Climate change must be fought not in silos but in an integrated, comprehensive and holistic way: PM
India has adopted low-carbon and climate-resilient development practices: PM Modi
Smoke free kitchens have been provided to over 80 million households through our Ujjwala Scheme: PM Modi

மேதகு மன்னர் மற்றும் தலைவர்களே,

உலகளாவிய தொற்று பாதிப்பிலிருந்து நமது மக்களையும், பொருளாதாரத்தையும காப்பதில், இன்று நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.  அதேபோல், பருவநிலை மாற்றத்திலும் கவனம் செலுத்துவது முக்கியம். இதை ஒருங்கிணைந்து முழுமையான வழியில் போராட வேண்டும். இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும் என்ற நமது பாரம்பரிய பண்புடனும், எமது அரசின் உறுதியுடனும், கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

பாரீஸ் ஒப்பந்த இலக்குகளையும் தாண்டி, இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  பலதுறைகளில் இந்தியா உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது. எல்இடி விளக்குகளை நாங்கள் பிரபலப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் ஆண்டுக்கு  38 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் குறைந்துள்ளது.  எங்களது உஜ்வாலா திட்டம் மூலம் 80 மில்லியன் வீடுகளில் புகையில்லா சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மிகப் பெரிய சுத்தமான எரிசக்தி திட்டத்தில் இதுவும் ஒன்று.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன; எங்களின் வனப்பகுதி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது; சிங்கம், புலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது; 2030 ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலங்களை மீட்க  நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்; சுழற்சி பொருளாதாரத்தை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.  மெட்ரோ ரயில், நீர் வழி போக்குவரத்து உட்பட அடுத்த தலைமுறை கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது.  இவைகள் சுத்தமான சூழலுக்கு தனது பங்களிப்பை அளிக்கும். 2022ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை நாங்கள் அடைவோம். 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய மிகப் பெரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி, விரைவாக வளரும் சர்வதேச அமைப்புகளில் ஒன்று. இதில் 88 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பல மில்லியன் டாலர் திரட்டவும், ஆயிரக்கணக்கானோருக்கு பயிற்சி அளிக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஆராய்ச்சியை மேம்படுத்தும் திட்டங்களுடன், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க சர்வதேச சூரியசக்தி கூட்டணி தனது பங்களிப்பை அளிக்கும். பேரிடர் மீட்பு கட்டமைப்பு கூட்டணி இன்னொரு உதாரணம். 

இந்த கூட்டணியில் 9 ஜி20 நாடுகள், 4 சர்வதேச அமைப்புகள் உட்பட 18 நாடுகள் இணைந்துள்ளன.  முக்கிய கட்டமைப்புகளை மீட்கும் நடவடிக்கையை இந்த கூட்டணி தொடங்கியுள்ளது.  இயற்கை பேரிடரின் போது ஏற்படும் கட்டமைப்பு பாதிப்புகள், கவனத்தை ஈர்ப்பதில்லை. இதன் காரணமாக ஏழை நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அதனால் இந்த கூட்டணி முக்கியம்.

புதிய மற்றும் நீடித்த தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பை மேலும் அதிகரிக்க இதுதான் சரியான நேரம்.  இதை நாம் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு உணர்வுடன் செய்ய வேண்டும். வளரும் உலகுக்கு சிறந்த தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவு கிடைத்தால், ஒட்டுமொத்த உலகும் வேகமாக முன்னேறும்.

மனிதஇனம் செழிக்க, ஒவ்வொரு தனிநபரும்  வளமாக வேண்டும். தொழிலாளர்களை உற்பத்தி கண்ணோட்டத்துடன் மட்டும் பார்க்காமல், ஒவ்வொரு தொழிலாளியின் கவுரவத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதுபோன்ற அணுகுமுறை, நமது பூமியை பாதுகாப்பதில் சிறந்த உத்திரவாதமாக இருக்கும்.

நன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India attracts $70 billion investment in AI infra, AI Mission 2.0 in 5-6 months: Ashwini Vaishnaw

Media Coverage

India attracts $70 billion investment in AI infra, AI Mission 2.0 in 5-6 months: Ashwini Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 31, 2026
January 31, 2026

From AI Surge to Infra Boom: Modi's Vision Powers India's Economic Fortress