பிரதமர் அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார்
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகையாக ரூ.16,000 கோடியை விடுவித்தார்
மறுசீரமைக்கப்பட்ட பெலாகாவி-ன் ரயில் நிலையக் கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்
நீர்வள இயக்கத்தின் கீழ் 6 பல்வேறு கிராமத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
" மாறிவரும் இன்றைய இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது. அதே வேளையில் அடித்தட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது"
2014-ம் ஆண்டிற்கு முன்பாக வேளாண்மை துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 25,000 கோடியாக இருந்த நிலையில் தற்போது அது ஐந்து மடங்கு அதிகரித்து 1,25,000 கோடியாக உள்ளது
இந்தியாவின் வேளாண் துறையை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது, எதிர்கால சவால்களைப் பகுப்பாய்வு செய்கிறது
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வது விரைவான வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது
கார்கே அவர்கள் காங்கிரஸ் தலைவர், ஆனால் அவரை இயக்குவதற்கான கட்டுப்பாட்டுக் கருவி எவரிடம் உள்ளது என்பதை உலகமே அறியும்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் அதன்பிறகு இந்தியாவின் நவநிர்மாணிலும் பெலகாவி எப்போதுமே முக்கிய பங்கு வகித்துள்ளது. இப்போதெல்லாம் கர்நாடகா புத்தொழில் நிறுவனங்களுக்கு பெயர் பெற்றுள்ளது. ஒரு வகையில் இந்த பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. பாபுராவ் புஸல்கர் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய ஆலையை இங்கு நிறுவினார். அப்போதிலிருந்து பெலகாவி, பல்வேறு தொழில்களின் புகலிடமாக இருந்து வருகிறது.

சகோதர, சகோதரிகளே, இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் மற்றும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் பெலகாவி-ன் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இன்று இந்தப் பகுதியில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பரிசு கிடைத்துள்ளது. பிரதமரின் கிசான் நிதி திட்டத்தின் மற்றொரு தவணையாக 16,000 கோடி ரூபாய், நாட்டில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 80- 85% சிறிய ரக விவசாயிகள் உள்ளனர். பாஜக அரசு இது போன்ற சிறு விவசாயிகளுக்கு தான் முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி, சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

2014-ஆம் ஆண்டு முதல் வேளாண் துறையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நோக்கி நாடு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. பாஜக அரசு, நவீனமயமாக்கலுடன் வேளாண்மையை இணைத்து, எதிர்காலத்திற்கு ஏதுவான விவசாயத்தை உருவாக்கி வருகிறது. 2014-ஆம் ஆண்டில் வேளாண் துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 1.25 லட்சம் கோடிக்கும் மேலானதாகும். அதாவது சுமார் ஐந்து மடங்கு கூடுதல். விளைப் பொருட்களின் சேமிப்பு, விவசாய செலவைக் குறைப்பது மற்றும் சிறு விவசாயிகளை சீர்படுத்துவது ஆகியவை தற்போதைய காலத்தின் கட்டாயம். அதனால்தான் புதிய சேமிப்பு வசதிகளை உருவாக்குவதற்காக ஏராளமான தொகை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அன்பை வழங்கிய பெலகாவி, கர்நாடக மக்களை தலை வணங்கி எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்.பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
In a first, NCERT adds Emergency to Class 9 textbooks; chapter details rights suspension and press censorship

Media Coverage

In a first, NCERT adds Emergency to Class 9 textbooks; chapter details rights suspension and press censorship
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Gujarat meets the Prime Minister
June 25, 2026

Governor of Gujarat, Shri Acharya Devvrat met with the Prime Minister Shri Narendra Modi, today.

The Prime Minister posted on X;

Governor of Gujarat, Shri @ADevvrat met Prime Minister @narendramodi today.