நமது கோயில்கள், நமது மடாலயங்கள், நமது புனித இடங்கள் ஒருபுறம் வழிபாட்டு மையங்களாகவும், வளங்களின் மையங்களாகவும் திகழ்கின்றன. மறுபுறம் அவை அறிவியல், சமூக உணர்வின் மையங்களாகவும் திகழ்கின்றன: பிரதமர்
நமது ஞானிகள் நமக்கு அளித்த ஆயுர்வேத அறிவியல், யோகா அறிவியல், இன்று உலக அளவில் பாராட்டப்படுகிறது: பிரதமர்
சேவை செய்ய நாடு எனக்கு வாய்ப்பளித்தபோது, 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற மந்திரத்தை அரசின் தீர்மானமாக நான் மாற்றினேன். 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற உறுதிப்பாடு, 'அனைவருக்கும் சிகிச்சை, அனைவருக்கும் ஆரோக்கியம்' என்பதையும் உள்ளடக்கியது: பிரதமர்

இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் பாய் மோகன் யாதவ் அவர்களே, ஜெகத் குரு பூஜ்ய ராம் பத்ராச்சாரியா அவர்களே, பாகேஸ்வர் தாம் பீடாதீஸ்வரர் திரு தீரேந்திர சாஸ்திரி அவர்களே, சாத்வி ரீதாம்பரா அவர்களே, சுவாமி சித்தானந்த் சரஸ்வதி அவர்களே, மஹந்த் திரு பாலக் யோகேஷ்சர்தாஸ் அவர்களே, இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுதேவ் சர்மா அவர்களே மற்றும் பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!

நாயகர்களின் பூமியான புந்தேல்கண்டுக்கு நீண்ட காலத்திற்கு பின் நான் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். இந்த முறை பாலாஜி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். பகவான் அனுமனின் கருணையால் மதிப்புமிகு மதம் சார்ந்த மையமான இது சுகாதார கவனிப்புக்கான மையமாக இப்போது மாறி வருகிறது. சற்று நேரத்திற்கு முன்புதான் திரு பாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு நான் பூமி பூஜை செய்து வைத்தேன். 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இந்த நிறுவனம் முதல் கட்டத்தில் 100 படுக்கை வசதியுடன் நிறைவு பெறும். இந்த உயரிய முயற்சிக்காக திரு தீரேந்திர சாஸ்திரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் புந்தேல்கண்ட் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்.

நண்பர்களே,

நமது கோயில்களும், மடங்களும், புனித தலங்களும் எப்போதும் வழிபாடு மற்றும் தியான மையங்களாக செயல்பட்டு உள்ளன. அதே சமயம் அவை அறிவியல் ஆய்வு, சமூக சிந்தனை, கூட்டு மனப்பான்மை ஆகியவற்றின் மையங்களாகவும் இருந்துள்ளன. ஆயுர்வேத அறிவியலையும் யோகா பழக்கத்தையும் நமது முனிவர்கள் நமக்கு வழங்கியுள்ளனர். இவை இரண்டும் தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நமது நம்பிக்கை மிகவும் எளிதானது – தன்னலமற்ற சேவையை விட உயர்ந்த மதம் எதுவும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்களின் துயரங்களை துடைப்பது உண்மையான மதத்தின் சாரமாகும். எனவே உயிரினங்கள் அனைத்திற்கும் சேவை செய்வது நமது நீண்ட கால பாரம்பரியமாகும். அனைத்து மனிதர்களிலும் தெய்வீகம் உறைந்துள்ளது என்பது நமது மரபு – மனிதருக்குள் நாராயண், அனைத்து உயிர்களிலும் சிவன்.

 

தற்போது எல்லா இடங்களிலும் மகா கும்பமேளா பற்றியே பேச்சாக உள்ளது. இந்த மாபெரும் நிகழ்வு நிறைவடைய உள்ள நிலையில், கோடிக்கணக்கான மக்கள் கூடி புனித நீராடி துறவிகளிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இந்த மகா கும்பமேளாவை நாம் கடைப்பிடிக்கும் போது ஒரு உண்மையை நாம் உணர்கிறோம். இது ஒற்றுமையின் மகா கும்பமேளா என்பதுதான் அந்த உண்மை.

 

நண்பர்களே,

புனித புந்தேல்கண்ட் பூமியில் உள்ள சித்ரகூடம் பகவான் ராமருடன் நெருங்கிய தொடர்புடையதாகும். இங்கு நோயாளிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் சேவை செய்யும் மிகப் பெரிய மையம் நீண்டகாலமாக உள்ளது. தற்போது பாகேஸ்வர் தாம் சமய மற்றும் ஆன்மீக தலமாக மட்டுமின்றி சிகிச்சை மையமாகவும் உள்ளது. இங்கு நல்ல ஆரோக்கியத்திற்கான அருளாசி வழங்கப்படுகிறது.

 

 

நமது கடமைகளை செய்யவும், மகிழ்ச்சியடையவும், வெற்றி பெறவும் நமது உடலும் ஆரோக்கியமும் மிக முக்கியமான கருவிகள் என நமது வேதங்கள் தெரிவிக்கின்றன. எனவே நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டபோது, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பதை எங்கள் அரசின் வழிகாட்டும் கொள்கையாக உருவாக்கினோம். இந்த தீர்மானத்தின் முக்கிய அடிதளமாக அனைவருக்கும் சுகாதாரம், அனைவருக்கும் நல்வாழ்வு என்பது உள்ளது.

