The leaders review ongoing bilateral collaboration and reiterated commitment to to further deepen the partnership.
They exchanged view on regional and global issues

பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் ஃபின்லாந்து குடியரசு அதிபர் திரு. அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசி  வாயிலாக இன்று உரையாடினார்.

தற்போது நடைபெற்று வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்ததுடன், உறவை மேலும் வலுப்படுத்து வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள். பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.

மின்னணுமயமாக்கல், நிலைத்தன்மை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து தலைவர்கள் ஆய்வு செய்தனர். குவாண்டம், 5ஜி-6ஜி, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், அவர்கள் உறுதிபூண்டனர்.

உக்ரைன் நிலவரம் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் தலைவர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவுகள் மற்றும் பரஸ்பரம் பயனளிக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில்  நிறைவு செய்தல் ஆகியவற்றுக்கான ஃபின்லாந்து ஆதரவை ஃபின்லாந்து அதிபர் ஸ்டப் தெரிவித்தார்.  இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Healthcare affordability a key priority, duty cuts & GST reductions benefitting citizens: Piyush Goyal

Media Coverage

Healthcare affordability a key priority, duty cuts & GST reductions benefitting citizens: Piyush Goyal
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 12, 2025
November 12, 2025

Bonds Beyond Borders: Modi's Bhutan Boost and India's Global Welfare Legacy Under PM Modi