो उत्पाद जहां भी जाएगा, अपने साथ उत्तराखंड की पहचान भी लेकर जाएगा। ऐसे ही GI टैग वाले प्रॉडक्ट्स को हमें देश के घर-घर पहुंचाना है।

साथियों,

मुझे खुशी है, हाउस ऑफ हिमालयाज, उत्तराखंड का ऐसा ब्रैंड बन रहा है, जो स्थानीय पहचान को एक मंच पर ला रहा है। इस ब्रैंड के तहत राज्य के विभिन्न उत्पादों को एक साझा पहचान दी गई है, ताकि वे ग्लोबल मार्केट में प्रतिस्पर्धा कर सकें। राज्य के कई उत्पाद अब डिजिटल प्लेटफॉर्म पर उपलब्ध हैं। इससे ग्राहकों तक उनकी सीधी पहुंच बनी है, और किसानों, कारीगरों और छोटे उद्यमियों के लिए एक नया बाजार खुला है। हाउस ऑफ हिमालयाज की ब्रैंडिंग के लिए भी आपको नई ऊर्जा के साथ जुटना है। मैं समझता हूं, इन ब्रैंड के प्रॉडक्ट्स के डिलिवरी मैकेनिज्म पर भी हमें लगातार काम करना होगा।

साथियों,

आप जानते हैं कि, उत्तराखंड की अब तक की विकास यात्रा में कई रुकावटें आईं हैं। लेकिन भाजपा की मजबूत सरकार ने हर बार उन बाधाओं को पार किया, और ये सुनिश्चित किया है कि विकास की गति पर ब्रेक ना लगे। उत्तराखंड की धामी सरकार ने जिस गंभीरता से यहां समान नागरिक संहिता को लागू किया, वो दूसरे राज्यों के लिए भी मिसाल है। राज्य सरकार ने धर्मांतरण विरोधी कानून और दंगा नियंत्रण कानून जैसे राष्ट्रहित से जुड़े विषयों पर साहसिक नीति अपनाई। प्रदेश में तेजी से उभर रहे जमीन कब्जाने और डेमोग्राफी में बदलाव जैसे संवेदनशील मुद्दे पर भी भाजपा सरकार ठोस कार्यवाही कर रही है। आपदा प्रबंधन के क्षेत्र में, उत्तराखंड सरकार ने तेजी और संवेदनशीलता के साथ काम करते हुए, जनता की हर संभव मदद का प्रयास किया है।

साथियों,

आज जब हम राज्य स्थापना की रजत जयंती मना रहे हैं, मुझे पूरा विश्वास है कि आने वाले वर्षों में, हमारा उत्तराखंड विकास की नई ऊंचाइयों को छुएगा, अपनी संस्कृति, अपनी पहचान को उसी गर्व के साथ आगे बढ़ाएगा। मैं एक बार फिर उत्तराखंड के सभी निवासियों को रजत जयंती समारोह की हार्दिक शुभकामनाएं देता हूं। और मैं आपसे अपेक्षा करता हूं कि अभी से 25 साल के बाद जब देश आजादी के 100 साल मनाता होगा, तब उत्तराखंड किस ऊंचाई पर होगा, ये लक्ष्य अभी से तय कर लेना चाहिए, रास्ता चुन लेना चाहिए और इंतजार किए बिना चल पड़ना चाहिए। मैं आपको ये भी भरोसा देता हूं कि भारत सरकार हमेशा उत्तराखंड सरकार के साथ खड़ी है। आपको हर कदम पर सहयोग देने को हम तत्पर हैं। मैं उत्तराखंड के हर परिवार, हर नागरिक के सुख, समृद्धि और उज्ज्वल भविष्य की कामना करता हूं। आप सबका बहुत-बहुत धन्यवाद।

भारत माता की जय।

भारत माता की जय।

वंदे मातरम् का 150वां वर्ष है, मेरे साथ बोलिये –

वंदे मातरम्।

वंदे मातरम्।

वंदे मातरम्।

वंदे मातरम्।

वंदे मातरम्।

वंदे मातरम्।

वंदे मातरम्।

वंदे मातरम्।

वंदे मातरम्।

बहुत-बहुत धन्यवाद।