பகிர்ந்து
 
Comments

இத்தாலி பிரதமர் மேதகு மரியோ டிராகி அழைப்பின் பேரில் இத்தாலியின் ரோம் நகர் மற்றும் வாடிகன் நகருக்கு அக்டோபர் 29 முதல் 31ம் தேதி வரை செல்கிறேன். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் மேதகு போரிஸ் ஜான்சன் அழைப்பின் பேரில் இங்கிலாந்துக்கு 2021 நவம்பர் 1ம் தேதி முதல் 2ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறேன்.

ரோமில், ஜி20 தலைவர்களின் 16வது உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறேன். அங்கே ஜி20 தலைவர்களுடன் உலக பொருளாதாரம் மற்றும் பெருந்தொற்றிலிருந்து சுகாதார மீட்பு குறித்த ஆலோசனையில் கலந்து கொள்வேன். 2020ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது முதல், நேரடியாக நடைபெறும் முதல் ஜி-20 உச்சிமாநாடு இது.  இதில்  தற்போதைய உலகளாவிய நிலவரம் குறித்து  ஆய்வு செய்யப்படும் மற்றும் தொற்று சூழலிருந்து நிலையான பொருளாதார மீட்பு நடவடிக்கையை வலுப்படுத்த ஜி20 எவ்வாறு திறம்பட செயல்பட முடியும் என்பது குறித்த கருத்துக்கள் பகிரப்படும்.

எனது இத்தாலி பயணத்தில், போப் பிரான்ஸிஸ் மற்றும் வெளிறவுத்துறை அமைச்சர் கார்டினல் பீட்ரோ பரோலின் ஆகியோரை சந்திக்க வாடிகன் நகருக்கும் செல்லவுள்ளேன்.

ஜி20 உச்சிமாநாட்டுக்கு இடையே, மற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர்களுடன் ஆலோசிக்கவுள்ளேன்.

ஜி20 உச்சிமாநாடு அக்டோபர்  31ம் தேதி முடிவடைந்தபின், பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா அமைப்பின் (யுஎன்எப்சிசிசி) 26வது சிஓபி-26 மாநாட்டில், கலந்து கொள்ள கிளாஸ்கோ செல்லவுள்ளேன். நவம்பர்  1ம் தேதி முதல் 2ம் தேதி வரை நடைபெறும் சிஓபி-26 உலக தலைவர்கள் உச்சிமாநாட்டில் 120 நாடுகளின் தலைவர்களுடன் கலந்துகொள்ளவுள்ளேன்.

இயற்கையுடன் இணைந்து வாழும் நமது பாரம்பரியம் மற்றும் கிரகங்களுக்கு மரியாதை அளிக்கும் கலாச்சாரம் ஆகியவற்றின்படி, தூய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி திறம்பட பயன்படுத்துதல், காடுவளர்ப்பு மற்றும் உயிரி பன்முகத்தன்மை ஆகியவற்றை விரிவுபடுத்தும் லட்சிய நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம். பருவநிலை நடவடிக்கை, தணித்தல் மற்றும் மீட்பு நடவடிக்கை மற்றும் பலதரப்பு கூட்டணிகளை உருவாக்குவதல் போன்றவற்றுக்கு கூட்டு முயற்சியை உருவாக்குவதில் இந்தியா இன்று புதிய சாதனை படைத்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காற்று மற்றும் சூரிய மின்சக்தி திறன் ஆகியவற்றை அமைப்பதில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. உலக தலைவர்கள் உச்சிமாநாட்டில், பருவநிலை நடவடிக்கையில் இந்தியாவின் சிறப்பான சாதனையை நான் பகிர்வேன்.

கார்பன் இடைவெளியை சமஅளவில் பகிர்வது, தணித்தல் மற்றும் பருவநிலை நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நிதிதிரட்டல், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பசுமையான மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு நிலையான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் உட்பட பருவநிலை மாற்ற பிரச்னைகளுக்கு விரிவாக தீர்வு காணும் அவசியத்தை நான் சுட்டிக் காட்டுவேன்.

உறுப்பு நாடுகளின் தலைவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அரசுகளுக்கு இடையேயான அமைப்பு  உட்பட அனைத்து தரப்பினரையும் சந்திக்கவும், நமது சுத்தமான எரிசக்தியை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்களை ஆராயவும் சிஓபி26 மாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும்.

 

20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
India's forex kitty increases by $289 mln to $640.40 bln

Media Coverage

India's forex kitty increases by $289 mln to $640.40 bln
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பகிர்ந்து
 
Comments

Join Live for Mann Ki Baat