During my 13 years as Chief Minister, Gujarat emerged as a shining example of ‘Sabka Saath, Sabka Vikas’: PM
Over 25 crore people have been freed from the clutches of poverty. India has become the fifth largest economy: PM
India’s developmental strides have ensured that our country is being viewed with utmost optimism globally: PM
I will not rest till our collective goal of a Viksit Bharat is realised: PM

அரசின் தலைமை பதவியில் தலைவராக 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

குஜராத் முதலமைச்சராக தாம் பதவி வகித்த காலத்தை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வளத்தை உறுதி செய்ய பாடுபட்டதாக தெரிவித்துள்ளார். 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்பதற்கு குஜராத் ஒரு சிறந்த உதாரணமாக உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிப் போக்குகள், நமது நாட்டை உலக அளவில் மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதை உறுதி செய்துள்ளது என்று கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கூட்டு இலக்கை அடையும் வரை ஓய்வெடுக்கப் போவதில்லை என்றும் ஓய்வின்றி உழைக்கப் போவதாகவும் அவர் மக்களுக்கு உறுதியளித்தார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

 

"நான் ஒரு அரசின் தலைமை பதவியில் தலைவராக 23 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் இந்த நிலையில், ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 2001 அக்டோபர் 07 அன்று நான் குஜராத்தின் முதலமைச்சராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பிஜேபி கட்சி என்னைப் போன்ற ஒரு எளிய தொண்டரிடம் மாநில நிர்வாகத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஒப்படைத்தது எனது கட்சியின் மகத்துவம்.”

"நான் முதல்வராக பதவியேற்றபோது, குஜராத் பல சவால்களை எதிர்கொண்டது.  2001 கட்ச் பூகம்பம், அதற்கு முன்பு ஒரு பெரிய சூறாவளி, மிகப்பெரிய வறட்சி, பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சி, மதவாதம், சாதியவாதம் ஆகியவற்றை எதிர்கொண்டு மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்பட்டு குஜராத்தை மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்பினோம். விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் மாநிலத்தை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்றோம்.

 

"நான் முதலமைச்சராக இருந்த 13 ஆண்டுகளில், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வளத்தை உறுதி செய்யும் 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்பதற்கு குஜராத் ஒரு பிரகாசமான உதாரணமாக உருவெடுத்தது. 2014-ம் ஆண்டில், இந்திய மக்கள் எனது கட்சிக்கு ஒரு சாதனை தீர்ப்பை வழங்கினர், இதன் மூலம் நான் பிரதமராக பணியாற்ற முடிந்தது. இது ஒரு வரலாற்று தருணம், ஏனெனில் 30 ஆண்டுகளில் ஒரு கட்சி முழு பெரும்பான்மையைப் பெற்றது அதுவே முதல் முறையாகும்.”

 

"கடந்த 10 ஆண்டுகளில், நம் நாடு பல சவால்களை எதிர்கொண்டது. எனினும் சவால்களுக்கு இடையில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இது குறிப்பாக நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், புத்தொழில் துறை போன்றவையும் இதற்கு உதவியுள்ளது. கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், பெண் சக்தி, இளைஞர் சக்தி, ஏழைகள், சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு வளத்திற்கான புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன.”

 

"இந்தியாவின் வளர்ச்சி முன்னேற்றங்கள் நம் நாட்டை உலக அளவில் மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதை உறுதி செய்துள்ளன. உலகம் நம்முடன் இணைந்து செயல்படவும், முதலீடு செய்யவும், நமது வெற்றியின் ஒரு பகுதியாக இருக்கவும் ஆர்வமாக உள்ளது. அதே நேரத்தில், பருவநிலை மாற்றம், சுகாதாரத்தை மேம்படுத்துதல், நிலையான வளர்ச்சி இலக்குகளை உணர்ந்து செயல்படுதல் போன்றவற்றில் இந்தியா விரிவாக செயல்பட்டு வருகிறது.”

 

"பல ஆண்டுகளாக நிறைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் செய்ய வேண்டியது அதிகம் உள்ளது. இந்த 23 ஆண்டுகளில் கற்றுக்கொண்ட படிப்பினைகள், தேசிய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடி முன்முயற்சிகளை கொண்டு வர எங்களுக்கு உதவியது. எனது சக இந்தியர்களுக்கு நான் அயராது உழைக்கிறேன். மக்கள் சேவையில் இன்னும் அதிக வீரியத்துடன் உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது கூட்டு இலக்கு நிறைவேறும் வரை நான் ஓய மாட்டேன்.”

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India outpaces global AI adoption: BCG survey

Media Coverage

India outpaces global AI adoption: BCG survey
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 17, 2025
January 17, 2025

Appreciation for PM Modi’s Effort taken to Blend Tradition with Technology to Ensure Holistic Growth