 

 

இதனை நிறைவேற்ற நோய் தடுப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல நிலைகளில் நாங்கள் பணியாற்றுகிறோம். கழிப்பறைகள் கட்டப்பட்டதால் மேலும் ஒரு பயன் கிடைத்ததை நீங்கள் அறிவீர்கள். மோசமான துப்புரவு நிலையால் ஏற்பட்ட நோய்கள் குறைந்துள்ளன. முறையான கழிப்பறைகளை கொண்ட வீடுகள் ஆயிரக்கணக்கான ரூபாயை சேமித்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. கழிப்பறைகள் இல்லாதிருந்தால் இந்த தொகை மருத்துவத்திற்கு செலவிடப்பட்டிருக்கும்.

சகோதர, சகோதரிகளே,

புந்தேல்கண்ட் உண்மையான செழிப்பை பெறுவதற்கு நமது தாய்மார்களும், சகோதரிகளும் சமஅளவு அதிகாரம் பெற வேண்டியது அவசியமாகும். இதனை அடைவதற்கு லட்சாதிபதி சகோதரிகள், ட்ரோன் சகோதரிகள் போன்ற முன்முயற்சிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். 3 கோடி சகோதரிகள் பொருளாதார சுதந்திரம் பெறுவதற்காக அவர்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றுவது எங்களின் இலக்காகும். புந்தேல்கண்டில் சாகுபடி பயிர்களுக்கு ட்ரோன்கள் மூலம் நமது சகோதரிகள் உரங்களையும், மருந்துகளையும் தெளித்து வேளாண்மையில் தீவிரமாக பங்கேற்கும் போது புந்தேல்கண்ட் அதிவேகமாக செழுமைப் பாதையில் முன்னேறும்.

 

 

நண்பர்களே,

புனித பூமியான புந்தேல்கண்டை முன்னேற்றத்தில் புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்ல இரட்டை என்ஜின் அரசு ஓய்வின்றி உழைக்கிறது. புந்தேல் கண்ட் தொடர்ந்து வளமான, முன்னேற்றப் பாதையில் செல்வதற்காக இன்று பாகேஸ்வர் தாமில் நான் பிரார்த்தனை செய்தேன்.

உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு மிக்க நன்றி.

ஹர் ஹர் மகாதேவ்!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s jewellery exports rise 2.4% to $9.17 billion; studded gold emerges as bright spot

Media Coverage

India’s jewellery exports rise 2.4% to $9.17 billion; studded gold emerges as bright spot
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
கடின உழைப்பு, முயற்சியின் வலிமையை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
August 14, 2026
PM shares Sanskrit Subhashitam highlighting the power of hard work and human endeavor

பிரிவினையின் கொடுமைகளை நினைவுகூரும் இந்தத் தினத்தை அனுசரிக்கும் இந்த வேளையில், பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரது துணிச்சலான நடவடிக்கைளையும் நினைவுகூர்வதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது வரலாற்றில் பலரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய தருணம் என்றும், இதன் காரணமாக குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன் அன்புக்குரியவர்களை இழந்து எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலைக் கடந்து மக்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துத் துன்பங்களைச் சாதனைகளாக மாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பிரதமர் எடுத்துரைத்துள்ளார். அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மனித ஆன்மாவின் வலிமையை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லிணக்கம், சகோதரத்துவத்தைப் பேணுவதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய கொடுமைகள் நிறைந்த காலத்திலிருந்து மீண்டெழுந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக ஈடுஇணையற்ற பங்களிப்பை வழங்கிய அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

இக்கட்டான தருணங்களில் தீர்மானங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதைத் தங்களது துணிச்சல், திறமையின் மூலம் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லெண்ணம், ஒற்றுமையின் உணர்வைத் தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்று திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பான சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய முயற்சி மூலம் பல்வேறு கலைகள், அறிவியல், தொழில்நுட்பத் திறன், கைவினைத்திறன், புதுமைக் கண்டுபிடிப்புகள் செழித்து வளர்வதற்கு வழிவகுக்கின்றன என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே விதியைச் சார்ந்திடாமல் துணிச்சல், விடாமுயற்சி, தொடர் செயல்பாடுகள் மூலம் இலக்குகளை அடைவதற்கு மன உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;

“இன்றைய தினத்தை பிரிவினைவாதத்தின் கொடுமைகளை நினைவுகூரும் தினமாக அனுசரித்து வருகிறோம். பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரின் துணிச்சலையும் இந்தத் தினத்தில் நினைவுகூர்கிறோம். இது வரலாற்றில் பலரது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய தருணம். குடும்பங்கள் இடம்பெயர்ந்து, அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்து அளவற்ற துன்பங்களை அனுபவித்தனர். இத்தகைய இக்கட்டான தருணங்களைக் கடந்து மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து சோதனைகளைச் சாதனைகளாக மாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் மனிதகுல ஆன்மாவின் வலிமையை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தத் தினம் நம் நாட்டில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான மன வலிமையை அதிகரிக்கட்டும்.”

"विभाजन विभीषिका स्मृति दिवस पर उन सभी देशवासियों का हृदय से नमन, जिन्होंने उस वीभत्स दौर से निकलकर देश की प्रगति में अमूल्य योगदान दिया। उन्होंने अपने साहस और सामर्थ्य से दिखाया कि कैसे विपरीत परिस्थितियों में भी संकल्पों को सिद्ध किया जाता है। आइए, सद्भावना और एकजुटता की राष्ट्रीय भावना को और सशक्त करें।

उद्यमस्य प्रसादेन दृश्यन्ते विविधाः कलाः।
कातरा एव जल्पन्ति यद् भाव्यं तद् भविष्यति॥”

It is through hard work, enterprise and dedicated effort that diverse arts, science, technological skills, craftsmanship and innovations flourish, paving the way for success. Therefore, one should not remain dependent on fate; rather, one should move steadily towards one's goals with courage, diligence and persistent effort, for it is human endeavor that shapes destiny.